Thursday, January 31, 2008

"ஆங்கிலேயனுக்கு அடியாலாக இருந்த தேச துரோகியின் அஸ்தி கரைப்பு"

மும்பை: மகாத்மா காந்தியின் கடைசி அஸ்திக் கலசம் இன்று அரபிக் கடலில் கரைக்கப்படுகிறது.மகாத்மா காந்தி, 1948ம் ஆண்டு, ஜனவரி 30ம் தேதி டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று அவரது 60வது ஆண்டு நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.காந்தியின் மறைவுக்குப் பின்னர் அவரது அஸ்தி நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆறுகள், நதிகளில் கரைக்கப்பட்டன.
....
வெள்ளைக்காரனுக்கு வேலை செய்து நாட்டை காட்டி கொடுத்த துரோகி 'காந்தி'. ஆனா திட்டமிட்டு மூடிமறைத்து ஆளும் வர்க்கம் அவரை தேச தந்தையாக காட்டுகிறது. ஆனால் 60 ஆண்டுகால சுதந்திரத்தின் யோக்கிதை என்னவென்றும், நாடு வளரும் என்று மண்மோகன், சிதம்பரம் என அருவருடிகள் இன்னும் புருடா விடுவதில் இருந்து ஒப்பிட்டு பார்த்து தெரிந்து கொள்ளனும், எவனுக்கு ஆதர்வாக காந்தி செயல்பட்டார் என.

இதற்கு பகத்சிங் பார்வையில் அணுக வேண்டும். இதேபோல காந்தியின் இந்து மதவெறியினை கண்டுகொள்ள பெரியாரையும், அம்பேத்காரையும் படிக்க வேண்டும். அப்போது தான் இன்று நாடு மறுகாலனியாக்கப்படுவதற்கும், இந்து பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுவதற்கும் 'காந்தி செய்த வேலை'யினை தெரிந்து கொள்ள முடியும்.
.

Wednesday, January 30, 2008

"கழிப்பறை கட்டமாட்டோம், ஆனா ரோட்டில 'பிஷ்' அடிச்ச பிடிப்போம்" - ரிப்பன் மாளிகை அதிரடி

சென்னை மட்டுமல்ல, நாடு முழுவதும் பொது இடங்களில் கழிப்பறை என்பதே கட்டிக் கொடுக்கப்படவில்லை. இப்படி கழிப்பறையினை கட்டிக்கொடுக்காமல், மக்கள் சாலைஓரமாக சிறுநீர் கழித்தால் ரூ100 அபராதம் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. அதே போல மக்கின குப்பை, மக்காத குப்பை என பிரித்து கொடுக்காத சென்னை வீட்டு மக்களிடம் அபராதமாக ரூ 100ம், மருந்து சம்பந்தமான குப்பையினை சரியாக பிரிக்காதவர்களுக்கு அபராதமாக ரூ 500ம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


95% கழிப்பறைகளே இல்லை. மீறி இருந்தாலும் கட்டணக்கழிப்பறை என, சிறுநீர் கழிப்பதற்கே இரண்டு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அரிசியே இரண்டு ரூபாய்க்கு விற்றால்தான், மக்கள் வாங்க முடியும் & வாழ முடியும் என்ற நாட்டில் தான், 'பிஷ்' அடிப்பதற்கு இரண்டு ரூபாய் எனபதும், சாலை ஓரமாக அடிப்பவர்களுக்கு அபராதமாக 100 ரூபாய் என அறிவித்து உள்ளனர் என்பதை பொருத்தி - இந்த செய்திகளை பார்க்கும் போது தான் 'ஓட்டுப்பொறுக்கி அரசியலை' புரிந்து கொள்ள முடியும்.

"உலக நாட்டு மக்களை அழிக்கும் வரிசையில் அடுத்து ஈரான்" - போர்வெறியன் புஷ் அறிவிப்பு

அணுஆயுத தயாரிப்பை நிறுத்தாவிட்டால் ஈரான் மீது போர் தொடுப்போம் என புஷ் எச்சரிக்கை விடுத்து உள்ளான். உலகில் அணுஆயுதத்தினை முதல் முதலில் பயன்படுத்தி ஜப்பானில் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தது தான் இந்த அமெரிக்கா. அடுத்தடுத்து மூன்றாம் உலக நாடுகள், எண்ணெய் வளங்கள் உள்ள நாடுகள் மீது போர் தொடுத்து கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்தது அமெரிக்கா. இதில் சமீபத்தில் ஈராக்கில் அணுஆயுதம் இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்து அந்த நாட்டை கபளிகரம் செய்தது.

இதனுடைய தொடர்ச்சியாக தான் தற்போது அடுத்த குறியாக ஈரானை தேர்தெடுத்து உள்ளான் அமெரிக்க போர்வெறியன் புஷ்.

"மக்கள் மூளைகளை மழுங்கடிக்கும் சாராயக்கடைகள்" - இந்தியாவில் தமிழகத்திற்கு 3வது இடம்

இன்று நாட்டை மீண்டும் காலனியாக்கப்படுவது வெகு விரைவாக நடந்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கு இந்திய அருவருடிகள் இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டு வருகின்றனர். இதனை மக்கள் உணராதபடி (அதாவது நாடு அடிமையாகி கொண்டுவருவதை) இருக்க கல்வி நிறுவனங்கள், மத நிறுவனங்கள் போன்றவற்றின் மூலம் இந்த மறுகாலனியாதிக்கத்தை ஆதரித்தும், இதனை மக்கள் தானே ஏற்றுகொள்ளுமாறும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது; கலாச்சார சிரழிவுகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இவற்றுடன் மக்களின் சிந்தனையினையே மழுங்கடிக்கும் வகையில் சாராயக் கடைகள் நடத்தப்படுகிறது.


இந்தியாவில் காந்தி என்ற ஆங்கிலேயனின் அடியாளின் நினைவாக குஜராத்தில் மட்டும் (அங்கு 'கள்ளச்சாராயகம்' என்ற ஆறே ஓடுகிறது) மதுவிலக்கு அமல் செய்துவிட்டு மற்ற பகுதிகளில் சாராய வியாபாரம் வெகு விமர்சியாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் சாராடக்கடைகளை அரசே ஏற்று நடத்தி சாதனை படைத்துவிட்டது. இப்போது இன்னொரு சாதனையாக சாராய விற்பனையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை எட்டியுள்ளது.


நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பதில், தமிழகத்தில் தினமும் ஒரு பன்னாட்டு கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்து உழைத்து வரும் கலைஞர் அவர்கள், சாராய விற்பனையில் சாதனை படைத்து உள்ளார் என்பதை பொருத்தி பார்க்க வேண்டும். அதாவது மக்கள் சிந்தனையினை மழுங்கடிப்பதன் மூலமே உலகமயமாக்கலை விரைவாக அமல்செய்ய முடியும்.அதில் சாராயத்தை பங்கை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்து உள்ளனர்.


இதேவேளையில் சாராயத்தை எதிர்க்கும் பாமக, மந்தியிலும் மாநிலத்திலும் கூட்டணி வைத்துக்கொண்டு அதன் உலகமயமாக்கல் கொள்கையினை ஆதரித்து வருகிறது. மக்களை பசி,பட்டினிக்கு ஆளாக்கும் மக்கள் விரோத கொள்கையான உலகமயமாக்கலை எதிர்க்காமல் 'சாராயத்தை எதிர்க்கிறோம், தமிழை பாதுகாப்போம்' என இது போன்ற எதிர்கால கலைஞர்களும் (ராமதாஸ்), ஜெயலலிதாக்களும் (விசயகாந்த்) கதை அளந்து வருகின்றனர். மீண்டும் புதிய அருவருடிகளிடம் நாட்டை ஒப்படைப்பதால் ஒரு விமோசனம் இல்லை என்பதை மக்கள் உணரும் போதுதான் இதனை முடிவுக்கு கொண்டு வரமுடியும்.


