Sunday, February 24, 2008

"மக்களை கொன்றால் சிறப்பு காவல், மக்களுக்காக போராடினால் சிறப்பு அதிரடிப்படை" - இந்திய ஓட்டுப்பொறுக்கி ஜனநாயகம்


பீகாரில் கொலைகுற்றவாளியாக சந்தேகித்த ஒருவரை காவல் நிலையத்திலிருந்து இழுத்து வந்து அடித்து கொன்று உள்ளார்கள் எதிர்தரப்பினர். இதற்கு காவல் துறை பலத்தகாவல். இதற்கு முன் பலமுறை இது போன்ற சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இதுவும் நிகழ்ந்துயுள்ளது.

இதனை பின்புலமாக கொண்டு இந்திய ஜனநாயகத்தின் மற்றோரு முகத்தை கொஞ்சம் ஆராய்வோம்.

மக்கள் விரோதிகளான பன்னாட்டு நிறுவனங்களுக்கும், நிலவுடைமை பண்ணைகளுக்கும் சேவை செய்வதற்காகவே இந்திய அரசை 1947ல் உருவாக்கினர். ஆனால் மக்கள் நலனுக்கானது 'இந்திய அரசு' என்ற கருத்து உருவாக்கப்பட்டு ஓட்டுபொறுக்கிகளாலும், கல்வி & மதம் போன்ற நிறுவனங்களாலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இன்று நாடு மறுகாலனியாக்கப்படுவதும், இந்து பயங்கரவாத அமைப்புகளும் வெகுவிரைவாகவும் - வெளிப்படையாகவும் வளர்ந்து வருகிறது. சமீபத்திய உதாரணங்களான 123 அடிமைசாசனமும், ராமன் பால புரட்டையும் நாம் பார்க்கலாம்.

123 ஒப்பந்தத்தை விரைவாக நிறைவேற்றும் பணி போலிக்கம்யூனிஸ்டுகளின் பலத்த ஆதரவுகளுடன் நடைபெற்றுவருகிறது. பாஜக இதனை ஆரம்பித்தது முதல் திமுக கனிமொழி, ராமதாஸ் வரை அனைவரின் கரகோஷ ஆதரவோடு நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. வெளிப்படையாகவே 123 நாட்டுக்கு நலன்பயக்கும் என்று இந்த கயவர் கூட்டம் சொல்லுவதை விட "மறுகாலனியாக்கத்துக்கு இந்திய அரசு பீடுநடை போடுவதற்கு" சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

இதே போல சேது கால்வாய் திட்டத்தை ஆரம்பித்த பாஜக & அதிமுக பார்ப்பன கும்பல் இன்று ராமன் பால புராண புரட்டை கொண்டு அரசியல் செய்து வருவதும் அதற்கு நீதிமன்றம் அங்கிகாரம் தருவதும் வெள்ளிடைமலை. மேலும் குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை படுகொலை செய்ததை 'தெகல்கா' என்ற இதழ் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியும் அது குறித்து எந்த நடவடிக்கைகளும் இல்லை. இவையெல்லாம் இந்து பயங்கரவாத அமைப்புகளின் வளர்ச்சியினையே காட்டுகிறது.

மேலும் இன்று 'ராஜ் தாக்ரே' என்ற பார்ப்பன பாசிஸ்ட் மக்கள் பிரச்சனையினை திசைதிருப்பி ஆதாயம் அடையும் நோக்கத்தோடு வேற்று மாநிலத்துகார்கள் வருகையினால் தான் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என சொல்லி தனது குண்டர் படையினர் மூலம் மக்களை அடிக்கிறான். ஆனால் அவன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இதன் அடிப்படையிலேயே மக்கள் நலனுக்கான எதையும் இந்த அரசின் மூலம் பெற முடியாது என்பதை மக்களுக்காக போராடும் அமைப்புகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர்.

இவ்வாறு சோனியா, அத்வானி, மோடி, ராஜ்தாக்ரே, கலைஞர், ஜெ, ராமதாஸ்.................... போன்ற அனைத்து மக்கள் விரோதிகளும் Z பிரிவு உள்பட பலத்த பாதுகாப்புடன் இருக்கின்றனர்.

இவர்களால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான மக்களின் நலனுக்கான போராடுபவர்களை கண்டு அஞ்சி நடுங்கும் ஆளும் வர்க்கம் 'சிறப்பு அதிரடிபடை'யும், அதற்கு கோடிக்கணக்கான பணமும் செலவுசெய்து வருகிறது.

"நாளை முதல் அரட்டைமடம் கூடுகிறது" - பன்றி தொழுவம் அறிவிப்பு


நாட்டின் 70 % மக்களின் தினசரி வருமானம் ரூ 20,
20% மக்களின் தினசரி வருமானம் ரூ 9,
10 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை,
மனிதவள மேம்பாட்டில் உலகில் இந்தியாவிற்கு 128வது இடம்,

--இவையெல்லாம் மக்களை 60 ஆண்டுகளாக ஏய்த்து வரும் ஓட்டுபொறுக்கிகளின் சாதனைகள் & பாராளுமன்ற ஜனநாயகத்தின் யோக்கியதைகளில் சில.

இந்த சாதனைகளை நிறைவேற்ற கூட லஞ்சம் பெற்ற (கேள்வி கேட்க) ஓட்டுபொறுக்கிகள் என்பதால் "இவர்கள் பற்றி மேலும் கூறி மலத்தை நோண்ட வேண்டாம்" என இத்துடன் முடித்துக்கொள்வோம்.

"உண்மையான மக்கள் நீதி மன்றங்கள்"

மக்கள் நீதி மன்றங்கள் என்ற பெயரில் சமரச நீதிமன்றங்களை நீதித்துறை தற்போது செயல்படுத்தி வருகிறது. இதன் அடைப்படையில் தஞ்சையில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளார்கள் என கூறப்படுகிறது.

மக்களிடையே உள்ள செக் மோசடி, வாடகை பிரச்சனை உள்பட்ட வழக்கினை ஏற்று கொண்டு சமரசம் செய்து வைப்பது தான் இதன் பணியாகும்.

ஆனால் உண்மையான "மக்கள் நீதிமன்றம்" என்பது இதுவல்ல.
நாளை பெரும்பாண்மை மக்கள் ஆட்சி இந்தியாவில் மலரும் போது, இதுவரை நாட்டை சீரழித்த ஓட்டுபொறுக்கிகளையும், குஜராத் படுகொலை போன்றவற்றை செய்த பாஜக, ஆர்.எஸ்.எஸ் காலிகளையும் பிடித்து அவர்களுக்கு மக்களே நேரடியாக விசாரனைசெய்து தண்டனை தருவது தான் உண்மையான மக்கள் நீதிமன்றம்.

அன்று சங்கர ராமனை கொலை செய்த "கொலைகாரன் காஞ்சி ஜெயந்திரன்", சொத்து குவிப்பு வழக்கில் "பாப்பாத்தி ஜெயலலிதா" போன்றவர்கள் தற்போது போல 'பெயிலில்' சுதந்திரமான நடமாட முடியாது.

