Monday, August 11, 2008
பன்னாட்டு கம்பெனிக்கு நாட்டை விற்கின்ற கோப்புகளை சரியாக பார்ப்பவர் நான் - தரகு முதலாளி அறிவிப்பு!
Posted by செய்தி விமர்சனம் at 4:42 AM 0 comments
Labels: ஓட்டுப்பொறுக்கி அரசியல்
ஓட்டுப்பொறுக்கிகள் நாம ஒன்னா சேர்ந்தா தான் விரைவில் மக்களை கொல்ல முடியும்- ஏகாதிபத்திய பூட்ஸ் நக்கி!
Posted by செய்தி விமர்சனம் at 4:42 AM 0 comments
Labels: ஏகாதிபத்திய அடிமை
போங்கடானு சொன்னாத்தான் போவோம் - சி.பி.எம், சி.பி.ஐ !
Posted by செய்தி விமர்சனம் at 4:42 AM 0 comments
Labels: போலிக் கம்யூனிஸ்ட்கள்
Saturday, July 19, 2008
உலகவங்கியிலிருந்து மக்களை கொன்றவர்களும், சாரயம் காஞ்சியவனும் இந்திய நாடாளுமன்ற பன்றி தொழுவ ஜனநாயகத்தில் தாண்டா தலைவர்களாக வர முடியும்!!
Posted by செய்தி விமர்சனம் at 7:27 AM 0 comments
ஹீண்டாய், மகேந்திரா, போர்டுக்கு மின்சாரம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம்! மக்களுக்கு 2 மணி நேரம் மின்வெட்டு!!
கருணாநிதி உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகளின் உழைப்பின் சாதனை!!
Posted by செய்தி விமர்சனம் at 7:27 AM 0 comments
Labels: ஏகாதிபத்திய அடிமைகள்
Friday, July 18, 2008
45 வீட்டுமனைக்கு 1 லட்சம் பேர் விண்ணப்பம்! மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்!!
Posted by செய்தி விமர்சனம் at 7:27 AM 0 comments
Labels: மறுகாலனியாக்கம்
Thursday, June 5, 2008
பெட்ரோல் விலையேற்றம் : சொரணையே இல்லையாட நமக்கு!!
விலைவாசி மிக கடுமையாக உயர்ந்த பின்னும் மீண்டும் பெட்ரோல் விலையினை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலையினை ரூ3ம், சிலிண்டருக்கு ரூ50ம் விலை ஏற்றி அறிவித்து உள்ளது மத்திய அரசு.
இதனை அரங்கேற்றிய எல்லா ஓட்டுப்பொறுக்கி நாய்களையும் - கிழித்து எறிவதற்கு முன்னர், பெட்ரோல் விலை ரகசியம் - இதனை ஏற்றவேண்டி இவர்கள் கூறிய காரணத்தோட யோக்கியதைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனை பிரச்சாரமாக எடுத்து சென்றால் தான் இந்த நாய்களை அம்பலப்படுத்த முடியும்.
1.
பெட்ரோல் விலை (தற்போதைய விலை) - ரூ 49.61 (இது சாதங்க, சூப்பர் ரூ53 அதுவே ஷெல்ல ரூ58)
இதுல சுங்கவரி, கலால் வரி, விற்பனை வரி, கல்வி (!) வரி என மத்திய - மாநில அரசுகள் பிடுங்குவது ரூ28
அதாவது 1 லிட்டருக்கு 57% வரி.
இதனை கழித்துவிட்டு பார்த்தால் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 21 தான்.
2.
கச்சா எண்ணெய் மொத்த தேவையில் 30 % நமது நாட்டில் கிடைக்கிறது.
இதையும் இறக்குமதி செய்யப்படும் 70 % கச்சா எண்ணெய்க்கு ஈடாக வரியினை போடுகிறார்கள் இந்த மோசடி வியாபார ஓட்டுப்பொறுக்கிகள்.
3.