"மக்கள் உயிரினை அழிப்பவனுக்கே தண்டனை கொடுக்காத நாட்டில் உடல் உறுப்பினை திருடுபவனுக்கு என்ன தண்டனை கொடுக்க முடியும் இவர்களால்"

Tuesday, January 29, 2008

"தனியார் என்றாலே லாபநோக்கமாகத்தான் செயல்படுவான் என தெரியாது" - அமைச்சர் அன்பழகன் சுற்றும் 'பூ'

தமிழ்நாட்டில் கல்லூரிகள் வணிக நோக்கத்துடன் செயல்படுவது கவலையளிப்பதாக நிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். இவ்வாறு அரசு கல்லூரிகளை குறைத்து, தனியார் கல்லூரிகளையும் மிக அதிகமாக கொண்டு வந்ததே இவர்களை போன்ற ஆட்சியாளர்கள் தான்.

இப்படி கவலைப்படும் அமைச்சர் குறைந்தபட்சம் அதிககட்டணம் வாங்கியதில் பிடிபட்ட( விசயகாந்த், ஜேபியார் உள்பட) கல்லூரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துயுள்ளார் என்றால் ஒன்றும் இல்லை. இவ்வாறு உண்மை நிலையினை மறைத்துவிட்டு 'கவலையளிப்பதாக' மக்கள் காதில் பூ சுற்றுகிறார்.

Monday, January 28, 2008

நீங்க நல்லவரா, கெட்டவரா? அ.(மெரிக்க) மார்க்ஸ்

நாயகன் படத்தில் ஒரு வசனத்தை கேட்டிருப்போம், குழந்தை கமலைப் பார்த்து "நீங்க நல்லவரா? கெட்டவரா?" எனக் கேட்கும் அதற்கு பதில் சொல்ல முடியாமல் நா தழுதழுத்து துடித்து சொல்வார் கமல், "தெரியலையே"


குழந்தை ரவுடியை இனங்காண்பதில் புரிதல் இல்லாததால் கேட்ட கேள்வி அது. ஆனால் இந்த அந்தோணிசாமி மார்க்சுகளின் கேள்விகள் நமக்கு தெளிவான புரிதலை ஏற்படுத்துகிறது.


'தீராநதி ஜனவரி'யில் இதழில் அ.மார்க்ஸ் அவர்கள், கனிமொழி 123 ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து பேசியதை கடிந்து கொள்ளும் போது இறுதியில் ஒரு கேள்வியினை போடுகிறார் பின்வருமாறு "எல்லாம் சரி, இதுதான் திமுகவின் கொள்கையா?"


இதேபோல 'த சண்டே இந்தியன் இதழில்' அ.மார்க்ஸ் அவர்கள், திமுக வின் பலமும், பலவீனமும் என்ற கட்டுரையின் இறுதியில் இப்படி முடிக்கிறார்; "இன்று உலகமய சூழலில் மேலெழும் பொருளாதாரப் பிரச்சினைகள் கணக்கில் கொள்ளாமல் ஆதரிக்கும் நிலைப்பாட்டை திமுக எடுப்பது போல தோன்றுகிறது"


ஐயா அ.மார்க்ஸ் அவர்களே,


கனிமொழி வார்த்தைக்கு வார்த்தை "இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை எங்க கட்சி ஆதரிக்கிறது, எங்க தலைவர் கலைஞர் அவர்களும் ஆதரிக்கிறார்" என கூறிப்பிட்டு உள்ளார். இவ்வாறு கனிமொழி என்ற 'அருவருடி ' ஒப்புதல் வாக்குமூலமாக தந்த பின்னும் , உங்களுக்கு "எல்லாம் சரி, இதுதான் திமுகவின் கொள்கையா?" என கேள்வி வருகிறது என்றால் என்ன அர்த்தம்?. மக்களை இப்படி நீங்க நல்லவரா, கெட்டவரா என கேள்வி கேட்கும் அளவிலேயே வைத்திருக்க விரும்பும் கூட்டத்தை சேர்ந்தவர் நீங்கள் என்பது தான்.


அடுத்து "உலகமயமாக்கலை அப்படியே திமுக ஆதரிப்பது போல தோன்றுகிறது" என வினா தொடுக்கிறீர்கள், என்ன கேள்வி இது. அண்ணாவே காசு சம்பாதிக்கும் என்ற காரணத்தால தான் திக விலிருந்து வந்து திமுகவை ஆரம்பித்தார். அடுத்து கலைஞர் அதை கைப்பற்றி (திமுக முன்னணியில் இருந்த தலைவர் அல்ல கலைஞர்) இன்று தனது குடும்ப சொத்தாக மாற்றி, 5 முறை முதல்வராக இருந்து கிட்டதட்ட 80,000 கோடிகளுக்கு மேல சேர்த்துவிட்டார்.(மாறன் பிரிவுக்கு முன் மதிப்பு) உலகமயமாக்கலை தான் நாட்டோட வளர்ச்சிக்கு என காங்கிரஸ், பாஜக வரை ஆதரிப்பது போல கலைஞரும் தன் கொள்கையாக எடுத்து நடைமுறைபடுத்தி வருகிறார். இப்ப 2007 வந்து "தோன்றுகிறது" என்றால் என்ன அர்த்தம்.


என்ன வெங்காயம் தோன்றுகிறது. அப்பட்டமாக அறிவித்துவிட்டார்கள் படுத்தால் அமெரிக்காவுக்குதான் படுப்போம் என்று பிறகு இப்படி தோன்றுவது ஏகாதிபத்திய அருவருடிகளை காப்பதற்காக எழுந்ததாகவே இருக்க முடியும்.


உலகமயமாக்கலையும், இந்துமத பாசிசத்தையும் பற்றி எழுதும் நீங்கள் தான் இப்படி திமுக குறித்து சந்தேகங்களையும், காந்தி குறித்து சந்தேகங்களையும் எழுப்பி அவர்களை நியாயப்படுத்த முற்படுகிறீர்கள். எதிரியினை குறித்து குழப்பத்தினை விளைவிக்கும் இது போன்ற பிரச்சாரம் ரெம்ப காலத்திற்கு நீடிக்க முடியாது என்பதே வரலாறு தரும் படிப்பினை.

"ஏகாதிபத்தியத்திற்கு கச்சிதமாக செய்யப்பட்ட அடிமை நான்" - கனிமொழி உரைவீச்சு

123- அணுசக்தி ஒப்பந்தம் எவ்வாறு இந்தியாவிற்கு மிகவும் நன்மைபயக்கிறதென்பதை மிகவும் சிரமப்பட்டு நீண்டகால ஆராய்ச்சியில் கண்டறிந்திருக்கிறார் கனிமொழி.
..
இந்தியாவுக்கு அதிக இடம் கொடுத்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ், வாஷிங்கடன் போஸ்ட் போன்ற பத்திரிக்கைகள் தன் (அமெரிக்க) அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதையும், இதே போன்ற ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள பாகிஸ்தான் வலியுறுத்துவதையும் வைத்து இந்திலிருந்தே தெரியவில்லையா? இது எவ்வளவு அவசியமென்று என்கிறார் கனிமொழி. இதைப் போன்ற கவித்துவமான கண்டுபிடிப்புக்களால் தான் அவர் கவிஞர் என்றழைக்கப்படுகிறார் போலும்.

அம்மா! கவித்தமிழே!
.....
இந்த மானங்கெட்ட ஒபந்தத்தை எதிர்க்கும் அணுவிஞ்ஞானிகள், அரசியல், பொருளாதார நிபுணர்கள் என எவருடைய கருத்துக்களையும் உங்கள் கண்கள் படித்ததா? படித்திருந்தாலும் கண்டிப்பாய் அவை உங்கள் வாயிலிருந்து வந்திருக்காது. எங்களுக்குத் தெரியும் அடிமைகளின் வாய்கள் ஆண்டைகளின் எச்சில்களுக்காகவே மட்டும்தான் காத்திருக்குமென்று.

