Monday, February 11, 2008

"பன்னாட்டு நிறுவனங்கள் தான்டா 'எங்கள் எஜமானர்'கள்" - கமல்நாத் ஒப்புதல்


"ஏகாதிபத்திய திட்டமானாலும் பார்ப்பனீயத்துக்கு எதிராக என்றால் செய்ய மாட்டோம்" - 'அம்பி'கா சோனி


"தமிழகத்தை அன்னியனுக்கு முழுமையாக விற்காமல் ஓயமாட்டேன்" - கருணாநிதி அறிவிப்பு


"மத்திய அரசை கவிழ்க்க எங்க கம்பெனிக்கு அதிகாரம் இல்லை" - கார்ப்பரேட் பார்ட்டி ஆ·ப் இந்தியா (டாடாயிஸ்ட்) திட்டவட்ட அறிவிப்பு


"அடிமைசாசனத்தை இப்பவே நிறைவேற்றுங்கள்" - டேவிட் முல்போர்டு


Sunday, February 10, 2008

"ராமதாஸ் நல்லவர் தாங்க" - மறைந்த அறிஞர் அண்ணா அறிவிப்பு

சேது சமுத்தர திட்டத்தை தொடங்கி வைத்த, ஆதரித்த பாஜக, செயலலிதா போன்ற பார்ப்பன மதவெறி கும்பல் தற்போது ராமன் பாலம் என புராண புரட்டை கொண்டு மதவெறி அரசியலை நடத்தி வருகிறது. இதில் ராமன் குறித்து சிறிது சீறிய கலைஞர் பின்னர் பின் வாங்கினார். அவர் தலைக்கு விலை வைத்தவுடன் தான் திமுக அணிகளுக்கு சுயமரியாதை வந்தது, உடனே அதுவும் அடங்கியது.

ஆனால் ஆரம்பித்தில் இருந்தே இந்த ராமன் பாலம் புரட்டை ஒட்டிய பார்ப்பன மதவெறி கும்பலை, ராமதாஸ் உள்பட்ட எந்த ஓட்டுப்பொறுக்கியும் கண்டிக்க வில்லை.

சேது கால்வாய் என்பது பன்னாட்டு நிறுவனத்தின் லாபத்திற்கானது என்பது வெள்ளிடைமலை. ஆனால் பார்ப்பன பயங்கரவாதிகளின் ராமனுக்கு சாவுமணி அடிக்கும் என்பதில் இதனை நிறைவேற்றனும் என "ராமன் பாலம் என்பது புராண புரட்டு, பார்ப்பன மதவெறி கும்பலை விரட்டு" என்று தமிழகம் முழுவதும் ம.க.இ.க வும் அதன் தோழமை அமைப்புகளும் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் தான் பார்ப்பன மதவெறி எதிரான பிரச்சாரத்தை வீச்சாக எடுத்து சென்றது.

இன்று ஓட்டுப்பொறுக்கிகள் உள்ளிட்ட ஏகாதிபத்திய தாசர்கள் சேதுகால்வாயினை மாற்று வழியில் நிறைவேற்றினாலும் சரிதான் என பார்ப்பன புரட்டுக்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி கூறியவர்களில் 'ராமதாஸை' மற்றொரு ஏகாதிபத்திய அருவருடி 'வீரமணி' அவர்கள் கண்டித்து அறிக்கை விட்டார்.

இதில் "வீரமணிக்கு இதற்கு எந்த அருகதையும் இல்லை எனவும், அவருக்கு பதில் அளித்தும் தமிழ் ஓசையில் வந்த கட்டுரை"யினை கேள்விக்குள்ளாக்கியே இந்த பதிவு.

வீரமணிக்கு 'அருகதை' பற்றி உண்மையினை கட்டுரையில் சொல்லவில்லை என்பதால் அதனை முதலில் சொல்லிவிடுவோம்.

ஐயா வீரமணி அவர்கள் "பெரியார் புரா" என்ற அரசு சாரா நிறுவனத்தை ஆரம்பித்து மக்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக திரும்ப விடாமல் வேலைசெய்கின்ற - தலைமை என்.ஜி.ஒ வை நடத்துபவர். அரசியலில் கலைஞருடன் கூட்டு (தற்போது), தொழிலில் சசிகலா மருத்துவமனையுடன் கூட்டு என இரட்டை வேடம் போடுபவர். மேலும் "வாழ்வியல் சிந்தனைகள்" என "பணம் படைத்தவனுக்கு தான் இந்த உலகம், இல்லாதவன் இருப்பதை கொண்டு திருப்தி அடைய வேண்டும்" போன்ற அயோக்கியத்தனமான கருத்துகளை எழுதி தள்ளுபவர். மொத்தத்தில் பெரியார் என்ற சுயமரியாதைக்காரின் பெயரை வைத்துகொண்டு வியாபாரம் செய்துவரும் வியாபாரி.