அடுத்து கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு யார்- யார் ஈடுபடுறானுங்க பார்த்தோமானால்,
நமது நாட்டில் உள்ள 19 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் 18 அரசு வசமும், ஒன்று திருட்டு அம்பானி வசமும் உள்ளது. ஆனால் 18 ஆலை வச்சிருக்கிற அரசு உற்பத்தி திறன் 74%, ஒத்த திருட்டு அம்பானி ஆலையின் உற்பத்தி திறன் 26%. இந்த அயோக்கியத்தனத்தை போல பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் திறனில் அம்பானியின் ஆலை 59% ஆக உள்ளது. அரசாங்கம் அம்பானியிடம் கொண்டுள்ள வர்க்கப்
பாசத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
4.
இவ்வாறு பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மூலம் 2004-2005 ஆம் ஆண்டில் அரசுக்கு கிடைத்த வருமானம் 1,20,946 கோடி.
ஆனால் இவனுங்க 2005-2006 ஆம் ஆண்டில் மண்ணெண்ணெய்க்கும் சமையல் எரிவாயுக்கும் கொடுத்த மானியமோ 2,535 கோடி ரூபாய் தான்.
இப்படி வரியினை போட்டு கொள்ளையடிக்கும் அரசு எங்க எண்ணெய் ஆலைகளுக்கு நஷ்டம் என கதை விடுகிறது. ஆனால் இது பெரிய பித்தலாட்டம். இதனை தோலுரிக்காமல் நேற்று நமட்டு சிரிப்புடன் விலையேற்றத்தை நியாயப்படுத்திய மண்மோகன் அடிமை போன்றவற்றை முச்சந்தியில் நிறுத்த முடியாது.
இவனுங்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான உள்கட்டுமானம், ராணுவ தளவாடங்கள் போன்றவற்றுக்காகவே தாக்கல் செய்கின்ற பட்ஜெட் என்ற மோசடியில் வருமானத்துக்கு வரி போடுவது, பொதுத்துறையினை விற்பது என்பதை மட்டுமே வழக்கமாக கொண்டு இருக்குறானுங்க. இந்த வரி விதிப்பில் பெரும்பங்கு பெட்ரோலிய பொருட்களின் மீது போடுவது.
இப்ப தெரியுதா, மேலே உள்ள உண்மை நிலையினை இவன் ஏன் மறைத்து நட்ட கணக்கு காட்டுகிறான் என்று. வரியினை போட்டாதான் தங்க நாற்கர சாலையும், ராக்கெட்டையும் விட முடியும். ஒரு வரியில் சொல்லனும்னா "நம்ம வீட்டை கொளுத்திவிட்டு அதுல குளுரு காய்றானுங்க".
இந்த விலையேற்றத்தை எதிர்ப்பது போல போராட்டத்தை அறிவிக்கும் பாஜக, சிபிஎம் - எந்த அருகதையும் இல்லை. இதே பாஜக ஆட்சியும் கச்சா எண்ணெய் விலையேற்றத்தை காரணம் காட்டி பெட்ரோல் விலையினை ஏற்றியவர்கள் தான். 123 ஒப்பந்தத்திற்கு ஆரம்ப சுழி போட்டவன், தற்போதைய மறுகாலனிய கொள்யினை அச்சு அசலாக பின்பற்றியவர்கள். ஆட்கள் தான் மாறுகின்றனர் கொள்கை அதே தான் இந்திய திருநாட்டில்.
அடுத்து சிபிஎம் -சொல்லவே தேவையில்லை இவனுங்க ஆதரவுடன் தான் 4 ஆண்டு கொள்ளையே நடக்குது. 123 இருந்து இந்த விலையேற்றம் வரை "மக்களை திரட்டி போராடுவோம்" என்று கூறி கொண்டே ஆட்சிக்கு முட்டு கொடுத்து மக்களை கொலை செய்து வருகின்றனர். இதைவிட மக்களை கேவலப்படுத்த முடியாது.
அடுத்து திமுக, ராமதாஸ் போன்ற ஓட்டுப்பொறுக்கிகள். இந்த மதவெறி எதிரான ஆட்சியின் காவலர்கள் தான் போன பாஜக ஆட்சியின் குஜராத் படுகொலைகளையும், மறுகாலனியாதிக்க கொள்ளைகளையும் முழுக்க ஆதரத்து குளிர் காய்ந்த நாதாரிகள் என்பது சிபிஎம் போலிகளுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். மக்களாகிய நாமும் இதனை நம்பி இருப்பதை எந்த வகையில நியாயப்படுத்த முடியும்.