"ஒடுக்குபவனும், ஒடுக்கபடுவனும் இரட்டை குழந்தைகள்" - ராமதாஸ் & திருமா அறிவிப்பு

'முத்துராமலிங்க தேவர்' என்ற சாதிவெறியனுக்கு 'அரசு விடுமுறை' அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றியும், வன்னியர்களுடன் தமிழ் பாதுகாப்பு என்று கூட்டனி அமைத்தும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை பாதுகாக்கும் திருமா தற்போது வன்னியர்களும் நாங்களும் இரட்டை குழல் துப்பாக்கிகள் என கோஷம் போடுகிறார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை இந்த 'சந்தர்ப்பவாதி' மூலம் பெற முடியும் என யோசிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதே திருமாவின் அறிவிப்புகள், செயல்பாடுகள் தெரிவிக்கின்றன.

பண்ணையார் வாசன்.


மக்களை கேவலமான பார்த்து சிரிக்கும் இந்த பண்ணையின் பெயர் ஜி.கே வாசன்.

மூப்பனார் என்ற நிலப்பிரபுவின் மகனான இவர்,நிலவுடைமையாளர்களின் நலனுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இன்று தேர்தலில் நிற்காமல் எம்.பி பதவியும், அமைச்சர் பதவியும் வாங்கி கொண்டவர்.


"முதலாளிகளும், அவர்களின் அடியாள் அரசாகிய நாங்களும் யாரையும் வேலையிலிருந்து நீக்கலாம்" - வேதாந்தி மன்றம்

ஊழியரைகளை அரசாங்கமும் சரி, தொழிலதிபர்களும் சரி எப்ப வேணாலும் வேலையிலிருந்து நீக்கலாம் என நீதிமன்றம் அறிவித்து உள்ளது . இதன் மூலம் பெரும்பாண்மை உழைக்கும் மக்களின் எதிரியான சிறுபாண்மை முதலாளிகளையும், அவர்களின் அரசையும்( ஒரு வர்க்கத்தின் ஒடுக்குமுறை கல்வி) வெளிப்படையாக நியாப்படுத்தி உள்ளார்கள்.

நீதித்துறை மீது சிறிதளவு நம்பிக்கை உள்ளவர்களையும் முகத்தில் அறைந்து, வெளிப்படையாக சொல்கிறது "நாங்களும் முதலாளி வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவிதான்" என்று.

Saturday, February 23, 2008

"பாப்பாத்தி ஜெயலலிதா & ஏகாதிபத்திய தளபதி" பிறந்த நாள் விளம்பரங்களால் அல்லாடும் தமிழகம்

நாட்டின் பெரும்பாலான மக்களை வாழ்வின் விளிப்புக்கு அனுப்பின அம்மாவும், தளபதியும் தங்கள் பிறந்த நாளை வெகுவிமர்சியாக கொண்டாடி வருகின்றனர். திரும்பி பக்கம் எல்லாம் பேனர்கள், சுவரெழுத்துகள், விளம்பரங்கள்.

இதுல கூடுதலாக "பேனர்களை அகற்ற அரசு மீண்டும் நடவடிக்கை, 2 வார கெடு" என கேலிக்கூத்து ஒருபக்கம் நடக்கிறது


Monday, February 18, 2008

"Petrol விலையில் பாதியினை அரசுக்கு வரியாக மக்கள் செலுத்திதான் தீர வேண்டும்" - உலக வங்கி அடியாட்கள்

தற்போது Petrol விலை லிட்டருக்கு ரு 2ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ 1ம் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை காக்க இதை செய்தாக வேண்டியுள்ளது என மண்மோகன் சிங் அறிவிக்கிறார்.

இது போலவே புளுகும் கருணாநிதி, போலிகள் அனைவரின் கூற்றையும் இவர்களின் 60 ஆண்டு கால ஆட்சியின் பொருளாதாரம் என்னவென்பதையும் இவர்களின் அறிக்கைகளிலேயே உள்ளது.

நாட்டின் 70 % மக்கள் தினசரி வருமானம் ரூ20, கடந்த 10 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை, 19% மக்கள் தினமும் வாழ்க்கையினை ஓட்டுவது ரூ 9 வில், மனித வள மேம்பாட்டில் உலகில் 128 வது இடத்தில் இந்தியா உள்ளது , 30 கோடி மக்களின் வருமானத்தை வெறும் 20 பெரிய பணக்காரர்கள் கையில் வருமானமாக போய் சேருகிறது என்பன போன்றவைகள்....

இப்ப சொல்லுங்க இவர்கள் சொல்கிற பொருளாதாரம் யாரை குறிக்கிறது. நாளைக்கு இந்த விலையேற்றத்தை தொடர்ந்து வரும் கஷ்டங்களை எதிர்கொள்ள போவது யார்.

தெளிவாக தெரியும் விலையேற்றத்தால் அடையும் லாபம் அரசுக்கு வரியாகவும், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களையும் சென்று அடையும் என்பதும், விலையேற்றத்தால் வரும் கஷ்டங்களை ஏற்கனவே வீதிக்கு வந்துவிட்ட பொதுமக்களை சென்று கொல்லும் என்பதும்.

ஏற்கனவே இரண்டு வேளை உணவு ஒரு வேளை உணவாக மாறிவரும் நிலையில் அதனையும் விடுத்து பசியால் மரணம் அடையும் நிலையினை தான் மக்கள் எதிர்கொள்ள போகின்றனர்.

நாட்டின் ஆக பெரும்பாண்மை மக்களை பசி, பட்டினிக்கு ஆளாக்கும் தனியார்மயம் தாராளமயத்தினை அமுல்படுத்தும் இந்த மக்கள் எதிரிகளான ஓட்டுபொறுக்கிகளின் உண்மைமுகத்தை மக்கள் தெரிந்து கொண்டு போராட்டத்தை நிகழ்த்தாமல் இதெற்கெல்லாம் விடிவு என்பதே கிடையாது.

போராடாமல் வாழ முடியாது என்பதையே தினந்தோறும் அரசின் நடவடிக்கைகள் அறைந்து சொல்லும் செய்தியாக உள்ளது.

முதலாளிகளும், தொண்டு நிறுவனங்களும் தான் எல்லாத்துக்கும் என்றால் என்ன வெங்காயத்துக்கு நீங்கள்?

கல்வி வேணுமா அதற்கு தனியார் நிறுவனங்களுக்கு போய் காசு கொடுத்து படித்துக்கொள், மருத்துவம் வேணுமா அதற்கும் தனியார் மருத்துவமனைக்கும், செட்டிநாட் மருத்துவ நகரம் போன்றவற்றிர்க்கும் போய் காசு கொடுத்து பார்த்துக்கொள், வேலை வேணுமா அதற்கு பன்னாட்டு நிறுவனத்துக்கு போங்க என தினந்தோறும் வெளிப்படையாக கூவுகிறார் கருணாநிதி.இது போக மருத்துவ உதவி, கல்வி உதவி வேணுமா அதற்கு ஆதி பராசக்தி, அமிர்தானந்த மாயி, நாராயண பீடம் போய் மனு போடுங்க; மேலும்- தொண்டு நிறுவனங்களும் வந்து உதவி பண்ண சொல்கிறேன் என்கிறார்.