"சீனாவை போலவே இந்தியாவும் மின் உற்பத்திக்கு நிலக்கரியை பெரிதும் நம்பியிருக்கிறது. சீனா 2020க்குள் அணு ஆலைகள் மூலம் 40000 MW மின்சக்தி உற்பத்தி செய்ய தயாராகிவருகிறது. இந்தியாவிக்கும் 2020க்குள் 30000 MW மின்சக்தி உற்பத்தி செய்யும் எண்ண்மிருக்கிறது. ஆனால் 123 யை கையெழுத்தாகாமல் அது சாத்தியமில்லை" என்கிறார் கனிமொழி. எழுத்தின் மூலமாக மக்களின் மீது ஆதிக்கம் செய்யும் படைப்பாளியின் ஆவணம் இங்கே தீர்ப்பு சொல்கிறது.
..
சரி '123 ஒப்பந்தத்தை' பற்றி சுருக்கமாக பார்ப்போம்
..
நம் நாட்டில் கிடைக்கின்ற தோரித்துடன் ஓரளவு புளூட்டோனியத்தை சேர்த்து செறிவூட்டி அணுஆற்றலை பெற முடியும் என்பதலில் தற்போது நல்ல முன்னேற்றத்தை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த 30 ஆண்டு சிந்தனையை அமெரிக்காவிற்கு அடகு வைக்க போகிறது இந்திய அரசு.

இன்று அணுசக்தியிலிருந்து 3% மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது இதனை 7% ஆக மாற்ற அதாவது வெறும் 4% அதிகப்படுத்த (அதுவும் 2020-ல் தான்) 123 யை நிறைவேற்ற துடிக்கிறது அரசு. அமெரிக்கா போன்ற நாடுகளிலே அணுசக்தியிலிருந்து 2.5% தான் மின்சாரம் எடுக்கின்றனர். பாதுகாப்பு காரணம் காட்டி இதனை அதிகப்படுத்த அங்குள்ள மக்கள் சம்மதிக்கவில்லை. இது போல உலகம் முழுவதும் விலை போகாத அணு உலைகளை இந்தியா தலையில் கட்ட நினைக்கிறது அமெரிக்கா.
இதை தவிர அரசியல் ரீதியில் "அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையினை" அப்படியே இந்தியா ஏற்க வேண்டும்

உண்மை இவ்வாறு இருக்க, தோரியம் சார்ந்த அணுசக்தி தொழில் நூட்பத்தை உருவாக்க நீண்ட காலமாகுமென்றும் கவலையுறுகிறார் கனிமொழி. உண்மைதான் போராளிகள் நீண்டகாலமாக போராடிக்கொண்டு இருக்கின்றார்கள், அவர்களுக்கு நீண்ட காலமென்பது சலிப்பூட்டுவதாக இருக்காது. ஆனால் காலில் விழுபவர்களுக்கோ ஒவ்வொரு நொடியும் கவலையாகத்தான் இருக்கும், நமக்கு முன் எவனாவது முந்திக் கொள்வானோயென்று.

ஏற்கனவே ஒவ்வொரு இந்தியனின் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் கடனின் அளவு ஏகத்திற்கும் எகிரிக்கொண்டிருக்கும் போது 15 லட்சம் கோடி ரூபாயை இவ்வொப்பந்தத்தின் மூலம் முதலீடு செய்து அவனை ஒரேடியாக புதைக்குழிக்குள் அனுப்பும் நிகழ்ச்சிபோக்கு தான் 123 - என்பதனைத் தவிர வேறொன்றும் இல்லை.

காலனி ஆதிக்கத்தின் பழைய பாதிப்பு மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய பயங்களை மனதைவிட்டு அகற்றுவதற்கு ஒரே தாயத்து 123 ஒப்பந்தம் தான் என்கிறார் கனிமொழி, மேலும் சிலர் பொதுப்படையாக " அணுசக்தி எரிபொருளை நிறுத்தவோ, தரப்பட்டதை தன்னிச்சையாக எடுத்துக்கொள்ளவோ அமெரிக்க அதிபரால் முடியும்" என்று பேசுவதாக கூறுகிறார்.

கனிமொழி அவர்களே அது சிலர் அல்ல! ஆகப் பெரும்பான்மையினர். ஆனால் அமெரிக்காவின் எச்சிலுக்காக நக்கி பிழைக்கும் உங்களை போன்றவர்கள் தான் சிறுபான்மையினர். இந்த சிறுபான்மை துரோகிகளை இன்றைய செய்தி ஊடகங்களில் தேடமுடியாது, உங்களை போன்றவர்களை விரட்டியடிக்கும் போராட்ட காலத்தில் வெளிவரும் புரட்சிகர ஏடுகளில் தான் காண முடியும்.

இந்த வாரிசு போல இன்னொரு வாரிசான 'கார்த்திக் சிதம்பரம்' (கனிமொழியின் கருத்து அமைப்பின் பார்ட்னர்) என்பவரும் இதே போல 123 நாட்டு நலனுக்கு சிறந்தது, தோரியம் மூலம் அணுசக்தி கிடைக்க ரெம்ப காலம் ஆகும், அடிமை ஒப்பந்தத்தால் ஒரு தீமையும் இல்லை என சென்னையில் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டு இருந்ததை சொல்லியே ஆக வேண்டும்.

கலைஞருக்கும், ப.சிதம்பரத்துக்கும் வார்த்து எடுத்த மாதிரி வாரிசு அமைந்து உள்ளது. இது பன்னாட்டு நிறுவனத்திற்கு நல்லதாக இருந்தாலும் இந்திய நாட்டுக்கு நல்லதல்ல.

"15 வினாடிகளுக்கு ஒரு குழந்தை இறக்கிறது இந்தியாவில்" - ஏகாதிபத்திய அருவருடிகளின் சாதனை

59 ஆவது குடியரசு தின விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. இந்த சிறப்பு நாளில் புதிய சாதனையாக "15 வினாடிகளுக்கு ஒரு குழந்தை இறக்கிறது இந்தியாவில்" என்பது எட்டப்பட்டு உள்ளது.

Sunday, January 27, 2008

"கோடிக்கணக்கான மக்களை பசி,பட்டினிக்கு ஆக்கியது நாங்கதான்" - கிரிமினல் பில்கேட்ஸ் ஒப்புதல்

முதலாளித்துவத்தின் உயிரே சந்தையில் தான் இருக்கிறது. இன்று ஏகாதிபத்தியத்தின் தீவிர தாக்குதலில் உலகமே திணறி கொண்டு இருக்கிறது. கிட்டதட்ட 400 பன்னாட்டு கம்பெனிகளின் பிடிக்குள் உலகம் சென்று கொண்டிருக்கிறது.

ஆண்டுக்கு 19 கோடி மக்கள் பசி பட்டினியால் மாண்டு வருகிறார்கள் என்கிறது புள்ளிவிபரங்கள். இதற்கு முழுமூற்றான காரணமே பன்னாட்டு நிறுவனத்தின் லாபவெறிதான். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இன்று இந்தியாவில் ரிலையன்ஸ், வால்மார்ட், மோர் என பல கம்பெனிகள் சில்லறை வணிகத்தில் நுழைவதை பார்க்கிறோம். என்ன காரணம் என்றால், இங்கே 1000 நபர்களுக்கு கிட்டதட்ட 20 கடைகளுக்கு மேல் என்ற விகிதத்தில் கடைகள் இருக்கிறது. இதனை சுலபமாக 4,5 நிறுவனங்கள் என மாற்றி விட்டால் அதாவது அந்த 20 பேர்களை வெளியேற்றி விட்டால் அனைத்து லாபமும் ஒரே நபரிடம். பின் இவர்கள் கூடிப்பேசி பல மடங்கு விலையினை ஏற்றி அதை விட கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கலாம் என்பதால் தான்.

இது போல அனைத்து துறையிலும் நிகழ்ந்துவருகிறது. இதற்கு இந்திய உள்பட எல்லா நாடுகளிலும் அருவருடிகளை தயார்படுத்தி தனது கொளகையினை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இதில் பெரிய திருடன்களில் ஒருவரான பில்கேட்ஸ் கூறுகிறார் "வறுமை வாழும் மக்களுக்கு கூடுதல் நிதி தரவேண்டும்" 100 கோடி மக்கள் தினசரி வருமானம் 1 டாலர் க்கும் குறைவாக இருக்கிறது" என. இதற்கு காணமே இவர்களை போன்ற ஆட்கள் தான் என தெரிந்து கொண்டு தான் இப்படி கூறுகிறார்.பில்கேட்ஸ் பற்றி ரெம்ப பேர்கள் தெரியாமலே, 'உழைப்பால் உயர்ந்தவர்' என நம்பிக்கொண்டு வருகிறார். இந்தியாவில் இவர்களின் எண்ணிக்கை அதிகம்.

