Thursday, January 31, 2008

"ஆங்கிலேயனுக்கு அடியாலாக இருந்த தேச துரோகியின் அஸ்தி கரைப்பு"

மும்பை: மகாத்மா காந்தியின் கடைசி அஸ்திக் கலசம் இன்று அரபிக் கடலில் கரைக்கப்படுகிறது.மகாத்மா காந்தி, 1948ம் ஆண்டு, ஜனவரி 30ம் தேதி டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று அவரது 60வது ஆண்டு நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.காந்தியின் மறைவுக்குப் பின்னர் அவரது அஸ்தி நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆறுகள், நதிகளில் கரைக்கப்பட்டன.
....
வெள்ளைக்காரனுக்கு வேலை செய்து நாட்டை காட்டி கொடுத்த துரோகி 'காந்தி'. ஆனா திட்டமிட்டு மூடிமறைத்து ஆளும் வர்க்கம் அவரை தேச தந்தையாக காட்டுகிறது. ஆனால் 60 ஆண்டுகால சுதந்திரத்தின் யோக்கிதை என்னவென்றும், நாடு வளரும் என்று மண்மோகன், சிதம்பரம் என அருவருடிகள் இன்னும் புருடா விடுவதில் இருந்து ஒப்பிட்டு பார்த்து தெரிந்து கொள்ளனும், எவனுக்கு ஆதர்வாக காந்தி செயல்பட்டார் என.

இதற்கு பகத்சிங் பார்வையில் அணுக வேண்டும். இதேபோல காந்தியின் இந்து மதவெறியினை கண்டுகொள்ள பெரியாரையும், அம்பேத்காரையும் படிக்க வேண்டும். அப்போது தான் இன்று நாடு மறுகாலனியாக்கப்படுவதற்கும், இந்து பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுவதற்கும் 'காந்தி செய்த வேலை'யினை தெரிந்து கொள்ள முடியும்.
.

Wednesday, January 30, 2008

"கழிப்பறை கட்டமாட்டோம், ஆனா ரோட்டில 'பிஷ்' அடிச்ச பிடிப்போம்" - ரிப்பன் மாளிகை அதிரடி

சென்னை மட்டுமல்ல, நாடு முழுவதும் பொது இடங்களில் கழிப்பறை என்பதே கட்டிக் கொடுக்கப்படவில்லை. இப்படி கழிப்பறையினை கட்டிக்கொடுக்காமல், மக்கள் சாலைஓரமாக சிறுநீர் கழித்தால் ரூ100 அபராதம் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. அதே போல மக்கின குப்பை, மக்காத குப்பை என பிரித்து கொடுக்காத சென்னை வீட்டு மக்களிடம் அபராதமாக ரூ 100ம், மருந்து சம்பந்தமான குப்பையினை சரியாக பிரிக்காதவர்களுக்கு அபராதமாக ரூ 500ம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


95% கழிப்பறைகளே இல்லை. மீறி இருந்தாலும் கட்டணக்கழிப்பறை என, சிறுநீர் கழிப்பதற்கே இரண்டு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அரிசியே இரண்டு ரூபாய்க்கு விற்றால்தான், மக்கள் வாங்க முடியும் & வாழ முடியும் என்ற நாட்டில் தான், 'பிஷ்' அடிப்பதற்கு இரண்டு ரூபாய் எனபதும், சாலை ஓரமாக அடிப்பவர்களுக்கு அபராதமாக 100 ரூபாய் என அறிவித்து உள்ளனர் என்பதை பொருத்தி - இந்த செய்திகளை பார்க்கும் போது தான் 'ஓட்டுப்பொறுக்கி அரசியலை' புரிந்து கொள்ள முடியும்.

"உலக நாட்டு மக்களை அழிக்கும் வரிசையில் அடுத்து ஈரான்" - போர்வெறியன் புஷ் அறிவிப்பு

அணுஆயுத தயாரிப்பை நிறுத்தாவிட்டால் ஈரான் மீது போர் தொடுப்போம் என புஷ் எச்சரிக்கை விடுத்து உள்ளான். உலகில் அணுஆயுதத்தினை முதல் முதலில் பயன்படுத்தி ஜப்பானில் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தது தான் இந்த அமெரிக்கா. அடுத்தடுத்து மூன்றாம் உலக நாடுகள், எண்ணெய் வளங்கள் உள்ள நாடுகள் மீது போர் தொடுத்து கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்தது அமெரிக்கா. இதில் சமீபத்தில் ஈராக்கில் அணுஆயுதம் இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்து அந்த நாட்டை கபளிகரம் செய்தது.

