Friday, January 25, 2008

"பணத்தை கொடு இல்லைன்னா வண்டியினை நிறுத்து" - காவல்துறையினர் (எ) அங்கிகரீக்கப்பட்ட ரவுடிகள்

சாலை இருக்குதோ, இல்லையோ ஓரமாக அங்கிகரீக்கப்பட்ட ரவுடிகள் இருக்கின்றனர். இவர்கள் வசூல் செய்வதற்கென்றே பல வழியினை ஏற்படுத்தியிருக்கிறது ஆளும் வர்க்கம். தனது அடியாட்களுக்காக இதை கூட செய்யலைனா எப்படி. அதுல புதுச சேர்த்த வழிதான் "தலைகவசம்".

பல லட்சக்கணக்கான மக்கள் இருக்கும் நகரத்தில் ஆயிரம் , இரண்டாயிரம் என பேருந்துகளை விட்டுட்டு அதல பாதி ஓட்ட உடைசல். புதுசா வாங்குற வண்டியும் டீலக்ஸ், ஏ/சி தான். எல்லாம் தனியாரின் லாபவெறிக்கு அதாவது இருசக்கர வாகன விற்பனைக்கு தான். இப்படி கடனுல வண்டியினை வாங்கி 4,000, 5,000 ரூபாய் சம்பளத்துக்கு அலைகின்றது பெரும்பான்மையான சென்னை நகர மக்கள் கூட்டம். வாடகை என்ற பெரிய சுமை, பின் அத்தியாவசிய பொருட்கள் விலை என்ற சுமை, கல்வி, மருத்துவம், என கூடுதலாக வண்டிக்கு மாத தவணை என தலையே சுற்றுகிறது மக்களுக்கு.

இதுல இவனுங்க என்னான்னா ஓரமாக நின்னுக்கிட்டு கையினை போட்டு கொள்ளையிட்டு விடுகிறார்கள். 250, 500 ரூபாய் கொடு என சொல்லும் போது ஏற்கனவே வண்டி மாத தவணையில் இருக்கு விட்டுட்டு போனா கட்டின பணம் போச்சு. கூடவே சட்டப்படி 250, 500 ரூபாய் கொடுக்க முடியாத வயிற்று பிரச்சினை. இறுதியில் கையூட்டாக 50, 100 என அவர்கள் திட்டம் சுலபமாக நிறைவேறுகிறது. சிக்னல்-களில் கேமரா இருக்கு என சொல்லியே கையூட்டு வாங்குவது தான் இதுல சிறப்பு அம்சம். கேமரா இருக்கு என்றால் சட்டபடி வாங்குவார்கள் என்று யோசிப்பது தான் யதார்த்தம். ஆனால் கேமரா இருக்கு என சொல்லி கையூட்டு என்றால் என்ன அர்த்தம், சரியாக வாங்குகின்றனரா என சோதிக்கின்றனர் மேலிடம். வெளிநாட்டு காவல்துறையினர் இதை கேட்டானா வாயினால சிரிக்க மாட்டான்.

மக்களை விட்டு தனியாக இருக்கும் இந்த அரசு உறுப்பாகிய காவல்துறை வெள்ளைக்காரனுக்காக டவுசர் போட்ட படை. மக்களின் உண்மையான சுதந்திரம் ஏற்பட்டு இருந்தால் இதனை அழித்துவிட்டு மக்கள் படையினை கட்டி இருக்க முடியும். ஆனால் ஆகஸ்ட் 15 என்ற அதிகாரமாற்றத்தை நடத்தி மக்களின் ஆட்சி என "மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் எவனும் "சட்டப்படி" என்ற ஏகாதிபத்திய மற்றும் தரகு முதலாளிகளுக்கு மட்டுமே சேவை செய்ய முடியும்" என்பதை மூடிமறைத்துவிட்டார்கள்.

No comments:

  • இணைப்புகள்

  •