ஆனா பில்கேட்ஸ் வெற்றி எப்படி கட்டியமைக்கப்பட்டது என உண்மையினை ஆய்வு செய்தால், 'உலகம் முழுவதும் வளர்ந்து வரும் கணிப்பொறி நிறுவனங்களை பல வழிகளில் திட்டமிட்டு செயலிழக்க வைக்கப்பட்டது' என்பது தெரியவரும். இது போல பல தில்லுமுல்லுகளை செய்ததை உழைப்பு என நம்பவைக்கின்றனர். ஆனால் உழைப்பு என்பது "யாருக்காக" என்பதை பொறுத்து தான் அதன் மதிக்கமுடியும்.

"நேற்று ஓட்டுப்பொறுக்கி; இன்று பச்சோந்தி; நாளை அருவருடி" - ஏகாதிபத்திய கடைமையில் 'பாமக'


பாமக இன்று எந்த கூட்டணியில் (சந்தர்ப்பவாதம்) இருக்கிறது ? என கேள்விகேட்கும் அளவுக்கு மாறி மாறி கூட்டணியில் இணைந்து தனது ஓட்டுப்பொறுக்கி அரசிலை நிலைநிறுத்தி கொண்டது என்றால் அது மிகையில்லை. இன்று கூட்டணி பேரத்தில் தலைசிறந்தவராக டாக்டர் பட்டமே பெற்றுவிட்டார்கள்.

பசுமை தாயகம் என்ற அமைப்பை கைப்பற்றி தனது மருமகள் செளமியாவை அதற்கு தலைமை பொறுப்பில் அமர்த்தி 'சுற்றுசூழல் பாதிப்பு' என அது சம்பந்தமான கம்பெனிகளிடம் தனி வசூல் நடத்தி வருகிறார்.

மத்தியில் தொடர்ந்து ஆட்சிகள் மாறினாலும் தனது மந்திரிகளை தக்கவைத்து கொண்டார்.(கலைஞர் இதற்கு முன்னோடி)தனது மகன் அன்புமணியை கொள்ளைப்புறம் வழியாக ( நேராக கொண்டு வந்தால் சவுக்கால் அடியுங்கள் என ராமதாஸ் அன்றைய சபதத்தினால்) ஒரு தொகுதியில் கூட மக்களை சந்திக்காமல் "இந்திய நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர்" ஆக்கிவிட்டார். இதன் மூலம் வசூல் எவ்வளவு என மருத்துவருக்கே வெளிச்சம்.

தமிழகத்திலும், மத்தியிலும் எல்லா மக்கள் விரோதக் கொள்கைகளுக்கும் (உலக வங்கியின் ஆணைகளுக்கு) ஆதரத்து தாங்கி நிற்பவர். அதில் குறிப்பாக 123- அடினை சாசனத்திற்கு முழு ஆதரவு அளிப்பவர்.

இன்று 2011-ல் நாங்கள் ஆட்சி அமைக்குமாறு சனநாயகம் எங்களை பணிக்கிறது என சொல்கிறார். என்ன சனநாயகம் வாழ்கிறது இந்த நாட்டில் என்று விளக்க முடியமா. இல்லை உங்க கட்சியில் கூட அப்படி ஏதாவது இருந்தா சொல்லுங்க.

கோடிக்கணக்கான மக்களை கொலை செய்து வரும் இன்றைய அரசமைப்பை கொண்டு தமிழ் பேசுறேன், மது, சிகரெட் யை ஒழிப்பேன்(இவங்க அமைச்சரவை பொறுப்பில் தான் இவை இருக்கு) என கதை விட்டுட்டு கொண்டு இந்த பச்சோந்தி 2011க்கு அடி போடுகிறது.

Saturday, January 26, 2008

"மக்கள் நலனுக்கு எதிரான உண்மையான பாசிஸ்ட் நாங்க தான்"- எம்ஜிஆர் வாரிசுகளுக்குள் மோதல்

எம்ஜிஆர் வாரிசு யாரு என ஜெ, விசயகாந்த், சரத் போன்ற சினிமா கழிசடையிலிருந்து வந்தவர்களுக்குள் தீவிரமாக விவாதம் நடைபெற்றுவருகிறது. வாரிசாக கொண்டாடபடும் அளவுக்கு என்ன கிழித்தார் எம்ஜிஆர் என மக்கள் யோசிக்கும் முன் இவனுங்களாகவே 'எம்ஜிஆர் வாரிசு நாங்கள் தான்' என பீதியை கிளப்பி தாங்களும் பதவியினை சுவைக்கலாம் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பார்க்கிறார்கள். மூவரையும் பற்றி சிறிய Introduction.


ஜெ- 'தான் ஒரு பாப்பாத்தி' என அறிவித்துகொண்டு மோடியின் தீவிர ஆதரவாளர், புதிய பொருளாதார கொள்கையினை (உலக வங்கி ஆணையினை) ஏற்றுக் கொள்பவர். நடைமுறைப்படுத்தியவர். கோடிக்கணக்கான சொத்துகளை வாரி குவித்தவர். பெரியார் பிறந்த மண்ணில் திராவிட கட்சி தலைமைக்கு வந்த 'பாப்பாத்தி' என்றால் இவர் சாதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


விசயகாந்த் - 20 ஆண்டு காலமாக சினிமா கழிசடையில் ஊறி கொழுத்து திரிந்துவிட்டு திடுதிடுவென எழுந்து வந்து நான் கறுப்பு எம்ஜிஆர் என சொல்கிறார். காவி புழுதி உடல் முழுவதும். கட்சி ஆரம்பிக்கும் போது, பின்னரும் திருப்பதி போய் கும்பிட்ட திராவிட கொழுந்து. தனது கட்சி பெயரே 'தேசிய முற்போக்கு திராவிட கழகம்' என ஒன்றுக்கொன்று எதிரான மூன்று நிலைகளை தாங்கி வலம் வரும் அறிவாளி. கருப்பு பணம் பாதி, காவி மீதி என தனது அரசியலை அமைத்துக் கொண்டு நாட்டை கைப்பற்ற களமிறங்கியிருப்பவர். வரும்போதே மனைவி, மச்சான், மகன்கள் என குடும்ப சகிதமாக தொண்டு (?) செய்ய வரும் வியாபாரி.


சரத் குமார் - இவர் அரசியல் அசிங்கம் வைக்கோவின் சிஷ்யர் , தினம் ஒரு கட்சி என வலம் வருபவர். "ஜெ Betroom வரை சென்ற ஒரே ஆள் சரத்" என தற்போது இராமனை பற்றி சரத்துக்கு பாடம் எடுத்த 'சோ' அவர்களாலே பாராட்டு பெற்றவர். பின் "உயிர் உள்ள வரை திமுக தான், நான் செத்தா எனது உடல் மீது திமுக கொடிதான் போர்த்தபட வேண்டும்" என முழக்கம் இட்டு ஒரு வாரத்தில் ( வைக்கோ ஒரு நாளில் - குருவாச்சே) கட்சி மாறி அதிமுக தாவியவர். பின் அங்கும் பருப்பு வேகவில்லை என்றதும் தனது சொந்த நாடார் சாதி சங்கத்தின் மூலம் புதிய கட்சி அதுவும் 'அகில இந்திய சமுத்துவ கட்சி' என ஆரம்பித்து உள்ளவர். ராமனில் இருந்து 123 வரை ஆதரிக்க கூடிய கருப்பு ப்ளஸ் காவி தான் இவர் ஸ்டைலும்.


இந்த மூணு பேருக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது. இவர்களுக்கும் எம்ஜிஆர் க்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. ஒன்றும் இல்லை! இவர்கள் அனைவரின் செயலையும் சேர்த்து செய்தது தான் எம்ஜிஆர் சாதனை. இந்த சாதனைக்கு கணக்குபிள்ளையாக இருந்தவர் இன்னொரு வாரிசான ஆர்.எம்.விரப்பன்.

