Friday, February 8, 2008

"நாங்க மக்கள் விரோதிகள் தான்" - திமுக, அதிமுக ஒப்புதல் வாக்குமூலம்


விஜயாந்த், சரத்குமார் போன்ற புதிய ஓட்டுபொறுக்கி அரசியல் வாதிகள் கோடிக்கணக்கான ரூபாய் வாரி இறைத்து மக்களை கொள்ளையிட தயாராகிவருகின்றனர் என்றால் இதுலேயே பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் என்ன செய்வார்கள் என அரசியல் தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ள முடியும்.

இதுல புதிய விஷயம் என்னவென்றால், தமிழ் புத்தாண்டு தினத்தை அறிவித்த கலைஞருக்கு பாராட்டு விழா பிப் 9 நடக்கவிருக்கிறது இதற்காக வள்ளுவர்கோட்டம் ஒரு வாரமாக விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சென்னை மற்ற இடங்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதனை நம்ம 'புரட்சி' தலைவி அப்பாவியாக கண்டித்து உள்ளது தான் ஹைலெட். அடிதடி, ஊழல் எதுவானாலும் காமராஜர், அண்ணா இருந்து அனைவரும் செய்துவரும் நிகழ்வானாலும் இவர்கள் இதனை கண்டிக்கும் போது வராத நகைசுவை செயலலிதா கண்டிக்கும் போது வருகிறது. அந்த அளவுக்கு வெளிப்படையாக ஆட்டம் போட்ட நடிகை இவர்.

வளர்ப்பு மகன் திருமணம் உள்பட செயலலிதா செய்யாததா என மக்கள் இப்ப கேட்ட அதில் அர்த்தம் இருக்கும்.இதனையே எதிர்கேள்வியாக ஜெவுக்கு ஆற்காட்டார் கேட்கிறார்.
..
இந்த இரண்டு ஓட்டுபொறுக்கிகளும் நாங்க யார் என மக்களுக்கு அறிவிக்கின்றனர். மக்களும் இவர்கள் அனைவரையும் இணைத்து பார்த்து புரிந்து கொள்ளாமல் அவர்களின் சாதுரிய அறிக்கைகளை ரசிக்க பயிற்றுவிக்கப்பட்டு வருகிறார்கள்.

திறந்தவெளி பல்கலைகழகம் காசு சம்பாதிக்கதான் - அரசின் உறுப்பு அறிவிப்பு !

எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியின் முதல்வராக இளக்கலை பட்டம் பெறாமல் முதுநிலை பட்டம் பெற்ற ரமேஷ் அவர்களை நியமித்தது தவறு. உடனே அவரை பதவி விலக செய்து புதிய 12ம் பகுப்பு படித்து பட்டம் பெற்ற அறிவாளியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் நேரடி பட்டம் எதுவும் வேலை வாய்ப்புகளுக்கு தகுதியானதல்ல என தனது தீர்ப்பு-ல் கூறியுள்ளது. இதுவும் முதலில் வழக்கு வந்தவுடன் தள்ளுபடி செய்த நீதிமான்கள், பின்னர் உச்சநீதிமன்ற ஆணைக்கு பின் தன் கடமையினை செய்து (அ)நீதியை நிலைநாட்டியுள்ளது.

சரி விஷயத்துக்கு வருவோம்.

12ம் வகுப்பு வரை படிக்காமல் நேரடி பட்டம் பெறுவது வேலை வாய்ப்புக்கு தகுதியானதல்ல என்றால்.... என்ன புடுங்குவதற்கு அதனை வைத்து உள்ளீர்கள். மக்களின் அறிவை வளர்ப்பதற்கு என கதை விட்டுவிடாதீர்கள்.
..
12ம் வகுப்பு, பட்டங்கள் என உங்கள் அனைத்து கல்வி முறையும் அறிவியல் விரோதமானது என்பது வெட்டவெளிச்சம். வெந்தது,வேகாதது, அரைகுறை ஆங்கிலம் என அரைத்து கொண்டு, பன்னாட்டு பல்கலைகழகங்களுடன் கூட்டு சேர்ந்து அவனுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கும் ஏஜெண்டாக தான் செயல்படுகிறது உங்கள் கல்வி முறை. 80% மேல் தனியாரின் கைகளுக்கு கொடுத்துவிட்டீர்கள்.