ஆனால் இப்படி உண்மைகளில் ஒன்றைக்கூட சொல்லவில்லை தமிழ் ஓசை கட்டுரை. அதில் இரண்டு பதில்களை மட்டும் கொடுத்து உள்ளார்கள்.

ஒன்று தினமும் அறிவுரை சொல்வது தவறு என்பதற்கு, அது "ஜனநாயக கடமை" எனவும், தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி (சந்தர்ப்பவாதம்) மாறியவர் என்பதற்கு, "தேர்தல் நேரத்தில் கூட்டணி மாறலாம், அதனால் இலட்சியம் திசைமாறுவதாக கருதக் கூடாது என அண்ணாவே கூறியுள்ளார்" என அண்ணாவின் உரைகளை எடுத்து போட்டு இங்கு போலிக் கம்யூனிஸ்டுகளிலிருந்து யாருமே யோக்கியம் இல்லை ஆனா, பாமக வை மட்டும் குறைகூறுவது எப்படி?. மேலும் மக்களே இந்த குற்றசாட்டை ஏற்கனவே புறக்கணித்து விட்டார்கள் எனவும் அடித்து சொல்லி உள்ளார்கள்".

இப்ப பதில்களை அலசுவோம்:

அரசின் மக்கள்விரோத கொள்கையினால் மக்கள் அன்றாடம் செத்துகொண்டுவருகிறார்கள், ஆனால் நீங்க தைலாபுரம் தோட்டத்தில் உட்கார்த்து கருத்து சொல்லிவிட்டு அரசை ஆதரித்து நிற்கும் அயோக்கியத்தை எப்படீங்க ஏத்துகொள்ள வைக்க முற்படுகிறீர்கள். அந்த மக்கள் விரோத கொள்கையின் அடிப்படையான உலகமயம், தனியார்மயம், தாராளமயம் குறித்து உங்கள் கருத்தை வெளிப்படையாக சொல்ல முடியமா?. உங்களிலிருந்து சரத், விசயகாந்த, போலிகள் வரை எல்லோரும் இந்த கொள்கையினை ஏற்றுகொண்டவர்கள் தான். பின்னர் எப்படீங்க மக்கள் நலன், மக்கள் தொலைக்காட்சி என உதார்விடுகிறீர்கள்...

அடுத்து அண்ணா மேற்கோளை போட்டு கூட்டணியினை நியாயப்படுத்தியுள்ளது. ஏங்க, 'அண்ணா' என்ன யோக்கிய சிகாமணியா, அவர் சொன்னா அது நியாயமாகிவிடுமா?. முதலில் அவரையே நியாயப்படுத்த முடியாது என்பதே நிதர்சனம். திமுக எப்படி உருவானது என வரலாறு தெரியாதவங்க யாராவது இருந்தா அவங்க வேணா நம்பலாம். நீ கூட்டணி மாறிய பச்சைவோந்தி என்றால் அதற்கு, யார் தான் இங்க யோக்கியம் என கேள்வி எழுப்பி நியாயப்படுத்த முற்படுவது என்னையா நியாயம். அரசியல்வாதி என்றாலே கொலை, ஊழல் செய்வது இயற்கைதான் என்பதுபோல கூட்டணி என்ற சந்தர்ப்பவாதத்தை ஓட்டுபொறுக்கிகளின் இயல்பான ஒன்றாக நியாயப்படுத்த பார்க்கின்றீர்கள்.

மொத்தத்தில் கலைஞர், வீரமணி, ராமதாஸ் என யாருமே பார்ப்பன மதவெறி கும்பலை எதிர்கொள்ளவோ, மறுகாலனியாதிக்கத்தை எதிர்க்கவோ முடியாது. ஏனெனில் இதில் சமரசம் செய்து தான் தங்கள் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்தனர்.

அத்தியாவசிய பொருட்கள் குறித்து கவலைபடும் 'குடி'மக்கள் நாங்கதான் - ஜெ&கலைஞர்

பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தால் மக்கள் அவதிப்படாமல் இருக்க நியாய விலை கடைகளில் இதனை 6 மாதங்களாக வழங்குவதை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உள்ளதாக சட்டபேரவையில் கலைஞர் அறிவித்தார்.

