தினம் ஒரு பன்னாட்டு கம்பெனி, மருத்துவ நகரங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என தமிழனுக்காக காலை 4 மணிக்கு எழுந்து வேலை செய்யும் ஒரே முதல்வர் கலைஞர் என்றால் அது மிகையில்லை. மின்சாரத்தட்டுபாட்டை ஏற்படுத்தி இன்று தனியாருக்கு அனுமதி அளித்தது இவரின் சமீபத்திய சாதனை.
இந்த சாதனைகளால் மக்கள் பெரும்பான்மையினர் வீதிக்கு வந்துவிட்டார்கள். அன்றாடம் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறி சென்னை போன்ற பெருநகரங்களில் கால்வாய் ஓரமாக, சாலை ஓரமாக கூலித் தொழிலாளர்களாக மாறி வருகின்றனர். காசு இருந்தா கல்வி என்பது கொள்கையாகவே மாற்றிவிட்டார்கள். தமிழ் படித்தவனுக்கு வேலை இல்லை. ஆங்கிலமாவது தெரியுமா என்றால் அதுவும் அரைகுறை. பல்லாயிரக்கணக்கில் இளைஞர்களை கசக்கி பிழிந்து ஒரு சிலரை வேலைக்கு பொறுக்கி எடுக்கும் அவலம். விண்ணை முட்டும் வீட்டு வாடகை ஏற்றத்தால் ஏழை - நடுத்தர மக்கள் நகரத்தை விட்டு துரத்தியடிக்கப்படுகின்றனர்.
திரும்பிய பக்கம் எல்லாம் சாமியர் வருகை பற்றி அறிவிப்புகள், வாஸ்த்து சாஸ்திர நிபுணர்கள், ராசிகல் & பெயரியல் நிபுணர்கள்.
வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகள், கல்வியினை வியாபாரமாக்கும் போஸ்டர்கள் என நாடே திக்குமுக்காடி கொண்டிருக்கிறது.
இவ்வளவினையும் செய்துவிட்டு தங்கள் படங்களை பேனர்களாக வீதிக்கு வீதி வைத்துக்கொண்டும், பழம் தின்று கொட்டை போட்டவர்க்ள் (ஜெ, கலைஞர், ராமதாஸ்) என்றால் பல தொலைக்காட்சிகள் உருவாக்கி அதன் மூலம் புகழ் பாடி கொண்டும் வலம் வருகின்றனர்.மக்களை அழித்துவிட்டு கலையினை காப்பாற்றுகிறோம் என சென்னை சங்கமம் நடத்துவது போல தமிழனை அழித்துவிட்டு தழிழை பாதுகாப்போம் என சூளுரைக்கின்றனர்.
இந்த அட்டை கத்தி வீரர்களை மக்கள் தெரிந்து கொள்ளாத வரை இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
No comments:
Post a Comment