1950-ல் இன்னும் பத்து ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி என சூளுரைத்தவர்கள் இதனை, 60 ஆண்டுகளாகியும் நிறைவேற்ற முடியவில்லை. படிப்பை பாதியில் விட்டவர்கள், பள்ளிக்கே செல்லாதவர்களில் சிலர் இந்த நேரடி பட்டம் முடிக்கின்றனர். இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய இதே அரசுதான் 'வேலைவாய்ப்புகானது அல்ல நேரடி பட்டம்' என அறிவிக்கிறது.


"வேலைவாய்ப்பு கிடைக்கும்"- காங், திமுக, பாஜக விலிருந்து போலிகள் வரை விடுக்கும் ஒரே புருடா இதுதான்!

நெப்போலியன் என்ற திடீர் பணக்கார அரசியல் ரவுடி புதிதாக ஆரம்பித்துள்ள ஜீவன் டெக்னாலஜிஸின் கட்டிடத்தை திறந்து வைக்கும் போது கலைஞர் நாட்டை 19 மாதங்களில் எத்தனை கம்பெனிகளுக்கு கூட்டுகொடுத்தோம், காலையில கூட சில ஒப்பதங்கள் போட்டுவிட்டு தான் வந்து உங்கள் முன் அமர்ந்து உள்ளேன் என தனது துரோகத்தை 'மக்கள் நலன்' என கட்டுரை வாசித்தார்.

ஆனால் ஏன், நாட்டை பன்னாட்டு கம்பெனிகளுக்கும் தரகு முதலாளிகளுக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதற்கு உண்மையான காரணத்தை எந்த ஓட்டுபொறுக்கி அரசியல்வாதியும் கூறமாட்டான்.இவனுங்களாகவே வேலைவாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும் என அறிவித்துவிடுகிறார்கள். அதற்கும் மீறி நந்திகிராம் போன்ற போராட்ட மக்களை எதிர்கொள்ளும் போது இதே கதையை தான் அளிக்கின்றனர்.

எதற்கெடுத்தாலும் வேலைவாய்ப்பு என நாட்டின் அனைத்து வளங்களையும் தாரை வார்க்கும் இவர்களை மக்கள் அறிந்து கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை.

அதிகாரத்தை கொடுங்கடா நாங்க பார்த்துகொள்கிறோம், வேலை வாய்ப்பு என்ற பெயரில் நாட்டை ஏன்டா பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாக்குறீங்க என மக்கள் மார்க்சிய - லெனினிய பாதையில் அணிவகுக்கும் போது இந்த அருவருடி கூட்டம் கொல்லைப்புறம் வழியாக ஓடிக்கொண்டு இருக்கும்.

ஓட்டுபொறுக்கி அரசியலுக்கு நான் புதிவன் அல்ல ! - சரத் குமார்

Related:

நாங்க தான் அமைச்சரவையில் முடிவு எடுத்தோம், இப்ப போராட்டம் என நடிக்குறோம் - ராமதாஸ் சவால்


மலையளவு பன்னாட்டு கம்பெனிகள் குவிந்தாலும் நான் சமாளிப்பேன் - கலைஞர் கலக்கல் பேட்டி



Friday, February 1, 2008

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!


நன்றி லேமூரியன்

அதாவது நாங்க ஒரு ஆள்தான் பார்ப்ப்னியத்த எதிர்க்குறோம், நாங்கதான் உண்மையான பார்ப்பன எதிர்ப்பாளர்கள் அப்படின்னெல்லாம் மார் தட்டிக் கொண்டு அலைஞ்சவங்க எல்லாம் இப்போ பார்ப்ப்னியம் மேலே ஏறி நின்னு அடிக்கும் போது எங்கியோ போய் ஒளிஞ்சுக்கிட்டாங்க. அது தனிக் கதை.



இப்போ விசயம் என்னன்னா, பார்ப்பனியத்தோட அடியாள் படை, ரவுடி, கழிசடை கும்பல் துப்பாக்கியோட மத்திய பிரதேசத்துல ஊர்வலம் போயிருக்கானுங்க. அது 30ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரசில் செய்தியா வந்திருக்கு. இதே RSS கும்பலோட அல்லக்கை அமைப்பான பஜ்ரங்தள் ஆளுங்க 2007 ஆரம்பத்தில் மஹாராஸ்டிர நாண்டட்டில் குண்டு தயாரிக்கும் போது வெடித்து மாட்டிக்கிட்டாங்க. அப்பொதான் RSS நாக்பூர் ஆபிசுக்கு குண்டு வைச்சது, வெறு சில மசூதிகளில் குண்டு வெச்சது எல்லாம் இவந்தான்னு தெரிஞ்சது. குண்டு வைச்சிட்டு பலிய முஸ்லீம் மேல போட வசதியா முஸ்லீம் குல்லா முதலான தயாரிப்புகளோட நாண்டட்டில் மாட்டிக்கிட்டாங்க.