எல்லாவற்றையும் உடன் இருந்து அமைச்சரவையில் ஒப்புதல் கொடுத்துவிட்டு நாட்டில் இதனை விட முக்கிய பிரச்சனை இருப்பது போல திரிகிறார் ஐபிஎல் ரசிகர் கலைஞர். மேலும் தனது 50 ஆண்டுகால இது போன்ற சாதனைகளுக்காக வரலாறு காணாத வகையில் பிறந்தநாள் விழா கொண்டாடி வருகிறார் நம்ம தமிழின தலைவர். இந்த காரியவாத தலைவரின் சொத்து இன்று பல்லாயிரக்கணக்கான கோடி .
அப்பறம் ராமதாசு, தனது மகன் அங்க ஒப்புதல் கொடுப்பார் - இவரு தீவிர மக்கள் நலன் விரும்பி போல அறிக்கை விடுவார். இந்த ஓட்டுப்பொறுக்கியும் பாஜக காலத்துல இருந்து மத்திய அமைச்சரவையில இருக்கு. 123 யினை ஆதரிக்கும் அடிமை. இந்த கவர்ச்சிவாத தலைவரின் சொத்து இன்று ஆயிரக்கணக்கான கோடி.
அடுத்து மக்கள் விலைவாசியில கஷ்டப்படுவதை தாங்காமல் உதகையில் இருந்து அறிக்கை விடும் நம்ம ஜெயலலிதா அம்மா. இது காலத்து வரலாற்றை கூற வேண்டிய தேவையில்லை என்பதால் இத்துடன் முடிக்கலாம்.
இந்த விலையேற்றத்தை தொடர்ந்து நாளை அனைத்து பொருட்களும் மீண்டும் விலையேற போகிறது.
ஆக மொத்தத்தில் காசு இல்லாதவனை பார்த்து சாங்கடா என்கிறது அரசு. ஆனால் நாம் மவுனம் காத்து கொண்டுயிருக்கிறோம். இது நமக்கு நாமே சவக்குழியினை தோண்டிக் கொள்வதை போலத்தான். இதனைவிடுத்து மவுனத்தை உடைத்தெறிந்து வீதியில் இறங்கி போராடுவது தான் அத்தனை பிரச்சனைகளையும் தீரக்க முடியும்.
இந்த பதிவினை கிரகிக்க நமக்குள் எழுப்ப வேண்டிய கேள்வி தான் பதிவின் தலைப்பு - "சொரணையே இல்லையா நமக்கு".
Posted by செய்தி விமர்சனம் at 7:19 AM 0 comments
Labels: இந்திய ஜனநாயகம், ஓட்டுப்பொறுக்கி அரசியல், மறுகாலனியாக்கம்
Tuesday, May 6, 2008
மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - போலிக் கம்யூனிஸ்ட்கள்
டாடாவுக்காகவும், சலீம் குருப் என்ற பன்னாட்டு கம்பெனிக்காகவும் நந்திகிராம், சிங்கூரில் ஆளும் போலிக் கம்யூனிஸ்ட்களின் குண்டர் படை '30க்கும் மேற்பட்ட மக்களை கொன்றும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும்' தனது பாசிசத்தை வெளிப்படுத்தியது.
தஸ்லீமா நஸ்ரின் விவகாரத்தில் முஸ்லீம் மதவெறியர்களுக்கு பயந்து தனது மதச்சார்பின்மை என்ற கோவனத்தையும் அவிழ்த்து விட்டது.
தற்போது அம்மணமான பின்னும் நாங்கள் மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் என தொடர்ந்து அறிவிக்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது பூமி பாதுகாப்பு இயக்கத்தினரை சேர்ந்த பெண்களை ஓட்டுப் போட மறுத்த காரணத்தால் நிர்வாணப்படுத்தி ஓட விட்டு உள்ளனர் இந்த பாசிஸ்டுகள்.