இதனுடைய தொடர்ச்சியாக தான் தற்போது அடுத்த குறியாக ஈரானை தேர்தெடுத்து உள்ளான் அமெரிக்க போர்வெறியன் புஷ்.

"மக்கள் மூளைகளை மழுங்கடிக்கும் சாராயக்கடைகள்" - இந்தியாவில் தமிழகத்திற்கு 3வது இடம்

இன்று நாட்டை மீண்டும் காலனியாக்கப்படுவது வெகு விரைவாக நடந்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கு இந்திய அருவருடிகள் இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டு வருகின்றனர். இதனை மக்கள் உணராதபடி (அதாவது நாடு அடிமையாகி கொண்டுவருவதை) இருக்க கல்வி நிறுவனங்கள், மத நிறுவனங்கள் போன்றவற்றின் மூலம் இந்த மறுகாலனியாதிக்கத்தை ஆதரித்தும், இதனை மக்கள் தானே ஏற்றுகொள்ளுமாறும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது; கலாச்சார சிரழிவுகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இவற்றுடன் மக்களின் சிந்தனையினையே மழுங்கடிக்கும் வகையில் சாராயக் கடைகள் நடத்தப்படுகிறது.


இந்தியாவில் காந்தி என்ற ஆங்கிலேயனின் அடியாளின் நினைவாக குஜராத்தில் மட்டும் (அங்கு 'கள்ளச்சாராயகம்' என்ற ஆறே ஓடுகிறது) மதுவிலக்கு அமல் செய்துவிட்டு மற்ற பகுதிகளில் சாராய வியாபாரம் வெகு விமர்சியாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் சாராடக்கடைகளை அரசே ஏற்று நடத்தி சாதனை படைத்துவிட்டது. இப்போது இன்னொரு சாதனையாக சாராய விற்பனையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை எட்டியுள்ளது.


நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பதில், தமிழகத்தில் தினமும் ஒரு பன்னாட்டு கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்து உழைத்து வரும் கலைஞர் அவர்கள், சாராய விற்பனையில் சாதனை படைத்து உள்ளார் என்பதை பொருத்தி பார்க்க வேண்டும். அதாவது மக்கள் சிந்தனையினை மழுங்கடிப்பதன் மூலமே உலகமயமாக்கலை விரைவாக அமல்செய்ய முடியும்.அதில் சாராயத்தை பங்கை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்து உள்ளனர்.


இதேவேளையில் சாராயத்தை எதிர்க்கும் பாமக, மந்தியிலும் மாநிலத்திலும் கூட்டணி வைத்துக்கொண்டு அதன் உலகமயமாக்கல் கொள்கையினை ஆதரித்து வருகிறது. மக்களை பசி,பட்டினிக்கு ஆளாக்கும் மக்கள் விரோத கொள்கையான உலகமயமாக்கலை எதிர்க்காமல் 'சாராயத்தை எதிர்க்கிறோம், தமிழை பாதுகாப்போம்' என இது போன்ற எதிர்கால கலைஞர்களும் (ராமதாஸ்), ஜெயலலிதாக்களும் (விசயகாந்த்) கதை அளந்து வருகின்றனர். மீண்டும் புதிய அருவருடிகளிடம் நாட்டை ஒப்படைப்பதால் ஒரு விமோசனம் இல்லை என்பதை மக்கள் உணரும் போதுதான் இதனை முடிவுக்கு கொண்டு வரமுடியும்.


"மக்கள் உயிரினை அழிப்பவனுக்கே தண்டனை கொடுக்காத நாட்டில் உடல் உறுப்பினை திருடுபவனுக்கு என்ன தண்டனை கொடுக்க முடியும் இவர்களால்"

Tuesday, January 29, 2008

"தனியார் என்றாலே லாபநோக்கமாகத்தான் செயல்படுவான் என தெரியாது" - அமைச்சர் அன்பழகன் சுற்றும் 'பூ'

தமிழ்நாட்டில் கல்லூரிகள் வணிக நோக்கத்துடன் செயல்படுவது கவலையளிப்பதாக நிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். இவ்வாறு அரசு கல்லூரிகளை குறைத்து, தனியார் கல்லூரிகளையும் மிக அதிகமாக கொண்டு வந்ததே இவர்களை போன்ற ஆட்சியாளர்கள் தான்.

