Sunday, February 24, 2008

"மக்களை கொன்றால் சிறப்பு காவல், மக்களுக்காக போராடினால் சிறப்பு அதிரடிப்படை" - இந்திய ஓட்டுப்பொறுக்கி ஜனநாயகம்


பீகாரில் கொலைகுற்றவாளியாக சந்தேகித்த ஒருவரை காவல் நிலையத்திலிருந்து இழுத்து வந்து அடித்து கொன்று உள்ளார்கள் எதிர்தரப்பினர். இதற்கு காவல் துறை பலத்தகாவல். இதற்கு முன் பலமுறை இது போன்ற சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இதுவும் நிகழ்ந்துயுள்ளது.

இதனை பின்புலமாக கொண்டு இந்திய ஜனநாயகத்தின் மற்றோரு முகத்தை கொஞ்சம் ஆராய்வோம்.

மக்கள் விரோதிகளான பன்னாட்டு நிறுவனங்களுக்கும், நிலவுடைமை பண்ணைகளுக்கும் சேவை செய்வதற்காகவே இந்திய அரசை 1947ல் உருவாக்கினர். ஆனால் மக்கள் நலனுக்கானது 'இந்திய அரசு' என்ற கருத்து உருவாக்கப்பட்டு ஓட்டுபொறுக்கிகளாலும், கல்வி & மதம் போன்ற நிறுவனங்களாலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இன்று நாடு மறுகாலனியாக்கப்படுவதும், இந்து பயங்கரவாத அமைப்புகளும் வெகுவிரைவாகவும் - வெளிப்படையாகவும் வளர்ந்து வருகிறது. சமீபத்திய உதாரணங்களான 123 அடிமைசாசனமும், ராமன் பால புரட்டையும் நாம் பார்க்கலாம்.

123 ஒப்பந்தத்தை விரைவாக நிறைவேற்றும் பணி போலிக்கம்யூனிஸ்டுகளின் பலத்த ஆதரவுகளுடன் நடைபெற்றுவருகிறது. பாஜக இதனை ஆரம்பித்தது முதல் திமுக கனிமொழி, ராமதாஸ் வரை அனைவரின் கரகோஷ ஆதரவோடு நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. வெளிப்படையாகவே 123 நாட்டுக்கு நலன்பயக்கும் என்று இந்த கயவர் கூட்டம் சொல்லுவதை விட "மறுகாலனியாக்கத்துக்கு இந்திய அரசு பீடுநடை போடுவதற்கு" சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

இதே போல சேது கால்வாய் திட்டத்தை ஆரம்பித்த பாஜக & அதிமுக பார்ப்பன கும்பல் இன்று ராமன் பால புராண புரட்டை கொண்டு அரசியல் செய்து வருவதும் அதற்கு நீதிமன்றம் அங்கிகாரம் தருவதும் வெள்ளிடைமலை. மேலும் குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை படுகொலை செய்ததை 'தெகல்கா' என்ற இதழ் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியும் அது குறித்து எந்த நடவடிக்கைகளும் இல்லை. இவையெல்லாம் இந்து பயங்கரவாத அமைப்புகளின் வளர்ச்சியினையே காட்டுகிறது.

மேலும் இன்று 'ராஜ் தாக்ரே' என்ற பார்ப்பன பாசிஸ்ட் மக்கள் பிரச்சனையினை திசைதிருப்பி ஆதாயம் அடையும் நோக்கத்தோடு வேற்று மாநிலத்துகார்கள் வருகையினால் தான் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என சொல்லி தனது குண்டர் படையினர் மூலம் மக்களை அடிக்கிறான். ஆனால் அவன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இதன் அடிப்படையிலேயே மக்கள் நலனுக்கான எதையும் இந்த அரசின் மூலம் பெற முடியாது என்பதை மக்களுக்காக போராடும் அமைப்புகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர்.

இவ்வாறு சோனியா, அத்வானி, மோடி, ராஜ்தாக்ரே, கலைஞர், ஜெ, ராமதாஸ்.................... போன்ற அனைத்து மக்கள் விரோதிகளும் Z பிரிவு உள்பட பலத்த பாதுகாப்புடன் இருக்கின்றனர்.

இவர்களால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான மக்களின் நலனுக்கான போராடுபவர்களை கண்டு அஞ்சி நடுங்கும் ஆளும் வர்க்கம் 'சிறப்பு அதிரடிபடை'யும், அதற்கு கோடிக்கணக்கான பணமும் செலவுசெய்து வருகிறது.

No comments:

  • இணைப்புகள்

  •