இன்று நாட்டை மீண்டும் காலனியாக்கப்படுவது வெகு விரைவாக நடந்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கு இந்திய அருவருடிகள் இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டு வருகின்றனர். இதனை மக்கள் உணராதபடி (அதாவது நாடு அடிமையாகி கொண்டுவருவதை) இருக்க கல்வி நிறுவனங்கள், மத நிறுவனங்கள் போன்றவற்றின் மூலம் இந்த மறுகாலனியாதிக்கத்தை ஆதரித்தும், இதனை மக்கள் தானே ஏற்றுகொள்ளுமாறும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது; கலாச்சார சிரழிவுகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இவற்றுடன் மக்களின் சிந்தனையினையே மழுங்கடிக்கும் வகையில் சாராயக் கடைகள் நடத்தப்படுகிறது.
இந்தியாவில் காந்தி என்ற ஆங்கிலேயனின் அடியாளின் நினைவாக குஜராத்தில் மட்டும் (அங்கு 'கள்ளச்சாராயகம்' என்ற ஆறே ஓடுகிறது) மதுவிலக்கு அமல் செய்துவிட்டு மற்ற பகுதிகளில் சாராய வியாபாரம் வெகு விமர்சியாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் சாராடக்கடைகளை அரசே ஏற்று நடத்தி சாதனை படைத்துவிட்டது. இப்போது இன்னொரு சாதனையாக சாராய விற்பனையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை எட்டியுள்ளது.
நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பதில், தமிழகத்தில் தினமும் ஒரு பன்னாட்டு கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்து உழைத்து வரும் கலைஞர் அவர்கள், சாராய விற்பனையில் சாதனை படைத்து உள்ளார் என்பதை பொருத்தி பார்க்க வேண்டும். அதாவது மக்கள் சிந்தனையினை மழுங்கடிப்பதன் மூலமே உலகமயமாக்கலை விரைவாக அமல்செய்ய முடியும்.அதில் சாராயத்தை பங்கை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்து உள்ளனர்.
இதேவேளையில் சாராயத்தை எதிர்க்கும் பாமக, மந்தியிலும் மாநிலத்திலும் கூட்டணி வைத்துக்கொண்டு அதன் உலகமயமாக்கல் கொள்கையினை ஆதரித்து வருகிறது. மக்களை பசி,பட்டினிக்கு ஆளாக்கும் மக்கள் விரோத கொள்கையான உலகமயமாக்கலை எதிர்க்காமல் 'சாராயத்தை எதிர்க்கிறோம், தமிழை பாதுகாப்போம்' என இது போன்ற எதிர்கால கலைஞர்களும் (ராமதாஸ்), ஜெயலலிதாக்களும் (விசயகாந்த்) கதை அளந்து வருகின்றனர். மீண்டும் புதிய அருவருடிகளிடம் நாட்டை ஒப்படைப்பதால் ஒரு விமோசனம் இல்லை என்பதை மக்கள் உணரும் போதுதான் இதனை முடிவுக்கு கொண்டு வரமுடியும்.
No comments:
Post a Comment