இப்படி எல்லாத்தையும் மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு எங்க(!) அரசு என்ன செய்யும் என்றால், சாராயம் விக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அவன் வாங்கி தந்த கார், பைக்கில் தனது அடியாள் படையினை அனுப்பி மக்களை ஒடுக்கும்., குறிப்பாக முதலாளிகளுக்கான வசதி வாய்ப்புகளை செய்து கொடுக்கும்.

இதன் மூலம் கருணாநிதி அறிவிப்பது:


"ஏகாதிபத்திய தாசன் தான்" நான் என்பதும்


"இந்த அரசு மூலம் மக்கள் நலனுக்கு எதுவும் செய்ய முடியாது" என்பதையும் தான்.

Sunday, February 17, 2008

"மதவாத சக்திகளுக்கு வாய்ப்பு தந்துவிட கூடாது" - ஆன்மிகவாதி கருணாநிதி

முன்னராக பாஜக என்ற "அக்மார்க்" இந்து மதவெறி அமைப்பை ஆதரித்து மத்தியில் அவர்களை ஆட்சியில் வைத்தவர் கருணாநிதி. அன்று அதே மதவெறியர்களால் குஜராத்-ல் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை படுகொலை செய்யப்பட்ட போது தனது பதவியினை தக்கவைத்து கொண்டு பெளனம் காத்தவர் தான் இந்த கருணாநிதி.

ராமன் பாலம் என்ற மதவெறி கும்பலின் பிரச்சாரத்தை முதலில் எதிர்த்தவர் பின்னர் இதே பதவிகளை தக்கவைத்து கொள்ள அதற்கு 'ராமர் சேது பாலம்' என்று கூட பெயர் வைக்கலாம் சாந்தியாகிவிட்டார்.

இன்று இவரது செயல்களை விமர்சிக்கும் கூட்டணிக் கட்சிகளை பார்த்து மிரட்டுகிறார் "மதவாத சக்திகளுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்து விடாதீர்கள்" என்று. பின்னர் நாராயண பீடத்தின் மருத்துவ உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று "அறிவும் ஆன்மீகமும் இரட்டைக் குழந்தைகள்" என்று பிரச்சாரம் செய்கிறார்.

Tuesday, February 12, 2008

சரத் அண்ணே வர்ராரு - ராதிகா அண்ணி வர்ராங்க!


2011-ல் எங்க ஆட்சி தான் என அறிவித்துகொண்டே அகில இந்திய நாடார் சாதி 'கட்சி' ஆரம்பித்து உள்ளார்கள் சரத்குமார் & ராதிகா என்ற சினிமா கழிசடைகள். இந்த இரண்டு கழிசடைகளின் வரலாற்றை மக்கள் ஒரு முறை மனக்கண்ணில் ஒட்டுபார்ப்பது நல்லது. ஏனெனில் எதிர்காலத்தில் உங்கள் வீதிகளில் இவர்கள் வரும்போது நீங்கள் எத்தனை செருப்படிகளை கொடுக்கனும் என தெரியனும் அல்லவா. அதனடிப்படையில் புதிய ஜனநாயகத்தில் வந்த - "நாட்டாமை யின் நப்பாசை சுயநலத்தின் பேராசை" என்ற கட்டுரையினை மறுபதிப்பு செய்கிறோம்.

*************************************************************

""நம் இலக்கு எப்பவுமே உயர்வாக இருக்கவேண்டுமென நினைப்பவன். எங்கள் சமத்துவக் கொள்கைகளை எடுத்துச் சென்று மக்களுக்காக உழைப்போம் என்று சொல்லமுடியும். சாதிக்கவும் முடியும். இப்பவும் சொல்கிறேன். 2011ம் வருடம் என்னை தமிழக முதல்வராகப் பார்ப்பீர்கள்.'' (19.9.07, குமுதம்) இப்படிப் பச்சையான சுயநலத்தைக் கக்கியிருப்பது ""அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி''யைத் தொடங்கியிருக்கும் சினிமாக் கழிசடை சரத்குமார். அவரது இரசிகர்களால் "பச்சைத் தமிழர்' என்று அழைக்கப்படும் சரத்குமாரை கழிசடை என்றும் சுயநலவாதி என்றும் மதிப்பீடு செய்வதற்குக் காரணம் நமது விருப்பமல்ல; இந்த "சுப்ரீம் ஸ்டாரி'ன் வரலாறே அப்படித்தான் உள்ளது.

தான் விஜயகாந்த் போல திடீரென்று அரசியலுக்கு வரவில்லை எனவும், பதினைந்து ஆண்டுகளாக இரண்டு கழகங்களிலும் தீவிரமாகப் பணியாற்றியவன் என்றும் தனது கட்சியைத் தொடங்கியதற்கான தகுதிகளை சரத்குமார் முன்வைக்கிறார். உண்மையில் இவரது தீவிரப் பணி என்னவாக இருந்தது?

இளைஞனாக இருந்த போது பெங்களூரு தினகரனில் பணியாற்றினார். பின்னர், பம்பாய் சென்று ஆணழகன் ஆனார். பிறகு, சென்னை வந்து வட்டித்தொழில் செய்தார். சினிமாவுக்கும் பைனானைஸ் செய்தார். சினிமாத் தொடர்பு வந்த பிறகு நடிக்க வாய்ப்பு கிடைத்து, வில்லனாக அறிமுகம் ஆனவர், இறுதியில் கதாநாயகனானார். ""நாட்டாமை'' திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவிற்கு வந்த ஜெயலலிதா முன்பு இரட்டை இலை சட்டை போட்டு சேவகம் செய்தார்.

இந்த அடிமையிடம் அனுமதி பெறாமலேயே ஜெயா டி.வியில் ""நாட்டாமை'' படம் வெளியிடப்பட்டது. இதனால் கோபம் கொண்டு தி.மு.க.வில் இணைந்தார். இப்படி இவர் அரசியலில் இணைந்ததற்கும், பிரிந்ததற்கும் கொள்கையோ, மக்கள் நலனோ காரணமல்ல. பால்கனியிலிருந்து இரசிகர்களை மந்தைபோலப் பார்க்கும் ஒரு நட்சத்திர கதாநாயகனது திமிர்தான் அவரது அரசியல் வாழ்வைத் தொடங்கி வைத்தது. இடையில், தங்களது பைனான்ஸ் தொழிலுக்காக கோடிக்கணக்கில் கடன் வாங்கி ராயப்பேட்டை நிதி நிறுவனத்தை திவாலாக்கிய நடிகர்களில் சரத்குமாரும் ஒருவராக இருந்தார். சொத்துப் பிரச்சினையாலும், நக்மா பின் சுற்றியதாலும் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். ராதிகாவின் கம்பெனிக்காக டி.வியில் ""கோடீஸ்வரன்'' நிகழ்ச்சியை நடத்தியபோது, ராதிகாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. சரத்குமாரின் கடனை ராதிகா அடைப்பது எனவும், சரத்குமார், ராதிகா கம்பெனிக்காக திரைப்படத்தில் நடிப்பது என்றும் வர்த்தக ரீதியில் பேசிக்கொண்டு இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

நடிகர் என்ற முறையிலும், ராதிகாவுக்கு கருணாநிதியுடன் உள்ள நெருக்கத்தாலும் 1998 நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கிடைத்து, திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார். இதை பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ளாமல், தி.மு.க. தொண்டர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். இதன் பின்புலமாக நாடார் சாதி பத்திரிகை அதிபர்களும், தொழிலதிபர்களும் சாதியை வைத்து சரத்குமாரை முன்நிறுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு தி.மு.க.விடமிருந்து இராஜ்ய சபா உறுப்பினர் பதவி சன்மானமாகக் கிடைக்கிறது.

