Friday, February 8, 2008

திறந்தவெளி பல்கலைகழகம் காசு சம்பாதிக்கதான் - அரசின் உறுப்பு அறிவிப்பு !

எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியின் முதல்வராக இளக்கலை பட்டம் பெறாமல் முதுநிலை பட்டம் பெற்ற ரமேஷ் அவர்களை நியமித்தது தவறு. உடனே அவரை பதவி விலக செய்து புதிய 12ம் பகுப்பு படித்து பட்டம் பெற்ற அறிவாளியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் நேரடி பட்டம் எதுவும் வேலை வாய்ப்புகளுக்கு தகுதியானதல்ல என தனது தீர்ப்பு-ல் கூறியுள்ளது. இதுவும் முதலில் வழக்கு வந்தவுடன் தள்ளுபடி செய்த நீதிமான்கள், பின்னர் உச்சநீதிமன்ற ஆணைக்கு பின் தன் கடமையினை செய்து (அ)நீதியை நிலைநாட்டியுள்ளது.

சரி விஷயத்துக்கு வருவோம்.

12ம் வகுப்பு வரை படிக்காமல் நேரடி பட்டம் பெறுவது வேலை வாய்ப்புக்கு தகுதியானதல்ல என்றால்.... என்ன புடுங்குவதற்கு அதனை வைத்து உள்ளீர்கள். மக்களின் அறிவை வளர்ப்பதற்கு என கதை விட்டுவிடாதீர்கள்.
..
12ம் வகுப்பு, பட்டங்கள் என உங்கள் அனைத்து கல்வி முறையும் அறிவியல் விரோதமானது என்பது வெட்டவெளிச்சம். வெந்தது,வேகாதது, அரைகுறை ஆங்கிலம் என அரைத்து கொண்டு, பன்னாட்டு பல்கலைகழகங்களுடன் கூட்டு சேர்ந்து அவனுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கும் ஏஜெண்டாக தான் செயல்படுகிறது உங்கள் கல்வி முறை. 80% மேல் தனியாரின் கைகளுக்கு கொடுத்துவிட்டீர்கள்.

1950-ல் இன்னும் பத்து ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி என சூளுரைத்தவர்கள் இதனை, 60 ஆண்டுகளாகியும் நிறைவேற்ற முடியவில்லை. படிப்பை பாதியில் விட்டவர்கள், பள்ளிக்கே செல்லாதவர்களில் சிலர் இந்த நேரடி பட்டம் முடிக்கின்றனர். இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய இதே அரசுதான் 'வேலைவாய்ப்புகானது அல்ல நேரடி பட்டம்' என அறிவிக்கிறது.


No comments:

  • இணைப்புகள்

  •