இப்படி கவலைப்படும் அமைச்சர் குறைந்தபட்சம் அதிககட்டணம் வாங்கியதில் பிடிபட்ட( விசயகாந்த், ஜேபியார் உள்பட) கல்லூரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துயுள்ளார் என்றால் ஒன்றும் இல்லை. இவ்வாறு உண்மை நிலையினை மறைத்துவிட்டு 'கவலையளிப்பதாக' மக்கள் காதில் பூ சுற்றுகிறார்.

Monday, January 28, 2008

நீங்க நல்லவரா, கெட்டவரா? அ.(மெரிக்க) மார்க்ஸ்

நாயகன் படத்தில் ஒரு வசனத்தை கேட்டிருப்போம், குழந்தை கமலைப் பார்த்து "நீங்க நல்லவரா? கெட்டவரா?" எனக் கேட்கும் அதற்கு பதில் சொல்ல முடியாமல் நா தழுதழுத்து துடித்து சொல்வார் கமல், "தெரியலையே"


குழந்தை ரவுடியை இனங்காண்பதில் புரிதல் இல்லாததால் கேட்ட கேள்வி அது. ஆனால் இந்த அந்தோணிசாமி மார்க்சுகளின் கேள்விகள் நமக்கு தெளிவான புரிதலை ஏற்படுத்துகிறது.


'தீராநதி ஜனவரி'யில் இதழில் அ.மார்க்ஸ் அவர்கள், கனிமொழி 123 ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து பேசியதை கடிந்து கொள்ளும் போது இறுதியில் ஒரு கேள்வியினை போடுகிறார் பின்வருமாறு "எல்லாம் சரி, இதுதான் திமுகவின் கொள்கையா?"


இதேபோல 'த சண்டே இந்தியன் இதழில்' அ.மார்க்ஸ் அவர்கள், திமுக வின் பலமும், பலவீனமும் என்ற கட்டுரையின் இறுதியில் இப்படி முடிக்கிறார்; "இன்று உலகமய சூழலில் மேலெழும் பொருளாதாரப் பிரச்சினைகள் கணக்கில் கொள்ளாமல் ஆதரிக்கும் நிலைப்பாட்டை திமுக எடுப்பது போல தோன்றுகிறது"


ஐயா அ.மார்க்ஸ் அவர்களே,


கனிமொழி வார்த்தைக்கு வார்த்தை "இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை எங்க கட்சி ஆதரிக்கிறது, எங்க தலைவர் கலைஞர் அவர்களும் ஆதரிக்கிறார்" என கூறிப்பிட்டு உள்ளார். இவ்வாறு கனிமொழி என்ற 'அருவருடி ' ஒப்புதல் வாக்குமூலமாக தந்த பின்னும் , உங்களுக்கு "எல்லாம் சரி, இதுதான் திமுகவின் கொள்கையா?" என கேள்வி வருகிறது என்றால் என்ன அர்த்தம்?. மக்களை இப்படி நீங்க நல்லவரா, கெட்டவரா என கேள்வி கேட்கும் அளவிலேயே வைத்திருக்க விரும்பும் கூட்டத்தை சேர்ந்தவர் நீங்கள் என்பது தான்.


அடுத்து "உலகமயமாக்கலை அப்படியே திமுக ஆதரிப்பது போல தோன்றுகிறது" என வினா தொடுக்கிறீர்கள், என்ன கேள்வி இது. அண்ணாவே காசு சம்பாதிக்கும் என்ற காரணத்தால தான் திக விலிருந்து வந்து திமுகவை ஆரம்பித்தார். அடுத்து கலைஞர் அதை கைப்பற்றி (திமுக முன்னணியில் இருந்த தலைவர் அல்ல கலைஞர்) இன்று தனது குடும்ப சொத்தாக மாற்றி, 5 முறை முதல்வராக இருந்து கிட்டதட்ட 80,000 கோடிகளுக்கு மேல சேர்த்துவிட்டார்.(மாறன் பிரிவுக்கு முன் மதிப்பு) உலகமயமாக்கலை தான் நாட்டோட வளர்ச்சிக்கு என காங்கிரஸ், பாஜக வரை ஆதரிப்பது போல கலைஞரும் தன் கொள்கையாக எடுத்து நடைமுறைபடுத்தி வருகிறார். இப்ப 2007 வந்து "தோன்றுகிறது" என்றால் என்ன அர்த்தம்.