"அணுசக்தி ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை" - உச்சநீதி மன்றம்


நாட்டை அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஓட்டுமொத்தமாக அமெரிக்காவுக்கு அடிமையாக்க கூடிய ஒப்பந்தம் தான் இந்த அணுசக்தி ஒப்பந்தம்.

இதனை கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரும் வெளிப்படையாக ஆதரித்தும், எதிர்க்கிறோம் என்ற பெயரில் ( NGO ஸ்டையில்) ஆதரிக்கும் போலிகளும் என அடிமை சாசனம் நிறைவேற்றுவதற்கு இசைவு தெரிவித்துவிட்டார்கள். வேலைகளும் மும்மூரமாக நடக்கிறது. எந்த கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிக்காத நம்ம விஞ்ஞானி கோமாளி கலாம் கூட 123-க்கு முழு ஆதரவு.


"அணுசக்தி ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை, அரசியல் சாசனத்தில் அதற்கு இடமில்லை" - உச்சநீதி மன்ற அறிவிப்பு மேலே உள்ள ஏகாதிபத்திய தாசர்களில் யாருடைய பேச்சை அம்பலப்படுகிறது என்பது தான் செய்தி.


வேற யாரு, இந்த நாடாளுமன்ற பன்றிதொழுவத்தை நம்பச்சொல்லி இதன் மூலம் "மக்கள் விடுதலையினை சாதிக்க முடியும்" என புருடா விடும் போலிக் கம்யூனிஸ்டுகள் தான். ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஓட்டெடுப்பு கூட இல்லாமல் விவாதித்து நாட்டை மீட்டு விடுவோம் என்ற போலிகள் முகத்தில் இன்று அறைந்து சொல்கிறது உச்ச நீதிமன்றம்.


தா.பாண்டியன்களையும், பிரகாஷ்கரத்துகளையும் இவர்கள் தலைமையில் இருக்கும் அடிமட்ட தோழர்கள் கேட்க வேண்டிய ஒரே கேள்வி "இனி மேலும் நாடாளுமன்ற முறையினை நம்பச்சொல்லி நாம் வலம் வருவதற்கு என்ன அடிப்படை" என்பது தான்.

"அமெரிக்காவிடம் மனுகொடுத்தா சரியாகிவிடும்" - வாலிபர்கள் உலக சுற்றுபயணம்


பூமி வெப்பமாதலுக்கு அதிக அளவு காரணம் அமெரிக்காதான். கியூட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாத நாடு அமெரிக்கா. தன் நாட்டை மற்றவனுக்காக மாற்ற முடியாது என கொக்கரிக்கும் அவனிடம் மனு கொடுக்க வாலிபர்கள் உலக சுற்றுபயணம் செய்ய இருக்கிறார்கள். இதனை தொடங்கி வைப்பவர் இதே அமெரிக்காவின் ஆதரவாளர். இப்படி சென்னா தெரியாதா, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் கலைஞர் தாணுங்க.

"சட்டபூர்வமாக கடத்தினால் அதற்கு பெயர் ஏற்றுமதியா"- மக்கள் கேட்காத கேள்வி


அரிசி 84,000 டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது எனவும், கடந்த ஆண்டு 3.7 லட்சம் அரசி ஏற்றுமதி செய்ததில் அரசுக்கு 4,258 கோடி வருவாய் கிடைத்துயுள்ளதாகவும் அறிவிக்கிறது மத்திய அரசு.

ஏன்டா நாட்டில அவனவன் அரசியை ரூ 2-க்கு விற்றால்தான் வாங்க முடியும் என்ற நிலையினை ஏற்பத்திவிட்டீர்கள். நாடு முழுக்க லட்சக்கணக்கான விவசாயிகள் பசி பட்டினியால் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற உண்மையினை உங்க வாயினாலே ஒத்துக்கொண்டுவிட்டீர்கள். எல்லாதிற்கும் ஹைலெட்டாக 70 % மக்கள் தினசரி வருமானம் ரூ 20 தான் என ஆக்கிவிட்டீர்கள்.

உள்நாட்டு கோதுமை உற்பத்தியினை தரக்குறைபாடு காரணம் காட்டி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தும், அரிசிக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக 1000 ரூ கூட கொடுக்காமல் தட்டிகழித்தும் வருகிறீர்கள். இது போன்ற பல காரணங்களால் விவசாயி விவசாயம் செய்யமுடியாமல், இருக்கின்ற விவசாயத்திற்கான பாசன பகுதியும், விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.

மக்களுக்கு குறைந்த விலையில் அரசி கொடுக்க, விலை குறைவாக விவசாயிகளிடம் இருந்து அரிசியை வாங்குவதாக சொல்லிவிட்டு இப்ப என்னடானா வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வோம் என்கிறீர்கள்.

ரூ 2க்கு அரியை கொடுத்தால் தான் வாழ முடியும் என்ற நிலையினை ஏற்படுத்தியதையே சாதனையாக "அரிசி கிலோ 2ரூ" என காட்டி வருகிறது 'முன்னோடி மாநிலம்' தமிழகம். இந்த 2ரூ விலையினாலே அனைத்து ஓட்டுபொறுக்கி ஆட்சியிலும் நடைபெறும் 'அரிசி கடத்தல்' (மற்ற மாநிலங்களுக்கு) தற்போது அதிகளவில் நடைபெறுகிறது.

மற்றவர்கள் மாநிலங்களுக்குள் செய்வது அரிசி கடத்தல் என்று கூறும் நீங்கள், நீங்களே கொடியசைத்து அரிசியை அனுப்பிவத்தால் அதற்கு பெயர் 'ஏற்றுமதி' என்பீர்கள். இந்த மக்களுக்கு வாங்கும் சக்தி இல்லை என்பதால் வெளிநாட்டுக்கு அனுப்பி வருகிறோம் என்று வரவேண்டிய செய்தி 'ஏற்றுமதி' என்ற ஒரே சொல்லாக மட்டும் மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

"ஆளும் வர்க்கத்துக்கு ஒத்துதான் ஊதினோம் - ஊதுவோம்" - சிபிஎம்- யின் தொடரும் அதிரடி


ஐக்கிய முற்போக்கு கூட்டணி (கூட்டணி என்றால் சந்தர்ப்பவாதம்) ஆட்சியே கிட்டதட்ட ஓராண்டில் முடியபோகுது. பன்னாட்டு நிறுவனங்களின் கொள்கைகள் ஒவ்வொன்றாக டிக் ஆகி கொண்டே வருகிறது.

இந்த போலிகளும் கொஞ்சங்கூட கூச்சம் இல்லாமல், மக்கள் கஷ்டபடுகின்றனர் என குரல் கொடுத்துக்கொண்டே 'ஆட்சியை' முட்டுகொடுத்துவருகின்றனர். தே.ஜ கூட்டணி ஆட்சியின் கொள்கையினையே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியும் கடைபிடிக்கிறது என வெளிப்படையாகவே அறிவிக்கும் அளவு என்ன ஐ.மு கூட்டணி மதச்சார்பின்மைக்காக புடுங்கியது என தெரிவிக்க முடியுமா.

முடியாது என்பதே நிதர்சன உண்மை. உலகவங்கியின் திட்டம் டிக் ஆவதுபோல, ஆர்.எஸ்.எஸ்-யின் பார்ப்பன பாசிச கொள்கைக்கான தயாரிப்புகளும் டிக் ஆகிக்கொண்டே இருக்கிறது. அரசுக்கு வெளியிலே பார்ப்பன பாசிச கொள்கை ரீதியில் திரட்டபட்ட படை ரெடியாக காத்து இருக்கிறது, குஜராத்தில் நிகழ்த்தியதை நாடு முழுவதும் நிகழ்த்துவதற்கு.

