Monday, February 18, 2008

"Petrol விலையில் பாதியினை அரசுக்கு வரியாக மக்கள் செலுத்திதான் தீர வேண்டும்" - உலக வங்கி அடியாட்கள்

தற்போது Petrol விலை லிட்டருக்கு ரு 2ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ 1ம் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை காக்க இதை செய்தாக வேண்டியுள்ளது என மண்மோகன் சிங் அறிவிக்கிறார்.

இது போலவே புளுகும் கருணாநிதி, போலிகள் அனைவரின் கூற்றையும் இவர்களின் 60 ஆண்டு கால ஆட்சியின் பொருளாதாரம் என்னவென்பதையும் இவர்களின் அறிக்கைகளிலேயே உள்ளது.

நாட்டின் 70 % மக்கள் தினசரி வருமானம் ரூ20, கடந்த 10 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை, 19% மக்கள் தினமும் வாழ்க்கையினை ஓட்டுவது ரூ 9 வில், மனித வள மேம்பாட்டில் உலகில் 128 வது இடத்தில் இந்தியா உள்ளது , 30 கோடி மக்களின் வருமானத்தை வெறும் 20 பெரிய பணக்காரர்கள் கையில் வருமானமாக போய் சேருகிறது என்பன போன்றவைகள்....

இப்ப சொல்லுங்க இவர்கள் சொல்கிற பொருளாதாரம் யாரை குறிக்கிறது. நாளைக்கு இந்த விலையேற்றத்தை தொடர்ந்து வரும் கஷ்டங்களை எதிர்கொள்ள போவது யார்.

தெளிவாக தெரியும் விலையேற்றத்தால் அடையும் லாபம் அரசுக்கு வரியாகவும், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களையும் சென்று அடையும் என்பதும், விலையேற்றத்தால் வரும் கஷ்டங்களை ஏற்கனவே வீதிக்கு வந்துவிட்ட பொதுமக்களை சென்று கொல்லும் என்பதும்.

ஏற்கனவே இரண்டு வேளை உணவு ஒரு வேளை உணவாக மாறிவரும் நிலையில் அதனையும் விடுத்து பசியால் மரணம் அடையும் நிலையினை தான் மக்கள் எதிர்கொள்ள போகின்றனர்.

நாட்டின் ஆக பெரும்பாண்மை மக்களை பசி, பட்டினிக்கு ஆளாக்கும் தனியார்மயம் தாராளமயத்தினை அமுல்படுத்தும் இந்த மக்கள் எதிரிகளான ஓட்டுபொறுக்கிகளின் உண்மைமுகத்தை மக்கள் தெரிந்து கொண்டு போராட்டத்தை நிகழ்த்தாமல் இதெற்கெல்லாம் விடிவு என்பதே கிடையாது.

போராடாமல் வாழ முடியாது என்பதையே தினந்தோறும் அரசின் நடவடிக்கைகள் அறைந்து சொல்லும் செய்தியாக உள்ளது.

1 comment:

அசுரன் said...

இந்த அரசு தான் இன்னும் நீடித்து இருப்பதற்க்கு எந்தவொரு அருகதையும் அற்றதாய் ஒரு ஒட்டுண்ணி அரசாக அம்மணமாக நிற்கிறது என்பதற்க்கு இவையெல்லாம் சாட்சிகளாக நிற்கின்றன.

அசுரன்

  • இணைப்புகள்

  •