Sunday, February 10, 2008

அத்தியாவசிய பொருட்கள் குறித்து கவலைபடும் 'குடி'மக்கள் நாங்கதான் - ஜெ&கலைஞர்

பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தால் மக்கள் அவதிப்படாமல் இருக்க நியாய விலை கடைகளில் இதனை 6 மாதங்களாக வழங்குவதை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உள்ளதாக சட்டபேரவையில் கலைஞர் அறிவித்தார்.

இவ்வாறு பொருட்கள் வழங்கவில்லை என்பதே உண்மை. இதனை தற்போது 'புரட்சி தலைவி' செயலலிதா குற்றசாட்டை படித்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் மக்கள் இல்லை.

விசயத்துக்கு வருவோம்....

6 மாதங்களுக்கு முன் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைவாக இருந்ததாகவும், இன்னும் 6 மாதங்களில் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைந்துவிடும் எனவும் போல இருக்கிறது கலைஞரின் அறிவிப்பு. வாங்கும் சக்தி இல்லாமல் மக்கள் பசி,பட்டினிக்கு ஆளாகி கொண்டுவரும் நிலையில் எப்படி கதை விடுகிறார் பாருங்க. பொருட்கள் வழங்கவே இல்லை என்கிற போது அது எதுக்கு 6 மாதம் என கதை அளப்பது, பேசாம தொடர்ந்து கொடுப்போம் என கூட சொல்லவேண்டியது தானே. அவ்வாறு சொல்ல இவர்களால் முடியாது !

நியாயவிலை கடைகளில் இவ்வாறு பொருட்களை வழங்கும் அதிகாரம் இவர்களுக்கு இல்லை. உலக வங்கியிடமே உள்ளது இந்த அதிகாரம். அவன் கடையையே முட சொல்லி வரும் போது இதனை யோசிக்க கூட முடியாது. இதுல இன்னொரு ஓட்டுபொறுக்கி கழிசடை விசயகாந்த் என்னான்னா இந்த குறைந்தபட்ச அரசியல் கூட தெரியாமல் நான் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கே வந்து பொருட்கள் கொடுப்பேன் என கதைவிடுகிறது.

அத்தியாவசிய பொருட்கள் குறித்து கவலைப்படும் இவர்கள் யோக்கியதைக்கு ஒரு சான்று:-

மக்களை சிந்தனையினை மழுங்கடிக்கும் மதுக்கடையினை தமிழகத்தில் கொண்டு வந்த பெருமை 'முத்தமிழ்' கலைஞரை சாரும் என்றால் கடைகளை அதிகமாக்கி அரசே ஏற்று நடத்தும்படி செய்த பெருமை 'டாஸ்மாக்' செயலலிதாவை சாரும். அடுத்து மத்திய அமைச்சரவையில் பங்கு பெற்றுக்கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்து ஊதும் ராமதாஸ் குடும்பம் இது குறித்து பேசுவது ஓட்டுபொறுக்கி அரசியலில் தன்னை மாற்றாக காண்பிக்கதான். மற்றபடி இவர்கள் அனைவரும் உலகவங்கி ஆணைக்கு கட்டுபடும் அருவருடிகள் தான்.

No comments:

  • இணைப்புகள்

  •