Thursday, January 24, 2008

"இது வெறும் அரட்டை மரம் தான்"- ஆவுடையப்பன்

சட்டசபையில் முல்லை பெரியார் அணை நீர்தேக்கத்தை 142 அடியாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என எதிர்கட்சி கேள்வி கேட்கும் போது சில விளக்கங்களை கொடுத்துவிட்டு இறுதியில் கோர்ட்டில் வழக்கு உள்ளதால் இது குறித்து மேலும் விவாதிக்க முடியாது என சபாநாயகர் அறிவித்து விட்டார்.(அதிமுக என்றால் சில விளக்கங்கள் கூட தரப்பட மாட்டாது. தனி நபர் பாசிஸ்ட் இயக்கம் யாச்சே)

உங்க சட்டப்படி கொடுத்த தீர்ப்பை ஒரு மாநிலம் அமுல்செய்ய மறுக்கிறது என்றால் வரும் பதில் இப்படி. மக்கள் பிரதிநிதி என செல்லும் இங்கே நடப்பது வெற்று பேச்சுகள் மட்டும்தான் என சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். நீதிமன்றத்தைவிட நாடாளுமன்ற, சட்டமன்ற அமைப்புதான் உயர்ந்தது என்பது வெளியில மட்டும் சொல்லுவாங்க.

1 comment:

அசுரன் said...

இதெல்லாமே மக்களை ஏமாற்றும் தந்திரம். அத்த சொன்னா இத்த கைய காட்டுவாங்க.. இத்த சொன்னா அத்த கைய காட்டுவாங்க....

இதே நீதிமன்றங்கள் அணு ஆயுத பிரச்சினையில் நாடாளுமன்றத்தில் தலையிட முடியாது என்று ஓடிப் போயின.

இதே நாடாளுமன்றங்க/சட்டமன்றங்கள் நீதிமன்ற்த்தில் தலையிட முடியாது என்று கூறி மக்கள் பிரச்சினைகளில் கைகழுவி உள்ளன.

ஆனால் இவை இரண்டும் பன்னாட்டு தரகு கும்பலுக்கும் பார்ப்ப்னியத்திற்க்கு தேவை எனில் தலையிட்டு அமளி துமளி செய்வார்கள். நாடாளுமன்றத்தில் நீதித் துறை கட்டபஞ்சாயத்தை எதிர்த்தும், நீதித்துறையில் நாடாளுமன்ற்த்தின் கட்டபஞ்சாயத்தை எதிர்த்தும் இவர்கள் நடத்தியுள்ளா, நடத்த்திவரும் எந்த லாவனியும் மக்கள் பிரச்சினைக்காக நடந்தவையாக இல்லை என்பது நாம் சொல்லும் இந்த் உண்மைக்கு ஆதாரம்.

அசுரன்

  • இணைப்புகள்

  •