ஆயினும் அவரது அதிகார வெறி அடங்கவில்லை. தனது இரசிகர்களை வைத்து மத்திய மந்திரி பதவி வேண்டும் என சுவரொட்டி ஒட்டச் செய்தார். நாடார்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என அச்சாதி பிரமுகர்களை வைத்துப் பிரச்சாரம் செய்ய வைத்தார். ஏதோ ஒரு பொங்கல் விழாவில் தயாநிதி மாறன், நடிகர் விஜயை வைத்து அஞ்சல் தலை வெளியிட்டார். இதனால் தன்னைப் புறக்கணித்து விட்டதாகப் புரளி பேசினார். அறிவாலயத்திற்கு வந்த சோனியா காந்தியிடம் தன்னை அறிமுகம் செய்யவில்லை என்று கோபித்துக் கொண்டார். அவமரியாதை அடைந்ததால் தி.மு.க.வை விட்டு விலகப்போவதாகக் கிசுகிசுக்களை உற்பத்தி செய்து பரப்பினார். எல்லாம் எலும்புத் துண்டு கிடைக்காதா என்ற நப்பாசைதான்.

ஆயினும் திருச்சியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் தான் சாகும் வரை கலைஞரின் தலைமையில் செயல்படுவதாகவும், செத்தால்கூட தன் உடல் மீது தி.மு.க கொடிதான் போர்த்தப் படவேண்டும் என முழங்கினார். முழங்கிய எச்சில் உலருவதற்குள் 2006 சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.கவில் இணைந்தார். இதற்காக சாராய மன்னன் விஜய மல்லையாவின் தனி விமானத்தில் பச்சைப்புடவை கட்டிய ராதிகாவுடன் மதுரை சென்று, பின்னர் ஆண்டிப்பட்டியில் பாசிச ஜெயாவிடம் போஸ் கொடுத்தவாறு சரணடைந்தார். இந்தச் சரணடைவு உண்மையில் ஒரு வர்த்தக பேரமாகும். இதன் வரவுசெலவு அம்சங்கள் சிங்கப்பூரில் சசிகலா நடராஜனுடன் பேசி முடிவு செய்யப்பட்டன. இதன்படி சரத்குமாருக்குக் கிடைக்க வேண்டிய கணிசமான தொகையும், ராடன் நிறுவனத்துக்கு அளிக்கப்படும் தொலைக்காட்சி நேரமும் உறுதி செய்யப்பட்டது.

ஆயினும் பேசியபடி எலும்புத் துண்டுகள் ஜெயலலிதாவால் தரப்படவில்லை. இதனால் கசமுசா ஏற்பட்டு ராதிகா அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார். சரத்குமாரும் தனக்கு அரசியல் செய்ய நேரமில்லை என்று யாரையும் குற்றம் சாட்டாமல் நாசூக்காக அ.தி.மு.கவிலிருந்து ராஜினாமா செய்தார். இறுதியில் நாடார் சாதி பிரபலங்கள், சரத்குமாரை வைத்து தனி ஆவர்த்தனம் தொடங்கினால் மற்ற கட்சிகளிடம் பேரம் நடத்த தோதாய் இருக்கும் என்று முடிவு செய்து தனிக்கட்சி ஆரம்பித்து விட்டனர். நாடார் சாதி மக்களை விற்றுக் காசு பார்ப்பதற்கென்றே "அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' தொடங்கப்பட்டிருக்கிறது. சரத்குமாரிடமிருந்து வரும் ஒவ்வொரு அரசியல் ரீதியான அறிக்கையிலும் அவரது வர்த்தக நோக்கம் மறைந்திருக்கும். தற்போது சன் டி.வி.யில் ராடன் டி.வி ஏராளமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதால், சன் டி.வி.யின் டி.டி.எச். ஒளிபரப்பை ஆதரித்தும் தி.மு.வைக் கண்டித்தும் சரத்குமார் அறிக்கை வெளியிடுகிறார்.

தற்போது சேது சமுத்திரத் திட்டத்தை ஒட்டி பா.ஜ.க எழுப்பிய இராமர் பாலம் பிரச்சினையில் இந்து மதவெறியர்களின் அணியில் இருந்து கொண்டு, ""இந்துக்களைப் புண்படுத்தியதற்காக கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று கொழுப்புடன் அறிக்கை விடுகிறார். "எதிர்காலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் மந்திரியாக மாட்டோமா' என்ற பேராசைதான்!

1966இல் காமராசரைக் கொலை செய்ய டெல்லியில் அவரது வீட்டுக்குத் தீ வைத்த இந்து மதவெறியர்களை ஆதரித்துக் கொண்டே, சாதி ஒட்டுக்களைக் கவர்வதற்காகவும், காசு வசூல் செய்து தின்னவும், காமராசருக்கு மணிமண்டபம் கட்டப்போவதாக முழங்கும் இந்தப் பிழைப்புவாதி, தென்மாவட்ட மக்களுக்கும் நாடார் சாதியைச் சேர்ந்த மக்களுக்கும் அப்பட்டமான எதிரி என்பதே உண்மை.

தனது சாதி மக்களை வைத்து உயர் பதவி அடையவேண்டும் என்று அரசியலில் குதிக்கும் சரத்குமார், உண்மையில் நாடார் மக்களுக்குச் செய்தது என்ன? தாமிரபரணி நீரை கொக்கோ கோலா நிறுவனம் உறிஞ்சி எடுப்பது அப்பகுதி விவசாயிகளுக்கு — அதில் கணிசமானோர் நாடார்கள் — இழைக்கப்படும் அநீதியாகும். இந்த அநீதிக்கு எதிராக சரத்குமார் வாய்திறக்கவில்லை என்பது மட்டுமல்ல; சமீபத்தில் கோக்கில் பூச்சி மருந்து கலந்திருப்பது சந்தி சிரித்து அதன் விற்பனை வீழ்ச்சியடைந்தபோது, சரத்குமாரின் மனைவி ராதிகா, ""கொக்கோ கோலா பாதுகாப்பானது''' என்று விளம்பரப் படத்தில் நடித்துச் சிபாரிசு செய்தார். நாடே காறி உமிழ்ந்தது. ஆனால், "நாட்டாமை'க்கு எச்சில் பிரச்சினை அல்ல; காசு மட்டும்தான் குறி.

