Saturday, January 26, 2008

"சட்டபூர்வமாக கடத்தினால் அதற்கு பெயர் ஏற்றுமதியா"- மக்கள் கேட்காத கேள்வி


அரிசி 84,000 டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது எனவும், கடந்த ஆண்டு 3.7 லட்சம் அரசி ஏற்றுமதி செய்ததில் அரசுக்கு 4,258 கோடி வருவாய் கிடைத்துயுள்ளதாகவும் அறிவிக்கிறது மத்திய அரசு.

ஏன்டா நாட்டில அவனவன் அரசியை ரூ 2-க்கு விற்றால்தான் வாங்க முடியும் என்ற நிலையினை ஏற்பத்திவிட்டீர்கள். நாடு முழுக்க லட்சக்கணக்கான விவசாயிகள் பசி பட்டினியால் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற உண்மையினை உங்க வாயினாலே ஒத்துக்கொண்டுவிட்டீர்கள். எல்லாதிற்கும் ஹைலெட்டாக 70 % மக்கள் தினசரி வருமானம் ரூ 20 தான் என ஆக்கிவிட்டீர்கள்.

உள்நாட்டு கோதுமை உற்பத்தியினை தரக்குறைபாடு காரணம் காட்டி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தும், அரிசிக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக 1000 ரூ கூட கொடுக்காமல் தட்டிகழித்தும் வருகிறீர்கள். இது போன்ற பல காரணங்களால் விவசாயி விவசாயம் செய்யமுடியாமல், இருக்கின்ற விவசாயத்திற்கான பாசன பகுதியும், விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.

மக்களுக்கு குறைந்த விலையில் அரசி கொடுக்க, விலை குறைவாக விவசாயிகளிடம் இருந்து அரிசியை வாங்குவதாக சொல்லிவிட்டு இப்ப என்னடானா வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வோம் என்கிறீர்கள்.

ரூ 2க்கு அரியை கொடுத்தால் தான் வாழ முடியும் என்ற நிலையினை ஏற்படுத்தியதையே சாதனையாக "அரிசி கிலோ 2ரூ" என காட்டி வருகிறது 'முன்னோடி மாநிலம்' தமிழகம். இந்த 2ரூ விலையினாலே அனைத்து ஓட்டுபொறுக்கி ஆட்சியிலும் நடைபெறும் 'அரிசி கடத்தல்' (மற்ற மாநிலங்களுக்கு) தற்போது அதிகளவில் நடைபெறுகிறது.

மற்றவர்கள் மாநிலங்களுக்குள் செய்வது அரிசி கடத்தல் என்று கூறும் நீங்கள், நீங்களே கொடியசைத்து அரிசியை அனுப்பிவத்தால் அதற்கு பெயர் 'ஏற்றுமதி' என்பீர்கள். இந்த மக்களுக்கு வாங்கும் சக்தி இல்லை என்பதால் வெளிநாட்டுக்கு அனுப்பி வருகிறோம் என்று வரவேண்டிய செய்தி 'ஏற்றுமதி' என்ற ஒரே சொல்லாக மட்டும் மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

  • இணைப்புகள்

  •