இவ்வாறு பொருட்கள் வழங்கவில்லை என்பதே உண்மை. இதனை தற்போது 'புரட்சி தலைவி' செயலலிதா குற்றசாட்டை படித்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் மக்கள் இல்லை.

விசயத்துக்கு வருவோம்....

6 மாதங்களுக்கு முன் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைவாக இருந்ததாகவும், இன்னும் 6 மாதங்களில் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைந்துவிடும் எனவும் போல இருக்கிறது கலைஞரின் அறிவிப்பு. வாங்கும் சக்தி இல்லாமல் மக்கள் பசி,பட்டினிக்கு ஆளாகி கொண்டுவரும் நிலையில் எப்படி கதை விடுகிறார் பாருங்க. பொருட்கள் வழங்கவே இல்லை என்கிற போது அது எதுக்கு 6 மாதம் என கதை அளப்பது, பேசாம தொடர்ந்து கொடுப்போம் என கூட சொல்லவேண்டியது தானே. அவ்வாறு சொல்ல இவர்களால் முடியாது !

நியாயவிலை கடைகளில் இவ்வாறு பொருட்களை வழங்கும் அதிகாரம் இவர்களுக்கு இல்லை. உலக வங்கியிடமே உள்ளது இந்த அதிகாரம். அவன் கடையையே முட சொல்லி வரும் போது இதனை யோசிக்க கூட முடியாது. இதுல இன்னொரு ஓட்டுபொறுக்கி கழிசடை விசயகாந்த் என்னான்னா இந்த குறைந்தபட்ச அரசியல் கூட தெரியாமல் நான் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கே வந்து பொருட்கள் கொடுப்பேன் என கதைவிடுகிறது.

அத்தியாவசிய பொருட்கள் குறித்து கவலைப்படும் இவர்கள் யோக்கியதைக்கு ஒரு சான்று:-

மக்களை சிந்தனையினை மழுங்கடிக்கும் மதுக்கடையினை தமிழகத்தில் கொண்டு வந்த பெருமை 'முத்தமிழ்' கலைஞரை சாரும் என்றால் கடைகளை அதிகமாக்கி அரசே ஏற்று நடத்தும்படி செய்த பெருமை 'டாஸ்மாக்' செயலலிதாவை சாரும். அடுத்து மத்திய அமைச்சரவையில் பங்கு பெற்றுக்கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்து ஊதும் ராமதாஸ் குடும்பம் இது குறித்து பேசுவது ஓட்டுபொறுக்கி அரசியலில் தன்னை மாற்றாக காண்பிக்கதான். மற்றபடி இவர்கள் அனைவரும் உலகவங்கி ஆணைக்கு கட்டுபடும் அருவருடிகள் தான்.

"தமிழனை அழிப்பவன் தான் தமிழன்" - கலைஞர் பேச்சு

2 ரூபாய்க்கு அரிசி வாங்கித்தான் 'வாழ முடியும்' என தமிழனை ஆக்கியதில், செயலலிதாவை விட 5வது முறையாக முதலமைச்சராக இருக்கின்ற கருணாநிதிக்கு தமிழனை அழித்த 'பெருமை' உண்டு என்பதே நிதர்சனம்.

செயலலிதா தினமும் 20 மணி நேரம் "தமிழனை அழிக்க" பணியாற்றியதை மெச்சிய வீரமணி, சரத்குமார் போன்றோர் கூட கலைஞர் அவர்கள் தினமும் 4 மணிக்கு எழுந்து இதே பணியினை ஆற்றுவதை மறுக்க முடியாது.

இப்படி இவர்கள் அழித்த தமிழனை நாடெங்கும் வீதிகளில் காணலாம். ஆனால் ஓட்டுபொறுக்கிகளால் தான் பார்க்க முடியாது, ஏன்னா இவர்கள் தான் காரின் ஜன்னல்களை இறக்குவதே கிடையாதே.

அரசு 'டாஸ்மாக் கடை'யில் மட்டும் கூட்டம் இல்லைங்க, தனியார் 'கல்வி கடையிலும்' தான்!

சாந்தோம் பகுதியில் ஒரு கல்வி வியாபாரக் கடையில் எல்.கே.ஜி சீட் விற்பனை அறிவிப்பை தொடர்ந்து அலைமோதும் நடுத்தர வர்க்கம்.

மருத்துவ சேவையினை வியாபாரமாக மாற்றிய ஓட்டுப்பொறுக்கிகளின் அதிரடி நடவடிக்கை!

"சிறுநீரக கோளாரை விட சிறுநீரகத்தையே திருடுவதால் மக்களை சீக்கிரம் கொன்றுவிடலாம்"

  • இணைப்புகள்

  •