சில்லறை வணிகர்களில் பெரும்பாலானோர் நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள். இவர்கள் வாழ்வை அழிக்க வந்துவிட்ட ரிலையன்ஸை எதிர்த்து வெள்ளையன் தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரவை தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்தபோது, "நாட்டாமை' ஆஸ்திரேலியாவில் டூயட் பாடிக்கொண்டிருந்தார். தன் சொந்த சாதி மக்கள் மீது இந்த வேடதாரி வைத்திருக்கும் நேசத்தின் இலட்சணம் இதுதான். தற்போது டைட்டானியம் ஆலை விவகாரத்திலும் ""இந்தியாவின் தொழில் தந்தையான டாடாவை நான் எதிர்க்கவில்லை. உரிய விலை கொடுங்கள் என்பதுதான் என் கோரிக்கை'' என்று தரகு வேலை பார்த்தார் இந்த வியாபாரி.

இத்தகைய பச்சையான சுயநல, சந்தர்ப்பவாத, துரோகிகள் கட்சி ஆரம்பிப்பதும், முதல்வராகப் போவதாகப் பேசித் திரிவதும் மக்களுக்கு மாபெரும் அவமானம். இந்த அவமானத்தைத் தீர்க்கவேண்டுமெனில் இத்தகைய பேர்வழிகள் அரசியல் என்று பேசினாலே அடித்துத் துரத்தவேண்டும் அல்லது முளைக்கும் போதே "மணிமண்டபம்' கட்டி விடவேண்டும். அதையும் குறிப்பாக நாடார் சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களே செய்து முடித்தால், சிறந்த முன்மாதிரியாகவும் அமையும்.
-பச்சையப்பன்

Monday, February 11, 2008

குழந்தைகளை கூட தாக்கும் மூலதனத்தின் அதிகாரப்பூர்வ அடியாட்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் 10.1.2008 அன்று, அயல்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய கைப்பையை பறித்ததற்காக, காவல் துறையால் கொடூரமாகத் தாக்கப்பட்ட ஒன்பது வயது சச்சின்(இடது) கடும் காயங்களுடன் இருக்க, அவரது ஐந்து வயது தங்கை பிந்தியா, வலி தாங்க முடியாமல் கதறுகிறார்.

"பன்னாட்டு நிறுவனங்கள் தான்டா 'எங்கள் எஜமானர்'கள்" - கமல்நாத் ஒப்புதல்


"ஏகாதிபத்திய திட்டமானாலும் பார்ப்பனீயத்துக்கு எதிராக என்றால் செய்ய மாட்டோம்" - 'அம்பி'கா சோனி


"தமிழகத்தை அன்னியனுக்கு முழுமையாக விற்காமல் ஓயமாட்டேன்" - கருணாநிதி அறிவிப்பு


"மத்திய அரசை கவிழ்க்க எங்க கம்பெனிக்கு அதிகாரம் இல்லை" - கார்ப்பரேட் பார்ட்டி ஆ·ப் இந்தியா (டாடாயிஸ்ட்) திட்டவட்ட அறிவிப்பு


"அடிமைசாசனத்தை இப்பவே நிறைவேற்றுங்கள்" - டேவிட் முல்போர்டு


Sunday, February 10, 2008

"ராமதாஸ் நல்லவர் தாங்க" - மறைந்த அறிஞர் அண்ணா அறிவிப்பு

சேது சமுத்தர திட்டத்தை தொடங்கி வைத்த, ஆதரித்த பாஜக, செயலலிதா போன்ற பார்ப்பன மதவெறி கும்பல் தற்போது ராமன் பாலம் என புராண புரட்டை கொண்டு மதவெறி அரசியலை நடத்தி வருகிறது. இதில் ராமன் குறித்து சிறிது சீறிய கலைஞர் பின்னர் பின் வாங்கினார். அவர் தலைக்கு விலை வைத்தவுடன் தான் திமுக அணிகளுக்கு சுயமரியாதை வந்தது, உடனே அதுவும் அடங்கியது.

ஆனால் ஆரம்பித்தில் இருந்தே இந்த ராமன் பாலம் புரட்டை ஒட்டிய பார்ப்பன மதவெறி கும்பலை, ராமதாஸ் உள்பட்ட எந்த ஓட்டுப்பொறுக்கியும் கண்டிக்க வில்லை.

சேது கால்வாய் என்பது பன்னாட்டு நிறுவனத்தின் லாபத்திற்கானது என்பது வெள்ளிடைமலை. ஆனால் பார்ப்பன பயங்கரவாதிகளின் ராமனுக்கு சாவுமணி அடிக்கும் என்பதில் இதனை நிறைவேற்றனும் என "ராமன் பாலம் என்பது புராண புரட்டு, பார்ப்பன மதவெறி கும்பலை விரட்டு" என்று தமிழகம் முழுவதும் ம.க.இ.க வும் அதன் தோழமை அமைப்புகளும் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் தான் பார்ப்பன மதவெறி எதிரான பிரச்சாரத்தை வீச்சாக எடுத்து சென்றது.

இன்று ஓட்டுப்பொறுக்கிகள் உள்ளிட்ட ஏகாதிபத்திய தாசர்கள் சேதுகால்வாயினை மாற்று வழியில் நிறைவேற்றினாலும் சரிதான் என பார்ப்பன புரட்டுக்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி கூறியவர்களில் 'ராமதாஸை' மற்றொரு ஏகாதிபத்திய அருவருடி 'வீரமணி' அவர்கள் கண்டித்து அறிக்கை விட்டார்.

இதில் "வீரமணிக்கு இதற்கு எந்த அருகதையும் இல்லை எனவும், அவருக்கு பதில் அளித்தும் தமிழ் ஓசையில் வந்த கட்டுரை"யினை கேள்விக்குள்ளாக்கியே இந்த பதிவு.

வீரமணிக்கு 'அருகதை' பற்றி உண்மையினை கட்டுரையில் சொல்லவில்லை என்பதால் அதனை முதலில் சொல்லிவிடுவோம்.

ஐயா வீரமணி அவர்கள் "பெரியார் புரா" என்ற அரசு சாரா நிறுவனத்தை ஆரம்பித்து மக்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக திரும்ப விடாமல் வேலைசெய்கின்ற - தலைமை என்.ஜி.ஒ வை நடத்துபவர். அரசியலில் கலைஞருடன் கூட்டு (தற்போது), தொழிலில் சசிகலா மருத்துவமனையுடன் கூட்டு என இரட்டை வேடம் போடுபவர். மேலும் "வாழ்வியல் சிந்தனைகள்" என "பணம் படைத்தவனுக்கு தான் இந்த உலகம், இல்லாதவன் இருப்பதை கொண்டு திருப்தி அடைய வேண்டும்" போன்ற அயோக்கியத்தனமான கருத்துகளை எழுதி தள்ளுபவர். மொத்தத்தில் பெரியார் என்ற சுயமரியாதைக்காரின் பெயரை வைத்துகொண்டு வியாபாரம் செய்துவரும் வியாபாரி.

ஆனால் இப்படி உண்மைகளில் ஒன்றைக்கூட சொல்லவில்லை தமிழ் ஓசை கட்டுரை. அதில் இரண்டு பதில்களை மட்டும் கொடுத்து உள்ளார்கள்.

