Friday, January 25, 2008

"GH பெயருக்கு தான், மற்றபடி தனியார் நிறுவனம் தானுங்க" - இந்திய ஓட்டுப்பொறுக்கிகள் (எ) உலகவங்கி

GH என்ற அரசு பொது மருத்துவமனை 2005-ல் புதிதாக பெரிய அளவில் உலகவங்கி நிதியுடன் கட்டப்பட்டது. அப்பவே உள்ளே போக உலக வங்கி சொன்னபடி ரூ5 கட்டணமாக முன்னாள் அருவருடி ஜெயலலிதா அறிமுகப்படுத்தி பின் தேர்தல் பயம் காரணமாக அதை நீங்கியதை (உலக வங்கியின் தொடர் கொள்ளைக்கு உத்தரவாதம் அளித்துவிட்டு தானுங்க) நாம்பார்த்தோம்.

மருத்துவமனை கட்டும்போதே காசு வசூல் பண்ண ஏற்பாடு ஆயிடுச்சு என தெரியும். தெரிந்த அந்த விஷயம் நடைமுறைக்கு இப்ப வந்துவிட்டது. அறிவிச்சாச்சு... "PAY WARDS" நான்கு படுக்கை கொண்ட அறையில் தங்கி மருத்துவம் பார்க்க 10 நாள்களுக்கு ரூ 2000. இரண்டு படுக்கை கொண்ட அறையில் தங்கி மருத்துவம் பார்க்க 10 நாள்களுக்கு ரூ 3000, ஒரு படுக்கை மட்டும் கொண்ட தனி அறையில் தங்கி மருத்துவம் பார்க்க 10 நாள்களுக்கு ரூ 6000 என அறிவிச்சுட்டானுங்க. ஆரம்பிச்சுட்டானுங்க.

மக்களுக்காக தான் அனைத்தும் என தொழிற்சாலையினை, பொதுதுறையினை ஆரம்பித்து உழைப்பில் ஈடுபடுத்தி அதன் மூலம் கிடைக்கும் அனைத்தையும் மக்களுக்கே பயன்படுத்துவது தான் மக்கள் அரசு என்பது. அவ்வாறு உழைப்பில் ஈடுபடஅவர்களுக்கு கல்வி கொடுத்து, இடையில் உடல்நலக் குறைவு ஏற்படும் போது அவர்களுக்கு மருத்துவம் கொடுத்து மீண்டும் உழைப்பில் ஈடுபடுத்தும். அனைத்தும் அரசு பொறுப்பில் தான் இருக்கும். சந்தையினை மட்டுமே உயிர்மூச்சாக கொண்ட ஏகாதிபத்திய முதலாளிகள் என்ற பேய்களை நாட்டுக்குள்ளே விடாது இந்த மக்கள் அரசு. பெரும்பான்மை மக்களுக்கான அரசு என்றால் இது தான். இந்த அரசு தான் சிறுபான்மையினரான உழைக்காத கும்பலை ஒரு வழிக்கு கொண்டு வந்து இந்த மனித சமூகத்தையினையே ஒன்றிணைக்கும் ஆற்றல் கொண்டது.

ஆனால் இன்று சிறு கும்பலான பன்னாட்டு நிறுவனங்களை நலனுக்காக கோடான கோடி மக்களை அன்றாடம் வீதியிலே வீசியெறிகின்றனர் அவர்களின் அடியாட்களான ஏகாதிபத்திய தாசர்கள். மக்கள் நல அரசு என்ற போர்வையில் கூசாமல் புளுகி திரிகிறார்கள்.

இவர்கள் தான் இன்று நல்ல மருத்துவம் வேணும்னா என்றால் தனியார் மருத்துவமனைக்கு போகத்தான் வேண்டும் என்ற நிலையினை உருவாக்கிவிட்டு இன்று அரசு மருத்துவமனையிலே பணம் வசூல் பண்ணுகின்றனர். எவ்வளவு துணிச்சல் இருந்தால் இப்படி அறிவிக்க முடிகிறது என யோசிக்க தேவையில்லை. மக்களை முன்னரே அதனை ஏற்றுக்கொள்ளும் படி பழக்கிவிட்டார்கள் இந்த அருவருடிகள். எப்படி பழக்குகின்றனர் என்பதற்கு ஒரு உதாரணம்.

குடிதண்ணீரை எடுத்துக் கொள்வோம். என்னப்பா "தண்ணீரை கூட தனியார் நிறுவனம் வியாபாரம் பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க" என கேட்டுப்பாருங்க, பதில் என்ன வரும் என்றால் "அரசாங்கத்திற்கே தெரியாததப்பா, நாம என்ன செய்ய முடியும்" என்று. இந்த பதிலுக்கு அரசியல் ரீதியில் அவர்களை அடிமையாக்கிட்டார்கள் என அர்த்தம். அடுத்து "நல்ல தண்ணீர் வேணும் என்றால் பணம் செலவழிச்சுதான் ஆகணும்" என அவர்களை மாதம் ரூ 300 யை ஏற்கும் மனநிலைக்கு கொண்டு வருகிறார்கள். இது பொருளாதார ரீதியில் அவர்களை அடிமையாக்கிட்டார்கள் என அர்த்தம். கடைசியில் "உங்க வீட்டுல கேன் தண்ணீர் இல்லையா?" என கேட்கும் நிலைக்கு அதாவது பண்பாட்டு ரீதியிலே அவர்களை அடிமையாக்கிட்டார்கள்.

இப்படிதான் அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியில் ஒவ்வொரு விஷயத்திலும் அடிமைதனத்தை உருவாக்குகிறது ஆளும் வர்க்கமும், அதன் நிறுவனங்களும். இன்று மருத்துவம் என்பது சேவைக்கானது அல்ல, வணிகம் சம்பந்தப்பட்டது என பெருவாரியாக மாற்றப்பட்டு வருகிறது. செட்டிநாடு மருத்துவ நகரம் என பெரிய தொழிற்சாலை போல மருத்துவத்தை கொண்டு செல்கிறது உலகவங்கி (பன்னாட்டு நிறுவனங்களின் கட்டப்பஞ்சாய்த்துகளில் ஒன்று). இதனை திறந்து வைத்து கொண்டுயிருப்பவர் தற்போது மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகவங்கி ஆபிஸர் கலைஞர்.

அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியில் அடிமைத்தனத்தை ஸ்டாரங்காக கட்டிவிட்டு வேலை வெகு சுலபமாக தற்போது வீறுநடைபோடுகிறது. ஆனால் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கே என்ற கொள்கை முற்றுபெறுவது தவிர்க்க முடியாது. ஏனென்றால் சிலருக்கான ஜனநாயத்தை மட்டும் கொண்டு வெகுநாள் காலம் தள்ள முடியாது என்பதே வரலாற்று உண்மை.

1 comment:

said...

நல்ல முயற்சி தோழர், ஒவ்வொரு நிகழ்வின் பின் இருக்க்கிற வர்க்க சார்பை கூரிய விமர்சணத்தால் வெளியே எடுத்து பார்வைக்கு வைக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், அசுரன் உருவாக்கியிருக்கும் செய்திவிமர்சண தளத்தையும் பார்த்து அதற்கும் உங்களுடைய பங்களிப்பை நல்குங்கள் தோழர்.,

தோழமையுடன்
ஸ்டாலின்

  • இணைப்புகள்

  •