இவ்வாறு நாட்டை மீண்டும் காலனியாக்குவதை செய்து கொண்டே விலைவாசி உயர்வு, 123, புஷ் விவகாரம் போன்றவற்றை கண்டித்து இவர்கள் மக்களை திசைதிருப்புவது தான் இந்த துரோகிகளின் செயல்பாடாக உள்ளது.
முக்கிய இடத்தில் மக்கள் முன்னிலையில் இவ்வாறு என்றால் நந்திகிராமில் கேட்கவே தேவையில்லை. இதனை மறுப்பவர்கள் நந்திகிராமில் நடத்திய பாசிசத்தை மறுப்பதில் வியப்பில்லை.
இப்படிப்பட்ட பாசிஸ்டுகளை, 'மக்கள் முன் அம்பலப்படுத்தாமல் உண்மையான எதிரிகளை' புரட்சிகர சக்திகள் இனம் காட்ட முடியாது
Posted by செய்தி விமர்சனம் at 11:15 PM 0 comments
Sunday, May 4, 2008
இந்தியர்கள் வாயினால் சாப்பிடக் கூடாது - உலக பயங்கரவாதி புஷ் எச்சரிக்கை!
இந்தியாவில் உணவு உற்பத்தி, கொள்முதல், விற்பனை என அனைத்திலும் இருந்து அரசு தன்னை விடுவித்து கொண்டு அதனை பன்னாட்டு நிறுவனங்களிடமும் தரகு முதலாளிகளிடமும் ஒப்படைத்தது காரணம்.
இதனை எந்த ஓட்டுப்பொறுக்கி நாய்களும் சொல்வதில்லை. ஏனென்றால் இதனை அரங்கேற்றியதில் "அனைத்து ஓட்டுப்பொறுக்கிகளுக்கும் குறிப்பாக 4 ஆண்டுகளாக காங்கிரஸ் துரோகிகளை ஆதரிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கும்" முழு பங்கு உண்டு.
இன்று உலக நாடுகளை சூறையாடும் உலகப்போலீஸ்காரனும், அமெரிக்காவின் தலைவனும் ஆன புஷ் அறிவிக்கிறான் "விலைவாசி உயர்வுக்கு இத்திய மக்கள் அதிகம் சாப்பிடுவதே" காரணம் என்று.
இலவசமாக உணவு பொருக்களை இந்தியர்கள் பெறுவது போல சித்தரிக்கும் இந்த பயங்கரவாதி தான் 'பயோ ப்யூல்' காக ஏழை எளிய நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் விவசாயத்தை உணவு உற்பத்தியிலிருந்து விலகி காட்டாமணக்கு போன்றவற்றை பயிரிட வைத்தவன்.
விலைவாசி உயர்வுக்கு காரணமான தனியார்மயம், ஊகவணிகம் என அனைத்தையும் இத்திய ஓட்டுப்பொறுக்கிகள் நிறைவேற்ற காரணமானவனே இவனுடைய அமெரிக்கா தான். அங்குள்ள ஆக பெரும்பாண்மையான பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக தான்.
புஷ் சொல்லும் இதைதான் இந்திய ஓட்டுப்பொறுக்கிகளும் முன்னர் சொன்னது, "தேவை அதிகரித்ததே" என்று. அதனை வெளிப்படையாக "அதிகம் திண்ணுகின்றனர்" என புஷ் அறிவிக்கிறான் இன்று.
புஷ்யை கண்டிக்கும் அருகதை இந்திய ஓட்டுப்பொறுக்கிகளுக்கு இல்லை என்பதே இதிலிருந்து தெரிவது.
Posted by செய்தி விமர்சனம் at 10:34 PM 1 comments
Labels: அமெரிக்கா, ஓட்டுப்பொறுக்கி அரசியல்
Wednesday, April 16, 2008
சிபிஎம் - யின் மாற்று பாதையின் யோக்கியதை இதோ! பிச்சை எடுக்கும் போராட்டம்
Posted by செய்தி விமர்சனம் at 9:41 PM 0 comments
Labels: போலிகள்