ஒன்று தினமும் அறிவுரை சொல்வது தவறு என்பதற்கு, அது "ஜனநாயக கடமை" எனவும், தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி (சந்தர்ப்பவாதம்) மாறியவர் என்பதற்கு, "தேர்தல் நேரத்தில் கூட்டணி மாறலாம், அதனால் இலட்சியம் திசைமாறுவதாக கருதக் கூடாது என அண்ணாவே கூறியுள்ளார்" என அண்ணாவின் உரைகளை எடுத்து போட்டு இங்கு போலிக் கம்யூனிஸ்டுகளிலிருந்து யாருமே யோக்கியம் இல்லை ஆனா, பாமக வை மட்டும் குறைகூறுவது எப்படி?. மேலும் மக்களே இந்த குற்றசாட்டை ஏற்கனவே புறக்கணித்து விட்டார்கள் எனவும் அடித்து சொல்லி உள்ளார்கள்".

இப்ப பதில்களை அலசுவோம்:

அரசின் மக்கள்விரோத கொள்கையினால் மக்கள் அன்றாடம் செத்துகொண்டுவருகிறார்கள், ஆனால் நீங்க தைலாபுரம் தோட்டத்தில் உட்கார்த்து கருத்து சொல்லிவிட்டு அரசை ஆதரித்து நிற்கும் அயோக்கியத்தை எப்படீங்க ஏத்துகொள்ள வைக்க முற்படுகிறீர்கள். அந்த மக்கள் விரோத கொள்கையின் அடிப்படையான உலகமயம், தனியார்மயம், தாராளமயம் குறித்து உங்கள் கருத்தை வெளிப்படையாக சொல்ல முடியமா?. உங்களிலிருந்து சரத், விசயகாந்த, போலிகள் வரை எல்லோரும் இந்த கொள்கையினை ஏற்றுகொண்டவர்கள் தான். பின்னர் எப்படீங்க மக்கள் நலன், மக்கள் தொலைக்காட்சி என உதார்விடுகிறீர்கள்...

அடுத்து அண்ணா மேற்கோளை போட்டு கூட்டணியினை நியாயப்படுத்தியுள்ளது. ஏங்க, 'அண்ணா' என்ன யோக்கிய சிகாமணியா, அவர் சொன்னா அது நியாயமாகிவிடுமா?. முதலில் அவரையே நியாயப்படுத்த முடியாது என்பதே நிதர்சனம். திமுக எப்படி உருவானது என வரலாறு தெரியாதவங்க யாராவது இருந்தா அவங்க வேணா நம்பலாம். நீ கூட்டணி மாறிய பச்சைவோந்தி என்றால் அதற்கு, யார் தான் இங்க யோக்கியம் என கேள்வி எழுப்பி நியாயப்படுத்த முற்படுவது என்னையா நியாயம். அரசியல்வாதி என்றாலே கொலை, ஊழல் செய்வது இயற்கைதான் என்பதுபோல கூட்டணி என்ற சந்தர்ப்பவாதத்தை ஓட்டுபொறுக்கிகளின் இயல்பான ஒன்றாக நியாயப்படுத்த பார்க்கின்றீர்கள்.

மொத்தத்தில் கலைஞர், வீரமணி, ராமதாஸ் என யாருமே பார்ப்பன மதவெறி கும்பலை எதிர்கொள்ளவோ, மறுகாலனியாதிக்கத்தை எதிர்க்கவோ முடியாது. ஏனெனில் இதில் சமரசம் செய்து தான் தங்கள் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்தனர்.

அத்தியாவசிய பொருட்கள் குறித்து கவலைபடும் 'குடி'மக்கள் நாங்கதான் - ஜெ&கலைஞர்

பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தால் மக்கள் அவதிப்படாமல் இருக்க நியாய விலை கடைகளில் இதனை 6 மாதங்களாக வழங்குவதை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உள்ளதாக சட்டபேரவையில் கலைஞர் அறிவித்தார்.

இவ்வாறு பொருட்கள் வழங்கவில்லை என்பதே உண்மை. இதனை தற்போது 'புரட்சி தலைவி' செயலலிதா குற்றசாட்டை படித்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் மக்கள் இல்லை.

விசயத்துக்கு வருவோம்....

6 மாதங்களுக்கு முன் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைவாக இருந்ததாகவும், இன்னும் 6 மாதங்களில் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைந்துவிடும் எனவும் போல இருக்கிறது கலைஞரின் அறிவிப்பு. வாங்கும் சக்தி இல்லாமல் மக்கள் பசி,பட்டினிக்கு ஆளாகி கொண்டுவரும் நிலையில் எப்படி கதை விடுகிறார் பாருங்க. பொருட்கள் வழங்கவே இல்லை என்கிற போது அது எதுக்கு 6 மாதம் என கதை அளப்பது, பேசாம தொடர்ந்து கொடுப்போம் என கூட சொல்லவேண்டியது தானே. அவ்வாறு சொல்ல இவர்களால் முடியாது !

நியாயவிலை கடைகளில் இவ்வாறு பொருட்களை வழங்கும் அதிகாரம் இவர்களுக்கு இல்லை. உலக வங்கியிடமே உள்ளது இந்த அதிகாரம். அவன் கடையையே முட சொல்லி வரும் போது இதனை யோசிக்க கூட முடியாது. இதுல இன்னொரு ஓட்டுபொறுக்கி கழிசடை விசயகாந்த் என்னான்னா இந்த குறைந்தபட்ச அரசியல் கூட தெரியாமல் நான் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கே வந்து பொருட்கள் கொடுப்பேன் என கதைவிடுகிறது.

அத்தியாவசிய பொருட்கள் குறித்து கவலைப்படும் இவர்கள் யோக்கியதைக்கு ஒரு சான்று:-

மக்களை சிந்தனையினை மழுங்கடிக்கும் மதுக்கடையினை தமிழகத்தில் கொண்டு வந்த பெருமை 'முத்தமிழ்' கலைஞரை சாரும் என்றால் கடைகளை அதிகமாக்கி அரசே ஏற்று நடத்தும்படி செய்த பெருமை 'டாஸ்மாக்' செயலலிதாவை சாரும். அடுத்து மத்திய அமைச்சரவையில் பங்கு பெற்றுக்கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்து ஊதும் ராமதாஸ் குடும்பம் இது குறித்து பேசுவது ஓட்டுபொறுக்கி அரசியலில் தன்னை மாற்றாக காண்பிக்கதான். மற்றபடி இவர்கள் அனைவரும் உலகவங்கி ஆணைக்கு கட்டுபடும் அருவருடிகள் தான்.

"தமிழனை அழிப்பவன் தான் தமிழன்" - கலைஞர் பேச்சு

2 ரூபாய்க்கு அரிசி வாங்கித்தான் 'வாழ முடியும்' என தமிழனை ஆக்கியதில், செயலலிதாவை விட 5வது முறையாக முதலமைச்சராக இருக்கின்ற கருணாநிதிக்கு தமிழனை அழித்த 'பெருமை' உண்டு என்பதே நிதர்சனம்.

செயலலிதா தினமும் 20 மணி நேரம் "தமிழனை அழிக்க" பணியாற்றியதை மெச்சிய வீரமணி, சரத்குமார் போன்றோர் கூட கலைஞர் அவர்கள் தினமும் 4 மணிக்கு எழுந்து இதே பணியினை ஆற்றுவதை மறுக்க முடியாது.