இதனை மூடிமறைக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளை அம்பலப்படுத்தி மக்களிடம் இருந்து அப்புறப்படுத்தாமல் ஆளும் வர்க்கத்தை முறியடிக்க முடியாது என்பதே வெள்ளிடைமலை

Friday, January 25, 2008

"தமிழனை அழிக்காமல் ஓய மாட்டோம்" - கலைஞர்


தினம் ஒரு பன்னாட்டு கம்பெனி, மருத்துவ நகரங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என தமிழனுக்காக காலை 4 மணிக்கு எழுந்து வேலை செய்யும் ஒரே முதல்வர் கலைஞர் என்றால் அது மிகையில்லை. மின்சாரத்தட்டுபாட்டை ஏற்படுத்தி இன்று தனியாருக்கு அனுமதி அளித்தது இவரின் சமீபத்திய சாதனை.


இந்த சாதனைகளால் மக்கள் பெரும்பான்மையினர் வீதிக்கு வந்துவிட்டார்கள். அன்றாடம் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறி சென்னை போன்ற பெருநகரங்களில் கால்வாய் ஓரமாக, சாலை ஓரமாக கூலித் தொழிலாளர்களாக மாறி வருகின்றனர். காசு இருந்தா கல்வி என்பது கொள்கையாகவே மாற்றிவிட்டார்கள். தமிழ் படித்தவனுக்கு வேலை இல்லை. ஆங்கிலமாவது தெரியுமா என்றால் அதுவும் அரைகுறை. பல்லாயிரக்கணக்கில் இளைஞர்களை கசக்கி பிழிந்து ஒரு சிலரை வேலைக்கு பொறுக்கி எடுக்கும் அவலம். விண்ணை முட்டும் வீட்டு வாடகை ஏற்றத்தால் ஏழை - நடுத்தர மக்கள் நகரத்தை விட்டு துரத்தியடிக்கப்படுகின்றனர்.


திரும்பிய பக்கம் எல்லாம் சாமியர் வருகை பற்றி அறிவிப்புகள், வாஸ்த்து சாஸ்திர நிபுணர்கள், ராசிகல் & பெயரியல் நிபுணர்கள்.


வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகள், கல்வியினை வியாபாரமாக்கும் போஸ்டர்கள் என நாடே திக்குமுக்காடி கொண்டிருக்கிறது.


இவ்வளவினையும் செய்துவிட்டு தங்கள் படங்களை பேனர்களாக வீதிக்கு வீதி வைத்துக்கொண்டும், பழம் தின்று கொட்டை போட்டவர்க்ள் (ஜெ, கலைஞர், ராமதாஸ்) என்றால் பல தொலைக்காட்சிகள் உருவாக்கி அதன் மூலம் புகழ் பாடி கொண்டும் வலம் வருகின்றனர்.மக்களை அழித்துவிட்டு கலையினை காப்பாற்றுகிறோம் என சென்னை சங்கமம் நடத்துவது போல தமிழனை அழித்துவிட்டு தழிழை பாதுகாப்போம் என சூளுரைக்கின்றனர்.


இந்த அட்டை கத்தி வீரர்களை மக்கள் தெரிந்து கொள்ளாத வரை இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

"GH பெயருக்கு தான், மற்றபடி தனியார் நிறுவனம் தானுங்க" - இந்திய ஓட்டுப்பொறுக்கிகள் (எ) உலகவங்கி

GH என்ற அரசு பொது மருத்துவமனை 2005-ல் புதிதாக பெரிய அளவில் உலகவங்கி நிதியுடன் கட்டப்பட்டது. அப்பவே உள்ளே போக உலக வங்கி சொன்னபடி ரூ5 கட்டணமாக முன்னாள் அருவருடி ஜெயலலிதா அறிமுகப்படுத்தி பின் தேர்தல் பயம் காரணமாக அதை நீங்கியதை (உலக வங்கியின் தொடர் கொள்ளைக்கு உத்தரவாதம் அளித்துவிட்டு தானுங்க) நாம்பார்த்தோம்.

மருத்துவமனை கட்டும்போதே காசு வசூல் பண்ண ஏற்பாடு ஆயிடுச்சு என தெரியும். தெரிந்த அந்த விஷயம் நடைமுறைக்கு இப்ப வந்துவிட்டது. அறிவிச்சாச்சு... "PAY WARDS" நான்கு படுக்கை கொண்ட அறையில் தங்கி மருத்துவம் பார்க்க 10 நாள்களுக்கு ரூ 2000. இரண்டு படுக்கை கொண்ட அறையில் தங்கி மருத்துவம் பார்க்க 10 நாள்களுக்கு ரூ 3000, ஒரு படுக்கை மட்டும் கொண்ட தனி அறையில் தங்கி மருத்துவம் பார்க்க 10 நாள்களுக்கு ரூ 6000 என அறிவிச்சுட்டானுங்க. ஆரம்பிச்சுட்டானுங்க.

மக்களுக்காக தான் அனைத்தும் என தொழிற்சாலையினை, பொதுதுறையினை ஆரம்பித்து உழைப்பில் ஈடுபடுத்தி அதன் மூலம் கிடைக்கும் அனைத்தையும் மக்களுக்கே பயன்படுத்துவது தான் மக்கள் அரசு என்பது. அவ்வாறு உழைப்பில் ஈடுபடஅவர்களுக்கு கல்வி கொடுத்து, இடையில் உடல்நலக் குறைவு ஏற்படும் போது அவர்களுக்கு மருத்துவம் கொடுத்து மீண்டும் உழைப்பில் ஈடுபடுத்தும். அனைத்தும் அரசு பொறுப்பில் தான் இருக்கும். சந்தையினை மட்டுமே உயிர்மூச்சாக கொண்ட ஏகாதிபத்திய முதலாளிகள் என்ற பேய்களை நாட்டுக்குள்ளே விடாது இந்த மக்கள் அரசு. பெரும்பான்மை மக்களுக்கான அரசு என்றால் இது தான். இந்த அரசு தான் சிறுபான்மையினரான உழைக்காத கும்பலை ஒரு வழிக்கு கொண்டு வந்து இந்த மனித சமூகத்தையினையே ஒன்றிணைக்கும் ஆற்றல் கொண்டது.

ஆனால் இன்று சிறு கும்பலான பன்னாட்டு நிறுவனங்களை நலனுக்காக கோடான கோடி மக்களை அன்றாடம் வீதியிலே வீசியெறிகின்றனர் அவர்களின் அடியாட்களான ஏகாதிபத்திய தாசர்கள். மக்கள் நல அரசு என்ற போர்வையில் கூசாமல் புளுகி திரிகிறார்கள்.

இவர்கள் தான் இன்று நல்ல மருத்துவம் வேணும்னா என்றால் தனியார் மருத்துவமனைக்கு போகத்தான் வேண்டும் என்ற நிலையினை உருவாக்கிவிட்டு இன்று அரசு மருத்துவமனையிலே பணம் வசூல் பண்ணுகின்றனர். எவ்வளவு துணிச்சல் இருந்தால் இப்படி அறிவிக்க முடிகிறது என யோசிக்க தேவையில்லை. மக்களை முன்னரே அதனை ஏற்றுக்கொள்ளும் படி பழக்கிவிட்டார்கள் இந்த அருவருடிகள். எப்படி பழக்குகின்றனர் என்பதற்கு ஒரு உதாரணம்.

குடிதண்ணீரை எடுத்துக் கொள்வோம். என்னப்பா "தண்ணீரை கூட தனியார் நிறுவனம் வியாபாரம் பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க" என கேட்டுப்பாருங்க, பதில் என்ன வரும் என்றால் "அரசாங்கத்திற்கே தெரியாததப்பா, நாம என்ன செய்ய முடியும்" என்று. இந்த பதிலுக்கு அரசியல் ரீதியில் அவர்களை அடிமையாக்கிட்டார்கள் என அர்த்தம். அடுத்து "நல்ல தண்ணீர் வேணும் என்றால் பணம் செலவழிச்சுதான் ஆகணும்" என அவர்களை மாதம் ரூ 300 யை ஏற்கும் மனநிலைக்கு கொண்டு வருகிறார்கள். இது பொருளாதார ரீதியில் அவர்களை அடிமையாக்கிட்டார்கள் என அர்த்தம். கடைசியில் "உங்க வீட்டுல கேன் தண்ணீர் இல்லையா?" என கேட்கும் நிலைக்கு அதாவது பண்பாட்டு ரீதியிலே அவர்களை அடிமையாக்கிட்டார்கள்.

