Monday, January 21, 2008

"உலக வங்கியின் சரியான அடியாள் நான் தான்" - கலைஞர்

நகர விரிவாக்க திட்டம் என்ற பெயரில் கோயம்பேடு பஸ்நிலையம் நாங்கள் உருவாக்கியது என்று இன்றைக்கு சிம்டிஏ வின் ஆவணங்களிலே வெளிப்படையாக 'உலகவங்கி' அறிவித்துவிட்டது. மேலும் அத்திட்டத்தின்படி கால்வாய் ஓரமாக, கடற்கரை ஓரமாக உள்ள மக்களை வெளியேற்றுவது போன்ற பல மக்கள் விரோத திட்டங்களை வெளிப்படையாக 'நகர விரிவாக்கம்' என்ற பெயரில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோயம்பேடு பஸ்நிலையம் 1999 ல் கலைஞர் அடிக்கல் நாட்டி பணி முடிக்கும் முன் ஜெயலலிதா ஆட்சி வந்துவிட்டது. பின் ஜெயலலிதா பெயர் போட்டு பஸ் நிலையம் திறக்கப்பட்டு விட்டது. கிட்டதட்ட 5 ஆண்டுகள் பின் தற்போது கோயம்பேடு பஸ்நிலையம் திமுக காலத்தில் தான் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று கலைஞர் பெயர்பலகை வைக்கப்பட்டு உள்ளது.(அதை விட பெரியதாக)

இப்படி உலக வங்கியின் திட்டத்தை யார் நிறைவேற்றியது என்று வெளிப்படையாகவே மோதி கொள்கின்றனர் இந்த ஓட்டுக் கட்சி தலைவர்கள். சரியான உலகவங்கி அருவருடிகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தான் இன்று மக்கள் கையில் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது தெள்ளதெளிவாக தெரிகிறது. ஆனால் இந்த அதிகாரத்தை கொண்டு மக்கள் நலனுக்காக பாடுபடுவோம் என்று 60 ஆண்டுகளாக மக்கள் காதில் பூ சுற்றி அருவருடிகளும், புதிய அருவருடிகளும் மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர் என்பதே வருத்தம் அளிக்கின்றது.

No comments:

  • இணைப்புகள்

  •