என்ன வெங்காயம் தோன்றுகிறது. அப்பட்டமாக அறிவித்துவிட்டார்கள் படுத்தால் அமெரிக்காவுக்குதான் படுப்போம் என்று பிறகு இப்படி தோன்றுவது ஏகாதிபத்திய அருவருடிகளை காப்பதற்காக எழுந்ததாகவே இருக்க முடியும்.


உலகமயமாக்கலையும், இந்துமத பாசிசத்தையும் பற்றி எழுதும் நீங்கள் தான் இப்படி திமுக குறித்து சந்தேகங்களையும், காந்தி குறித்து சந்தேகங்களையும் எழுப்பி அவர்களை நியாயப்படுத்த முற்படுகிறீர்கள். எதிரியினை குறித்து குழப்பத்தினை விளைவிக்கும் இது போன்ற பிரச்சாரம் ரெம்ப காலத்திற்கு நீடிக்க முடியாது என்பதே வரலாறு தரும் படிப்பினை.

"ஏகாதிபத்தியத்திற்கு கச்சிதமாக செய்யப்பட்ட அடிமை நான்" - கனிமொழி உரைவீச்சு

123- அணுசக்தி ஒப்பந்தம் எவ்வாறு இந்தியாவிற்கு மிகவும் நன்மைபயக்கிறதென்பதை மிகவும் சிரமப்பட்டு நீண்டகால ஆராய்ச்சியில் கண்டறிந்திருக்கிறார் கனிமொழி.
..
இந்தியாவுக்கு அதிக இடம் கொடுத்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ், வாஷிங்கடன் போஸ்ட் போன்ற பத்திரிக்கைகள் தன் (அமெரிக்க) அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதையும், இதே போன்ற ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள பாகிஸ்தான் வலியுறுத்துவதையும் வைத்து இந்திலிருந்தே தெரியவில்லையா? இது எவ்வளவு அவசியமென்று என்கிறார் கனிமொழி. இதைப் போன்ற கவித்துவமான கண்டுபிடிப்புக்களால் தான் அவர் கவிஞர் என்றழைக்கப்படுகிறார் போலும்.

அம்மா! கவித்தமிழே!
.....
இந்த மானங்கெட்ட ஒபந்தத்தை எதிர்க்கும் அணுவிஞ்ஞானிகள், அரசியல், பொருளாதார நிபுணர்கள் என எவருடைய கருத்துக்களையும் உங்கள் கண்கள் படித்ததா? படித்திருந்தாலும் கண்டிப்பாய் அவை உங்கள் வாயிலிருந்து வந்திருக்காது. எங்களுக்குத் தெரியும் அடிமைகளின் வாய்கள் ஆண்டைகளின் எச்சில்களுக்காகவே மட்டும்தான் காத்திருக்குமென்று.

"சீனாவை போலவே இந்தியாவும் மின் உற்பத்திக்கு நிலக்கரியை பெரிதும் நம்பியிருக்கிறது. சீனா 2020க்குள் அணு ஆலைகள் மூலம் 40000 MW மின்சக்தி உற்பத்தி செய்ய தயாராகிவருகிறது. இந்தியாவிக்கும் 2020க்குள் 30000 MW மின்சக்தி உற்பத்தி செய்யும் எண்ண்மிருக்கிறது. ஆனால் 123 யை கையெழுத்தாகாமல் அது சாத்தியமில்லை" என்கிறார் கனிமொழி. எழுத்தின் மூலமாக மக்களின் மீது ஆதிக்கம் செய்யும் படைப்பாளியின் ஆவணம் இங்கே தீர்ப்பு சொல்கிறது.
..
சரி '123 ஒப்பந்தத்தை' பற்றி சுருக்கமாக பார்ப்போம்
..
நம் நாட்டில் கிடைக்கின்ற தோரித்துடன் ஓரளவு புளூட்டோனியத்தை சேர்த்து செறிவூட்டி அணுஆற்றலை பெற முடியும் என்பதலில் தற்போது நல்ல முன்னேற்றத்தை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த 30 ஆண்டு சிந்தனையை அமெரிக்காவிற்கு அடகு வைக்க போகிறது இந்திய அரசு.