இப்படிதான் அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியில் ஒவ்வொரு விஷயத்திலும் அடிமைதனத்தை உருவாக்குகிறது ஆளும் வர்க்கமும், அதன் நிறுவனங்களும். இன்று மருத்துவம் என்பது சேவைக்கானது அல்ல, வணிகம் சம்பந்தப்பட்டது என பெருவாரியாக மாற்றப்பட்டு வருகிறது. செட்டிநாடு மருத்துவ நகரம் என பெரிய தொழிற்சாலை போல மருத்துவத்தை கொண்டு செல்கிறது உலகவங்கி (பன்னாட்டு நிறுவனங்களின் கட்டப்பஞ்சாய்த்துகளில் ஒன்று). இதனை திறந்து வைத்து கொண்டுயிருப்பவர் தற்போது மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகவங்கி ஆபிஸர் கலைஞர்.

அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியில் அடிமைத்தனத்தை ஸ்டாரங்காக கட்டிவிட்டு வேலை வெகு சுலபமாக தற்போது வீறுநடைபோடுகிறது. ஆனால் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கே என்ற கொள்கை முற்றுபெறுவது தவிர்க்க முடியாது. ஏனென்றால் சிலருக்கான ஜனநாயத்தை மட்டும் கொண்டு வெகுநாள் காலம் தள்ள முடியாது என்பதே வரலாற்று உண்மை.

"பணத்தை கொடு இல்லைன்னா வண்டியினை நிறுத்து" - காவல்துறையினர் (எ) அங்கிகரீக்கப்பட்ட ரவுடிகள்

சாலை இருக்குதோ, இல்லையோ ஓரமாக அங்கிகரீக்கப்பட்ட ரவுடிகள் இருக்கின்றனர். இவர்கள் வசூல் செய்வதற்கென்றே பல வழியினை ஏற்படுத்தியிருக்கிறது ஆளும் வர்க்கம். தனது அடியாட்களுக்காக இதை கூட செய்யலைனா எப்படி. அதுல புதுச சேர்த்த வழிதான் "தலைகவசம்".

பல லட்சக்கணக்கான மக்கள் இருக்கும் நகரத்தில் ஆயிரம் , இரண்டாயிரம் என பேருந்துகளை விட்டுட்டு அதல பாதி ஓட்ட உடைசல். புதுசா வாங்குற வண்டியும் டீலக்ஸ், ஏ/சி தான். எல்லாம் தனியாரின் லாபவெறிக்கு அதாவது இருசக்கர வாகன விற்பனைக்கு தான். இப்படி கடனுல வண்டியினை வாங்கி 4,000, 5,000 ரூபாய் சம்பளத்துக்கு அலைகின்றது பெரும்பான்மையான சென்னை நகர மக்கள் கூட்டம். வாடகை என்ற பெரிய சுமை, பின் அத்தியாவசிய பொருட்கள் விலை என்ற சுமை, கல்வி, மருத்துவம், என கூடுதலாக வண்டிக்கு மாத தவணை என தலையே சுற்றுகிறது மக்களுக்கு.

இதுல இவனுங்க என்னான்னா ஓரமாக நின்னுக்கிட்டு கையினை போட்டு கொள்ளையிட்டு விடுகிறார்கள். 250, 500 ரூபாய் கொடு என சொல்லும் போது ஏற்கனவே வண்டி மாத தவணையில் இருக்கு விட்டுட்டு போனா கட்டின பணம் போச்சு. கூடவே சட்டப்படி 250, 500 ரூபாய் கொடுக்க முடியாத வயிற்று பிரச்சினை. இறுதியில் கையூட்டாக 50, 100 என அவர்கள் திட்டம் சுலபமாக நிறைவேறுகிறது. சிக்னல்-களில் கேமரா இருக்கு என சொல்லியே கையூட்டு வாங்குவது தான் இதுல சிறப்பு அம்சம். கேமரா இருக்கு என்றால் சட்டபடி வாங்குவார்கள் என்று யோசிப்பது தான் யதார்த்தம். ஆனால் கேமரா இருக்கு என சொல்லி கையூட்டு என்றால் என்ன அர்த்தம், சரியாக வாங்குகின்றனரா என சோதிக்கின்றனர் மேலிடம். வெளிநாட்டு காவல்துறையினர் இதை கேட்டானா வாயினால சிரிக்க மாட்டான்.

மக்களை விட்டு தனியாக இருக்கும் இந்த அரசு உறுப்பாகிய காவல்துறை வெள்ளைக்காரனுக்காக டவுசர் போட்ட படை. மக்களின் உண்மையான சுதந்திரம் ஏற்பட்டு இருந்தால் இதனை அழித்துவிட்டு மக்கள் படையினை கட்டி இருக்க முடியும். ஆனால் ஆகஸ்ட் 15 என்ற அதிகாரமாற்றத்தை நடத்தி மக்களின் ஆட்சி என "மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் எவனும் "சட்டப்படி" என்ற ஏகாதிபத்திய மற்றும் தரகு முதலாளிகளுக்கு மட்டுமே சேவை செய்ய முடியும்" என்பதை மூடிமறைத்துவிட்டார்கள்.

Thursday, January 24, 2008

"விவசாயிகள், தொழிலாளிகள் தற்கொலை செய்துகொண்டா நான் என்ன செய்ய முடியும்" - ப.சிதம்பரம்

பங்கு சந்தை என்ற ஊதப்படுகின்ற பலூன் சில நாட்களுக்கு முன் புஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ஆன உடன் ( பின்னனியில் இருப்பவர்களும் ஊதியவர்கள்தான்) தொலைக்காட்சியில் தோன்றி ப.சிதம்பரம் அறிவிக்கின்றார் "கவலைபடாதீர்கள்...நிலைமை சரியாகிவிடும்" உடனே ஏற ஆரம்பிக்கின்றது பலூன்.
இத்தனை லட்சம் கோடி, அத்தனை லட்சம் கோடி நஷ்டம் என்கின்றார்கள். நாட்டுல அவனவன் பசி, பட்டினியில் இருக்கும் போது இவனுங்க நஷ்டம் எல்லாம் கோடியில தான்.
ஆனால் பெரிய பணக்காரனாக மாறிய அம்பானி உள்பட எவனுக்கும் சொத்து குறையமாட்டேன் என்கிறது. குறிப்பாக ரிலைன்ஸ் என்றால் லாபம் தான் என்று போட்டா போட்டி தான். பங்கு சந்தை என்ற பலூன் ஊதிய போது அது அரசின் சாதனையாகவே காட்டிய ஆளும் வர்க்கம், புஷ்ஷ்ஷான உடன் அமெரிக்காவின் மீது கையினை நீட்டி தனது உண்மை முகத்தை காட்டுகிறது.

நாட்டில விவசாயி கொத்து கொத்தாக சாகும் போது வராத அமைச்சர் ப.சிதம்பரம் திரையில் தோன்றி விளக்கம் அளிக்கின்றார். பன்னாட்டு நிறுவனத்துக்கே என்றே மன்மோகன் சிங், ப.சிதம்பரம் என கரக்டாக ஆளுங்க உருவாவது இந்தியாவின் சாபக்கேடு. அப்படி ஒரு இழிப்பு, ஒரு நயவஞ்சக பார்வை என அருவருடிகளுக்கு என்ற டிஸ்னரி செய்தது போல தோற்றம்.

இவர்கள் போன்ற நேரடியான ஆளும் வர்க்க பிரதிநிதியினை அம்பலபடுத்தும் போது போலிகளையும் திரும்ப திரும்ப சொல்லவேண்டி உள்ளது. பின்வருமாறு போலிக் கம்யூனிஸ்டுகள் யோக்கியதை பற்றி இரண்டு வரிகள் சொல்லி முடிக்கலாம்.