இப்படி இவர்கள் அழித்த தமிழனை நாடெங்கும் வீதிகளில் காணலாம். ஆனால் ஓட்டுபொறுக்கிகளால் தான் பார்க்க முடியாது, ஏன்னா இவர்கள் தான் காரின் ஜன்னல்களை இறக்குவதே கிடையாதே.

அரசு 'டாஸ்மாக் கடை'யில் மட்டும் கூட்டம் இல்லைங்க, தனியார் 'கல்வி கடையிலும்' தான்!

சாந்தோம் பகுதியில் ஒரு கல்வி வியாபாரக் கடையில் எல்.கே.ஜி சீட் விற்பனை அறிவிப்பை தொடர்ந்து அலைமோதும் நடுத்தர வர்க்கம்.

மருத்துவ சேவையினை வியாபாரமாக மாற்றிய ஓட்டுப்பொறுக்கிகளின் அதிரடி நடவடிக்கை!

"சிறுநீரக கோளாரை விட சிறுநீரகத்தையே திருடுவதால் மக்களை சீக்கிரம் கொன்றுவிடலாம்"

'அப்பாவி ஈராக்கியனை கொன்றேன்' என ஒத்துக்கொண்ட அமெரிக்கனுக்கு வழங்கப்பட்ட சிறைதண்டனை வெறும் 4 மாதங்கள்!


Friday, February 8, 2008

"நாங்க மக்கள் விரோதிகள் தான்" - திமுக, அதிமுக ஒப்புதல் வாக்குமூலம்


விஜயாந்த், சரத்குமார் போன்ற புதிய ஓட்டுபொறுக்கி அரசியல் வாதிகள் கோடிக்கணக்கான ரூபாய் வாரி இறைத்து மக்களை கொள்ளையிட தயாராகிவருகின்றனர் என்றால் இதுலேயே பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் என்ன செய்வார்கள் என அரசியல் தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ள முடியும்.

இதுல புதிய விஷயம் என்னவென்றால், தமிழ் புத்தாண்டு தினத்தை அறிவித்த கலைஞருக்கு பாராட்டு விழா பிப் 9 நடக்கவிருக்கிறது இதற்காக வள்ளுவர்கோட்டம் ஒரு வாரமாக விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சென்னை மற்ற இடங்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதனை நம்ம 'புரட்சி' தலைவி அப்பாவியாக கண்டித்து உள்ளது தான் ஹைலெட். அடிதடி, ஊழல் எதுவானாலும் காமராஜர், அண்ணா இருந்து அனைவரும் செய்துவரும் நிகழ்வானாலும் இவர்கள் இதனை கண்டிக்கும் போது வராத நகைசுவை செயலலிதா கண்டிக்கும் போது வருகிறது. அந்த அளவுக்கு வெளிப்படையாக ஆட்டம் போட்ட நடிகை இவர்.

வளர்ப்பு மகன் திருமணம் உள்பட செயலலிதா செய்யாததா என மக்கள் இப்ப கேட்ட அதில் அர்த்தம் இருக்கும்.இதனையே எதிர்கேள்வியாக ஜெவுக்கு ஆற்காட்டார் கேட்கிறார்.
..
இந்த இரண்டு ஓட்டுபொறுக்கிகளும் நாங்க யார் என மக்களுக்கு அறிவிக்கின்றனர். மக்களும் இவர்கள் அனைவரையும் இணைத்து பார்த்து புரிந்து கொள்ளாமல் அவர்களின் சாதுரிய அறிக்கைகளை ரசிக்க பயிற்றுவிக்கப்பட்டு வருகிறார்கள்.

திறந்தவெளி பல்கலைகழகம் காசு சம்பாதிக்கதான் - அரசின் உறுப்பு அறிவிப்பு !

எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியின் முதல்வராக இளக்கலை பட்டம் பெறாமல் முதுநிலை பட்டம் பெற்ற ரமேஷ் அவர்களை நியமித்தது தவறு. உடனே அவரை பதவி விலக செய்து புதிய 12ம் பகுப்பு படித்து பட்டம் பெற்ற அறிவாளியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் நேரடி பட்டம் எதுவும் வேலை வாய்ப்புகளுக்கு தகுதியானதல்ல என தனது தீர்ப்பு-ல் கூறியுள்ளது. இதுவும் முதலில் வழக்கு வந்தவுடன் தள்ளுபடி செய்த நீதிமான்கள், பின்னர் உச்சநீதிமன்ற ஆணைக்கு பின் தன் கடமையினை செய்து (அ)நீதியை நிலைநாட்டியுள்ளது.

சரி விஷயத்துக்கு வருவோம்.

12ம் வகுப்பு வரை படிக்காமல் நேரடி பட்டம் பெறுவது வேலை வாய்ப்புக்கு தகுதியானதல்ல என்றால்.... என்ன புடுங்குவதற்கு அதனை வைத்து உள்ளீர்கள். மக்களின் அறிவை வளர்ப்பதற்கு என கதை விட்டுவிடாதீர்கள்.
..
12ம் வகுப்பு, பட்டங்கள் என உங்கள் அனைத்து கல்வி முறையும் அறிவியல் விரோதமானது என்பது வெட்டவெளிச்சம். வெந்தது,வேகாதது, அரைகுறை ஆங்கிலம் என அரைத்து கொண்டு, பன்னாட்டு பல்கலைகழகங்களுடன் கூட்டு சேர்ந்து அவனுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கும் ஏஜெண்டாக தான் செயல்படுகிறது உங்கள் கல்வி முறை. 80% மேல் தனியாரின் கைகளுக்கு கொடுத்துவிட்டீர்கள்.

1950-ல் இன்னும் பத்து ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி என சூளுரைத்தவர்கள் இதனை, 60 ஆண்டுகளாகியும் நிறைவேற்ற முடியவில்லை. படிப்பை பாதியில் விட்டவர்கள், பள்ளிக்கே செல்லாதவர்களில் சிலர் இந்த நேரடி பட்டம் முடிக்கின்றனர். இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய இதே அரசுதான் 'வேலைவாய்ப்புகானது அல்ல நேரடி பட்டம்' என அறிவிக்கிறது.


"வேலைவாய்ப்பு கிடைக்கும்"- காங், திமுக, பாஜக விலிருந்து போலிகள் வரை விடுக்கும் ஒரே புருடா இதுதான்!

நெப்போலியன் என்ற திடீர் பணக்கார அரசியல் ரவுடி புதிதாக ஆரம்பித்துள்ள ஜீவன் டெக்னாலஜிஸின் கட்டிடத்தை திறந்து வைக்கும் போது கலைஞர் நாட்டை 19 மாதங்களில் எத்தனை கம்பெனிகளுக்கு கூட்டுகொடுத்தோம், காலையில கூட சில ஒப்பதங்கள் போட்டுவிட்டு தான் வந்து உங்கள் முன் அமர்ந்து உள்ளேன் என தனது துரோகத்தை 'மக்கள் நலன்' என கட்டுரை வாசித்தார்.