இன்று அணுசக்தியிலிருந்து 3% மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது இதனை 7% ஆக மாற்ற அதாவது வெறும் 4% அதிகப்படுத்த (அதுவும் 2020-ல் தான்) 123 யை நிறைவேற்ற துடிக்கிறது அரசு. அமெரிக்கா போன்ற நாடுகளிலே அணுசக்தியிலிருந்து 2.5% தான் மின்சாரம் எடுக்கின்றனர். பாதுகாப்பு காரணம் காட்டி இதனை அதிகப்படுத்த அங்குள்ள மக்கள் சம்மதிக்கவில்லை. இது போல உலகம் முழுவதும் விலை போகாத அணு உலைகளை இந்தியா தலையில் கட்ட நினைக்கிறது அமெரிக்கா.
இதை தவிர அரசியல் ரீதியில் "அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையினை" அப்படியே இந்தியா ஏற்க வேண்டும்

உண்மை இவ்வாறு இருக்க, தோரியம் சார்ந்த அணுசக்தி தொழில் நூட்பத்தை உருவாக்க நீண்ட காலமாகுமென்றும் கவலையுறுகிறார் கனிமொழி. உண்மைதான் போராளிகள் நீண்டகாலமாக போராடிக்கொண்டு இருக்கின்றார்கள், அவர்களுக்கு நீண்ட காலமென்பது சலிப்பூட்டுவதாக இருக்காது. ஆனால் காலில் விழுபவர்களுக்கோ ஒவ்வொரு நொடியும் கவலையாகத்தான் இருக்கும், நமக்கு முன் எவனாவது முந்திக் கொள்வானோயென்று.

ஏற்கனவே ஒவ்வொரு இந்தியனின் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் கடனின் அளவு ஏகத்திற்கும் எகிரிக்கொண்டிருக்கும் போது 15 லட்சம் கோடி ரூபாயை இவ்வொப்பந்தத்தின் மூலம் முதலீடு செய்து அவனை ஒரேடியாக புதைக்குழிக்குள் அனுப்பும் நிகழ்ச்சிபோக்கு தான் 123 - என்பதனைத் தவிர வேறொன்றும் இல்லை.

காலனி ஆதிக்கத்தின் பழைய பாதிப்பு மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய பயங்களை மனதைவிட்டு அகற்றுவதற்கு ஒரே தாயத்து 123 ஒப்பந்தம் தான் என்கிறார் கனிமொழி, மேலும் சிலர் பொதுப்படையாக " அணுசக்தி எரிபொருளை நிறுத்தவோ, தரப்பட்டதை தன்னிச்சையாக எடுத்துக்கொள்ளவோ அமெரிக்க அதிபரால் முடியும்" என்று பேசுவதாக கூறுகிறார்.

கனிமொழி அவர்களே அது சிலர் அல்ல! ஆகப் பெரும்பான்மையினர். ஆனால் அமெரிக்காவின் எச்சிலுக்காக நக்கி பிழைக்கும் உங்களை போன்றவர்கள் தான் சிறுபான்மையினர். இந்த சிறுபான்மை துரோகிகளை இன்றைய செய்தி ஊடகங்களில் தேடமுடியாது, உங்களை போன்றவர்களை விரட்டியடிக்கும் போராட்ட காலத்தில் வெளிவரும் புரட்சிகர ஏடுகளில் தான் காண முடியும்.

இந்த வாரிசு போல இன்னொரு வாரிசான 'கார்த்திக் சிதம்பரம்' (கனிமொழியின் கருத்து அமைப்பின் பார்ட்னர்) என்பவரும் இதே போல 123 நாட்டு நலனுக்கு சிறந்தது, தோரியம் மூலம் அணுசக்தி கிடைக்க ரெம்ப காலம் ஆகும், அடிமை ஒப்பந்தத்தால் ஒரு தீமையும் இல்லை என சென்னையில் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டு இருந்ததை சொல்லியே ஆக வேண்டும்.