இவர்கள் ஆளும் மாநிலத்திலேயே இந்த மக்கள் விரோத கொள்கையினை அறிவிப்புகளோடு நடைமுறைப்படுத்தி வருகின்றனர். மத்தியில் petrol விலை ஏறும்போது, 123க்கான வேலை நடக்கும் போது எதிர்ப்பு தெரிவிப்போம், வாக்கெடுப்பு கூட வேணாம் என தாங்கி நிற்பார்கள்.

"இது வெறும் அரட்டை மரம் தான்"- ஆவுடையப்பன்

சட்டசபையில் முல்லை பெரியார் அணை நீர்தேக்கத்தை 142 அடியாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என எதிர்கட்சி கேள்வி கேட்கும் போது சில விளக்கங்களை கொடுத்துவிட்டு இறுதியில் கோர்ட்டில் வழக்கு உள்ளதால் இது குறித்து மேலும் விவாதிக்க முடியாது என சபாநாயகர் அறிவித்து விட்டார்.(அதிமுக என்றால் சில விளக்கங்கள் கூட தரப்பட மாட்டாது. தனி நபர் பாசிஸ்ட் இயக்கம் யாச்சே)

உங்க சட்டப்படி கொடுத்த தீர்ப்பை ஒரு மாநிலம் அமுல்செய்ய மறுக்கிறது என்றால் வரும் பதில் இப்படி. மக்கள் பிரதிநிதி என செல்லும் இங்கே நடப்பது வெற்று பேச்சுகள் மட்டும்தான் என சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். நீதிமன்றத்தைவிட நாடாளுமன்ற, சட்டமன்ற அமைப்புதான் உயர்ந்தது என்பது வெளியில மட்டும் சொல்லுவாங்க.

Tuesday, January 22, 2008

"முதலாளிகளை பாதுகாக்க அணுஆயுதம் தேவைதான்" - கலாம் அறிவிப்பு

அமெரிக்காவுடன் செய்து கொள்ள வேலைகள் நடந்துவரும் அடிமை சாசனமான அணு ஆயுத ஒப்பந்தத்தை நாட்டு நலனுக்கு நல்லது என அறிவித்தவர்தான் இந்த கோமாளி கலாம். இன்று அணு ஆயுதம் தேவை என்று சொல்கின்றார். ஏனுங்க, நாட்டில இருக்கின்ற பொதுத்துறை, நிறுவனங்கள் என அனைத்தும் தனியார் (தரகு) முதலாளிகளுக்கு, பன்னாட்டு முதலாளிகளுக்கும் ஏறைக்குறைய மாற்றப்பட்டு விட்டது.
.
இது இவனுக்கு சொந்தம், அது அவனுக்கு சொந்தம் என்கின்றனர், ஆனா நாடு மட்டும் இந்தியனுக்காக என்று மக்கள் யோசிக்கமாட்டானுங்க என்ற தைரியத்தில் கலாம் உள்பட ஏகாதிபத்திய அடிமைகள் அனைவரும் கருதுகின்றனர். ஆனால் அப்படி கேள்வி கேட்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

மாடுகளை கொன்றதற்கு சஸ்பெண்டு என்றால், மக்களை கொன்றதற்கு என்ன தண்டனை?

ராமேஸ்வர கோவிலில் 24 மாடுகளை பட்டினி போட்டு கொன்றவர்கள் 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். அப்படியானால் 1.5 லட்சம் விவசாயிகளை தற்கொலை செய்ய வைத்த ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

11 பேரை தண்டிக்க 5 ஆண்டுகள் என்றால் மோடி உள்பட ஆயிரக்கணக்கானவர்களை தண்டிக்க !

2002 குஜராதில் பாப்பன பாசிஸ்டுகள் கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலையில் 2500க்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் கொலை செய்யப்பட்டனர். இதில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான நபர்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 3000 பேர். இதில் இன்று சிறையில் இருப்பவர்கள் 100 -150 பேர்தான். மீதி அனைவரும் போலீஸ் மற்றும் நீதிதுறையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் காரர்களால் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

இப்போது அதில் பில்கிசு பானு என்ற கர்ப்பினி பெணை பலாத்காரம் செய்து, 8 பேர்களை கொலை செய்த பாசிஸ்டுகள் 11 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் செயல்பட்ட காவலர் சோமாபாய் கோரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த செய்திகூட பெரும்பாலான பத்திரிக்கையில் முழுமையாக இல்லாமல், எங்கோ ஒரு பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். தெகல்ஹா வெளியிட்ட வீடியோ காட்சிகளுடன் கூடிய பாப்பன பாசிஸ்டுகளின் ஒப்புதல் வாக்குமூலத்தையே முடிமறைத்த ஊடகங்கள் ஆயிற்றே!

சரி இந்திய நீதித்துறையில் 11 பேரை தண்டிக்கவே 5 ஆண்டுகள் எனில் குற்றமே சாட்டபடாமல் வெளியில் திரிந்து கொண்டு இருக்கின்றன மீதி ஆயிரக்கானக்கவர்களுக்கு....குறிப்பாக பாசிஸ்டுகளின் தலைவன் மோடிக்கு எப்ப தண்டனை கிடைக்கும்.

இதனை இந்திய நீதிமன்றங்களால் கொடுக்க முடியாது. அதற்கு தேவை மக்கள் மன்றங்கள் தான்.

Monday, January 21, 2008

"பார்ப்பன பாசிஸ்ட் தானுங்க நானு" - ஜெயலலிதா

அன்றாடம் மகராஷ்டிரம், உத்திர பிரதேசம், ஆந்திரா உள்பட நாடெங்கும் விவசாயிகள் பசிபட்டினியால் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். ஆமா, 1 லட்சம் விவசாயிகள் மேல் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று ஆளும் வர்க்கமே ஒத்துக்கொண்ட இந்திய நாட்டில் வாயில்லாத ஜீவன்களான மாடுகளை பட்டினி போட்டு சாகடித்துவிட்டது என்பது பெரிய பாவச்செயல் என கொக்கரிக்கிறது பாசிஸ்ட் பாப்பாத்தி.

"உலக வங்கியின் சரியான அடியாள் நான் தான்" - கலைஞர்

நகர விரிவாக்க திட்டம் என்ற பெயரில் கோயம்பேடு பஸ்நிலையம் நாங்கள் உருவாக்கியது என்று இன்றைக்கு சிம்டிஏ வின் ஆவணங்களிலே வெளிப்படையாக 'உலகவங்கி' அறிவித்துவிட்டது. மேலும் அத்திட்டத்தின்படி கால்வாய் ஓரமாக, கடற்கரை ஓரமாக உள்ள மக்களை வெளியேற்றுவது போன்ற பல மக்கள் விரோத திட்டங்களை வெளிப்படையாக 'நகர விரிவாக்கம்' என்ற பெயரில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோயம்பேடு பஸ்நிலையம் 1999 ல் கலைஞர் அடிக்கல் நாட்டி பணி முடிக்கும் முன் ஜெயலலிதா ஆட்சி வந்துவிட்டது. பின் ஜெயலலிதா பெயர் போட்டு பஸ் நிலையம் திறக்கப்பட்டு விட்டது. கிட்டதட்ட 5 ஆண்டுகள் பின் தற்போது கோயம்பேடு பஸ்நிலையம் திமுக காலத்தில் தான் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று கலைஞர் பெயர்பலகை வைக்கப்பட்டு உள்ளது.(அதை விட பெரியதாக)

இப்படி உலக வங்கியின் திட்டத்தை யார் நிறைவேற்றியது என்று வெளிப்படையாகவே மோதி கொள்கின்றனர் இந்த ஓட்டுக் கட்சி தலைவர்கள். சரியான உலகவங்கி அருவருடிகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தான் இன்று மக்கள் கையில் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது தெள்ளதெளிவாக தெரிகிறது. ஆனால் இந்த அதிகாரத்தை கொண்டு மக்கள் நலனுக்காக பாடுபடுவோம் என்று 60 ஆண்டுகளாக மக்கள் காதில் பூ சுற்றி அருவருடிகளும், புதிய அருவருடிகளும் மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர் என்பதே வருத்தம் அளிக்கின்றது.

  • இணைப்புகள்

  •