ஆனால் ஏன், நாட்டை பன்னாட்டு கம்பெனிகளுக்கும் தரகு முதலாளிகளுக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதற்கு உண்மையான காரணத்தை எந்த ஓட்டுபொறுக்கி அரசியல்வாதியும் கூறமாட்டான்.இவனுங்களாகவே வேலைவாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும் என அறிவித்துவிடுகிறார்கள். அதற்கும் மீறி நந்திகிராம் போன்ற போராட்ட மக்களை எதிர்கொள்ளும் போது இதே கதையை தான் அளிக்கின்றனர்.

எதற்கெடுத்தாலும் வேலைவாய்ப்பு என நாட்டின் அனைத்து வளங்களையும் தாரை வார்க்கும் இவர்களை மக்கள் அறிந்து கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை.

அதிகாரத்தை கொடுங்கடா நாங்க பார்த்துகொள்கிறோம், வேலை வாய்ப்பு என்ற பெயரில் நாட்டை ஏன்டா பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாக்குறீங்க என மக்கள் மார்க்சிய - லெனினிய பாதையில் அணிவகுக்கும் போது இந்த அருவருடி கூட்டம் கொல்லைப்புறம் வழியாக ஓடிக்கொண்டு இருக்கும்.

ஓட்டுபொறுக்கி அரசியலுக்கு நான் புதிவன் அல்ல ! - சரத் குமார்

Related:

நாங்க தான் அமைச்சரவையில் முடிவு எடுத்தோம், இப்ப போராட்டம் என நடிக்குறோம் - ராமதாஸ் சவால்


மலையளவு பன்னாட்டு கம்பெனிகள் குவிந்தாலும் நான் சமாளிப்பேன் - கலைஞர் கலக்கல் பேட்டிFriday, February 1, 2008

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!


நன்றி லேமூரியன்

அதாவது நாங்க ஒரு ஆள்தான் பார்ப்ப்னியத்த எதிர்க்குறோம், நாங்கதான் உண்மையான பார்ப்பன எதிர்ப்பாளர்கள் அப்படின்னெல்லாம் மார் தட்டிக் கொண்டு அலைஞ்சவங்க எல்லாம் இப்போ பார்ப்ப்னியம் மேலே ஏறி நின்னு அடிக்கும் போது எங்கியோ போய் ஒளிஞ்சுக்கிட்டாங்க. அது தனிக் கதை.இப்போ விசயம் என்னன்னா, பார்ப்பனியத்தோட அடியாள் படை, ரவுடி, கழிசடை கும்பல் துப்பாக்கியோட மத்திய பிரதேசத்துல ஊர்வலம் போயிருக்கானுங்க. அது 30ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரசில் செய்தியா வந்திருக்கு. இதே RSS கும்பலோட அல்லக்கை அமைப்பான பஜ்ரங்தள் ஆளுங்க 2007 ஆரம்பத்தில் மஹாராஸ்டிர நாண்டட்டில் குண்டு தயாரிக்கும் போது வெடித்து மாட்டிக்கிட்டாங்க. அப்பொதான் RSS நாக்பூர் ஆபிசுக்கு குண்டு வைச்சது, வெறு சில மசூதிகளில் குண்டு வெச்சது எல்லாம் இவந்தான்னு தெரிஞ்சது. குண்டு வைச்சிட்டு பலிய முஸ்லீம் மேல போட வசதியா முஸ்லீம் குல்லா முதலான தயாரிப்புகளோட நாண்டட்டில் மாட்டிக்கிட்டாங்க.இது தவிர்த்து சாஹா பயிற்சி முகாம்களில் துப்பாக்கி பயிற்சி எடுப்பது குறித்து பத்திரிக்கைகளில் படங்களுடன் செய்திகள் வந்தது. இதற்க்கெல்லாம் சிகரம் வைச்ச மாதிரி, குஜராத கலவரத்தில் ராக்கெட் லாஞ்சர் டைப் வெடிகுண்டுகள் பயன்படுத்தியதாக தெஹல்கா விடியோவில் பேசினான் ஒரு எம்.எல்.ஏ. இப்போ போதாக்குறைக்கு RSS கும்பல் IT துறையில் வேறு நேரடியாக நுழைந்துவிட்டது.இப்படி ஒரு அதி பயங்கரவாத கும்பாலா இருந்தாக் கூட இவனுக்கு இந்த அரசு எல்லா பாதுகாப்பும் வழங்கும். ஏன்னா இந்த அரசே ஒரு பார்ப்பனிய அரசுதான். இது தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறாங்க சில பார்ப்பன எதிர்ப்பாளர்கள். அவிங்கள் நினைச்சாதான் பாவமா இருக்கு.பார்ப்பினியம் தெளிவாக உள்ளது, இந்த அரசாங்க அமைப்பை நம்பி தனது செய்ல்பாடுகள் இல்லை என்பதில். மாறாக இந்த அரசின் இயல்பில்தான் தனது பலத்திற்க்கான ஊற்று மூலம் உள்ளது என்பது அதற்க்கு தெளிவாக தெரிந்த காரணத்தினால்தான் அரசாங்கம் அமைக்கும் விசயத்தில் ஏற்ப்படும் பின்னடைவுகளை அது பொருட்படுத்துவதில்லை.ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் இந்தியாவில் பார்ப்னியத்தை வீதிகளில் சந்தித்து அடிக்காத வரை பார்ப்பனியத்துக்கு கவலையில்ல.செய்திரசம்Related Articles:

“குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்”
இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் …
பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும…

இந்தியர்கள் வாழ்க்கையை ஒட்டுவது வெறும் 12 ரூபாயில்..!!!டெல்லி: பெரும் எண்ணிக்கையிலான நகர் பகுதி இந்தியர்கள் ஒரு நாளைக்கு வெறும் 19 ரூபாயில் தான் வாழ்க்கையை ஒட்டுகின்றனர் என தேசிய அளவிலான ஆய்வு தெரிவிக்கிறது.

நகர்ப் பகுதிகளில் இது 12 ரூபாயாக உள்ளது.கிராமப் பகுதிகளில் 19 சதவீத மக்கள் உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் ஒரு நாளைக்கு வெறும் ரூ. 12 மட்டுமே செலவிடும் பொருளாதார நிலையில் உள்ளனர்.

நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 22 சதவீதம் பேர் ரூ. 19 மட்டுமே செலவிடும் நிலையில் உள்ளனர்.தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் (National Sample Survey Organisation) 2005-06ம் ஆண்டு நடத்திய ஆய்வு இந்த விவரங்களைத் தெரிவிக்கிறது.கிராமப் பகுதிகளில் சராசரி இந்தியர்கள் செலவிடும் ஒவ்வொரு ரூபாயிலும் 53 பைசா உணவுக்கே செல்கிறது.

நகர் பகுதிகளில் இது 40 பைசாவாக உள்ளது.ஒரு பக்கம் பங்குச் சந்தையில் குறியீட்டு எண் பாய்கிறது, சரிகிறது. இன்னொரு பக்கம் இந்தியா 9 சதவீத வளர்ச்சி அடைந்து வருகிறது என்று மத்திய அரசு கோஷம் போடுகிறது.

ஆனால், நாட்டில் கிட்டத்தட்ட கால்வாசி மக்கள் 'அரை டாலர்' வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


http://thatstamil.oneindia.in/news/2008/02/01/india-substantial-no-of-indians-spend-less-20.html


Related:
..

  • இணைப்புகள்

  •