கலைஞருக்கும், ப.சிதம்பரத்துக்கும் வார்த்து எடுத்த மாதிரி வாரிசு அமைந்து உள்ளது. இது பன்னாட்டு நிறுவனத்திற்கு நல்லதாக இருந்தாலும் இந்திய நாட்டுக்கு நல்லதல்ல.

"15 வினாடிகளுக்கு ஒரு குழந்தை இறக்கிறது இந்தியாவில்" - ஏகாதிபத்திய அருவருடிகளின் சாதனை

59 ஆவது குடியரசு தின விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. இந்த சிறப்பு நாளில் புதிய சாதனையாக "15 வினாடிகளுக்கு ஒரு குழந்தை இறக்கிறது இந்தியாவில்" என்பது எட்டப்பட்டு உள்ளது.

Sunday, January 27, 2008

"கோடிக்கணக்கான மக்களை பசி,பட்டினிக்கு ஆக்கியது நாங்கதான்" - கிரிமினல் பில்கேட்ஸ் ஒப்புதல்

முதலாளித்துவத்தின் உயிரே சந்தையில் தான் இருக்கிறது. இன்று ஏகாதிபத்தியத்தின் தீவிர தாக்குதலில் உலகமே திணறி கொண்டு இருக்கிறது. கிட்டதட்ட 400 பன்னாட்டு கம்பெனிகளின் பிடிக்குள் உலகம் சென்று கொண்டிருக்கிறது.

ஆண்டுக்கு 19 கோடி மக்கள் பசி பட்டினியால் மாண்டு வருகிறார்கள் என்கிறது புள்ளிவிபரங்கள். இதற்கு முழுமூற்றான காரணமே பன்னாட்டு நிறுவனத்தின் லாபவெறிதான். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இன்று இந்தியாவில் ரிலையன்ஸ், வால்மார்ட், மோர் என பல கம்பெனிகள் சில்லறை வணிகத்தில் நுழைவதை பார்க்கிறோம். என்ன காரணம் என்றால், இங்கே 1000 நபர்களுக்கு கிட்டதட்ட 20 கடைகளுக்கு மேல் என்ற விகிதத்தில் கடைகள் இருக்கிறது. இதனை சுலபமாக 4,5 நிறுவனங்கள் என மாற்றி விட்டால் அதாவது அந்த 20 பேர்களை வெளியேற்றி விட்டால் அனைத்து லாபமும் ஒரே நபரிடம். பின் இவர்கள் கூடிப்பேசி பல மடங்கு விலையினை ஏற்றி அதை விட கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கலாம் என்பதால் தான்.

இது போல அனைத்து துறையிலும் நிகழ்ந்துவருகிறது. இதற்கு இந்திய உள்பட எல்லா நாடுகளிலும் அருவருடிகளை தயார்படுத்தி தனது கொளகையினை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இதில் பெரிய திருடன்களில் ஒருவரான பில்கேட்ஸ் கூறுகிறார் "வறுமை வாழும் மக்களுக்கு கூடுதல் நிதி தரவேண்டும்" 100 கோடி மக்கள் தினசரி வருமானம் 1 டாலர் க்கும் குறைவாக இருக்கிறது" என. இதற்கு காணமே இவர்களை போன்ற ஆட்கள் தான் என தெரிந்து கொண்டு தான் இப்படி கூறுகிறார்.பில்கேட்ஸ் பற்றி ரெம்ப பேர்கள் தெரியாமலே, 'உழைப்பால் உயர்ந்தவர்' என நம்பிக்கொண்டு வருகிறார். இந்தியாவில் இவர்களின் எண்ணிக்கை அதிகம்.

ஆனா பில்கேட்ஸ் வெற்றி எப்படி கட்டியமைக்கப்பட்டது என உண்மையினை ஆய்வு செய்தால், 'உலகம் முழுவதும் வளர்ந்து வரும் கணிப்பொறி நிறுவனங்களை பல வழிகளில் திட்டமிட்டு செயலிழக்க வைக்கப்பட்டது' என்பது தெரியவரும். இது போல பல தில்லுமுல்லுகளை செய்ததை உழைப்பு என நம்பவைக்கின்றனர். ஆனால் உழைப்பு என்பது "யாருக்காக" என்பதை பொறுத்து தான் அதன் மதிக்கமுடியும்.

  • இணைப்புகள்

  •