இது தவிர்த்து சாஹா பயிற்சி முகாம்களில் துப்பாக்கி பயிற்சி எடுப்பது குறித்து பத்திரிக்கைகளில் படங்களுடன் செய்திகள் வந்தது. இதற்க்கெல்லாம் சிகரம் வைச்ச மாதிரி, குஜராத கலவரத்தில் ராக்கெட் லாஞ்சர் டைப் வெடிகுண்டுகள் பயன்படுத்தியதாக தெஹல்கா விடியோவில் பேசினான் ஒரு எம்.எல்.ஏ. இப்போ போதாக்குறைக்கு RSS கும்பல் IT துறையில் வேறு நேரடியாக நுழைந்துவிட்டது.



இப்படி ஒரு அதி பயங்கரவாத கும்பாலா இருந்தாக் கூட இவனுக்கு இந்த அரசு எல்லா பாதுகாப்பும் வழங்கும். ஏன்னா இந்த அரசே ஒரு பார்ப்பனிய அரசுதான். இது தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறாங்க சில பார்ப்பன எதிர்ப்பாளர்கள். அவிங்கள் நினைச்சாதான் பாவமா இருக்கு.



பார்ப்பினியம் தெளிவாக உள்ளது, இந்த அரசாங்க அமைப்பை நம்பி தனது செய்ல்பாடுகள் இல்லை என்பதில். மாறாக இந்த அரசின் இயல்பில்தான் தனது பலத்திற்க்கான ஊற்று மூலம் உள்ளது என்பது அதற்க்கு தெளிவாக தெரிந்த காரணத்தினால்தான் அரசாங்கம் அமைக்கும் விசயத்தில் ஏற்ப்படும் பின்னடைவுகளை அது பொருட்படுத்துவதில்லை.



ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் இந்தியாவில் பார்ப்னியத்தை வீதிகளில் சந்தித்து அடிக்காத வரை பார்ப்பனியத்துக்கு கவலையில்ல.



செய்திரசம்



Related Articles:

“குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்”
இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் …
பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும…

இந்தியர்கள் வாழ்க்கையை ஒட்டுவது வெறும் 12 ரூபாயில்..!!!



டெல்லி: பெரும் எண்ணிக்கையிலான நகர் பகுதி இந்தியர்கள் ஒரு நாளைக்கு வெறும் 19 ரூபாயில் தான் வாழ்க்கையை ஒட்டுகின்றனர் என தேசிய அளவிலான ஆய்வு தெரிவிக்கிறது.

நகர்ப் பகுதிகளில் இது 12 ரூபாயாக உள்ளது.கிராமப் பகுதிகளில் 19 சதவீத மக்கள் உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் ஒரு நாளைக்கு வெறும் ரூ. 12 மட்டுமே செலவிடும் பொருளாதார நிலையில் உள்ளனர்.

நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 22 சதவீதம் பேர் ரூ. 19 மட்டுமே செலவிடும் நிலையில் உள்ளனர்.தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் (National Sample Survey Organisation) 2005-06ம் ஆண்டு நடத்திய ஆய்வு இந்த விவரங்களைத் தெரிவிக்கிறது.கிராமப் பகுதிகளில் சராசரி இந்தியர்கள் செலவிடும் ஒவ்வொரு ரூபாயிலும் 53 பைசா உணவுக்கே செல்கிறது.

நகர் பகுதிகளில் இது 40 பைசாவாக உள்ளது.ஒரு பக்கம் பங்குச் சந்தையில் குறியீட்டு எண் பாய்கிறது, சரிகிறது. இன்னொரு பக்கம் இந்தியா 9 சதவீத வளர்ச்சி அடைந்து வருகிறது என்று மத்திய அரசு கோஷம் போடுகிறது.

ஆனால், நாட்டில் கிட்டத்தட்ட கால்வாசி மக்கள் 'அரை டாலர்' வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


http://thatstamil.oneindia.in/news/2008/02/01/india-substantial-no-of-indians-spend-less-20.html


Related:
..

  • இணைப்புகள்

  •